தேவைகள்

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

அதீதன்சுப்ரமனியம்


இத்தனை சுத்தமான மௌனத்தை
யார்தான் ஒத்தையில் எதிர்கொள்ளமுடியும்
இப்பொழுது தேவையாயிருப்பது
என்றோ காணாமல் போன காதலியின் முகம்
என்றோ யாருக்காகவோ அழுத கண்ணீர்
என்றோ யாரோ பயன்படுத்திய கொச்சையான வசை சொல்
என்றோ கேட்ட யாரோ ஒருவா¢ன் பாடல்
என்றோ கொடுத்த சூடான முத்தம்
என்றோ இறுகஅணைத்த தழுவல்
என்றோ அடிப்பட்ட காயத்தின் தழும்பு.
இத்தனை சுத்தமான மௌனத்தை எதிகொள்ள
தேவையாயிருப்பதெல்லாம்
என்றோ நடந்த எதோ ஒன்று .

அதீதன்சுப்ரமனியம்.

Series Navigation

அதீதன்சுப்ரமனியம்

அதீதன்சுப்ரமனியம்