தேரழுந்தூர் கம்பன் அதோ-!

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

கவியோகி வேதம்


கம்பன் வருகின்றான்-அதோ!
..கவிஞர்களின் ஊர்வலத்தில்!
நம்பியவர் அனைவருமே-சந்த
..நடையில் குடைபிடிக்க!(கம்பன்..)
..
விருத்த நடையழகன்-அதோ!
..வெண்பட்டில் மின்னுகின்றான்!
வருத்தம் போக்கிடவே-பக்தி-நம்
..மனத்தில் தைத்திடவே..(கம்பன்..)
..
புதுநூலே வெற்றிலையாம்-அவனுக்குப்
..புதுஉவமை களிப்பாக்காம்!
சதிராடும் புதுத்தலைப்பே-அவன்பூசும்
..சந்தன ஜவ்வாதாம்!..(கம்பன்)
..
அதனாலே பழம்உவமை-கவிஞர்காள்!
..அடியோடு மறந்திடுங்கள்!
புதுப்புதிதாய்ச் சிந்தனைகள்-வேய்ந்த
…பொன்னாடை போர்த்திடுங்கள்!(கம்பன்..)
..
ஆரத்தி எடுத்திடுங்கள்-அவனுக்கு
..அழகழகுக் கற்பனையால்!
சீர்செனத்தி கொடுத்திடுங்கள்!-அவனுக்குச்
..சீர்திருத்தக் கவிதைகளால்!(கம்பன்..)
..
தூங்கிய கும்பகர்ணனையே-(அவன்),சொல்லால்
..தூக்கி நிறுத்தலையா ?
பாங்கிக் கூனியையும்-திருப்புமுனைப்
..பாத்திரமாய்ப் போற்றலையா ? (கம்பன்..)
..
தடியரக்கன் ராவணனை-கவிதைத்
..தவிசில்அவன் அமர்த்தலையா ?
அடியவன் அனுமனுக்கே-மெய்சிலிர்க்கும்
.அதிகாரம் கொடுக்கலையா ?..(கம்பன்)
..
நகைச்சுவைக்குச் சூர்ப்பநகையைச்-சிறந்த
..நடிகையாய்ச் சேர்க்கலையா ?
புகையென்றெழும் சினத்துக்கே- iஇலக்குவனைப்
..பொருத்தமாய்ப் படைக்கலையா ?
..
நரசிம்மம் கதைசேர்த்தே-காவ்யநகையில்(ஓர்)
..நகாசுவேலை செய்யலையா ?
வரகவி வால்மீகியை-அங்கங்கே
..வக்கணையாய் மீறலையா ?
..
எந்தவரி நெய்தாலும்-புதுச்சரிகை
.. iஇழைத்துநம்மை மயக்கலையா ?
வந்தகவிக் கொம்பன்களைத்-தன்சொல்லால்
..வள்ளிசாய் விழுங்கிவிட்ட..(அந்தக்)
கம்பன் வருகின்றான்-அதோ!
..கவிஞர்தம் ஊர்வலத்தில்!
நம்பியவர் அனைவருமே-சந்த
..நடையில் குடைபிடிக்க..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^(கவியோகி வேதம்)21-09-03-
sakthia@eth.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்