தேனீ – மொழியும் பணியும்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

Dr.இரா.சீனிவாசன்,Ph.D


தைவான்

தேனீக்களின் மொழி நடனங்கள் (Bee dance) ஆகும். அவை இரண்டு வகைப்படும். இதைக் கண்டுபிிடித்ததற்காக கார்ல் வோன் ஃபிரிஸ்ச் (Karl von Frisch) என்பவர் 1973 ஆம் ஆண்டு நோபல்பரிிசு வாங்கினார்.

முதல்வகை நடனம் வட்டவடிவ நடனம் (Round dance) ஆகும். இதில் முதன்முதலில் வயல்வெளிக்குச் சென்ிறு மகரந்தம் மற்றும் பூந்தேனைக் கண்டுபிிடிக்ிகின்ிற பணித்தேனீ உணவுப்பொருளின் மாதிரியை வாயிில் எடுத்துக்கொண்டுி அடைக்குத் திரும்பிவரும். அடைக்கு முன்னால் நின்ிறு கொண்டு வட்டவடிவில் நடனம் ஆடும். அதாவது வட்டவடிவில் சுற்றி சுற்றி வரும். இதில் உணவு இருக்கும் தொலைவையோ திசையையோ சக பணித்தேனீயால் கண்டுபிடிக்க இயலாது. முதல் தேனீயைப் பின்தொடர்ந்து சென்ிறு உணவுப்பொருள் இருக்கும் இடத்தைக் கண்டுபிிடிக்கும். ஆனால் உணவுப்பொருள் இருக்கும் இடம் அடைக்கு வெகு அருகில் (100 மீட்டருக்குள்) இருந்தால் மட்டுமே வட்டவடிவ நடனம் ஆடும்.

உணவுப்பொருள் இருக்கும் இடம் வெகு தொலைவில் (100 மீட்டருக்கு மேல்) இருந்தால் முதலில் மகரந்தம் மற்றும் பூந்தேனைக் கண்டுபிிடிக்ிகின்ிற பணித்தேனீ எட்டு வடிவ நடனம் (Wagtail dance) ஆடும். இதில் உணவு இருக்கும் தொலைவு மற்றும் திசையை சக பணித்தேனீயால் கண்டுபிடிக்க இயலும். இதில் எட்டின் மையப்பகுதியில் ஆரம்பித்து ஒரு எட்டு சுற்றை முடிக்கும். அப்போது அதன் அடிவயிற்றையும் இடவலமாக ஆட்டிக்கொண்டே வரும்.

எட்டு வடிவ நடனம்

ஒரு எட்டு சுற்றில் எத்தனை முறை அடிவயிற்றை ஆட்டுகிறது என்பதைப் பொறுத்தும், ஒரு எட்டு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் பொறுத்தும் உணவு இருக்கும் தொலைவை சக பணித்தேனீ கணக்கிட்டுக்கொள்ளும். உணவு இருக்கும் தொலைவு கூடக்கூட அடிவயிறு ஆடும் எண்ணிக்கை குறையும். உதாரணமாக, உணவு இருக்கும் தொலைவு 100மீ எனும்போது ஒரு எட்டு சுற்றை 15 விநாடிகளில் 10 அடிவயிற்று ஆட்டங்ிகளில் முடிக்ிகுமேயானால், உணவு இருக்கும் தொலைவு 3கிமீ எனும்போது ஒரு எட்டு சுற்றை 15 விநாடிகளில் 3 அடிவயிற்று ஆட்டங்களிலேயே முடிக்ிகும். எட்டு வடிவ நடனத்தை ஆரம்பிக்கும்ிபோது சூரியனை நோக்கியவாறு மேல்நோக்ிகி ஆரம்பிக்குமானால், உணவு இருக்கும் திசை சூரியன் இருக்கும் திசையிலேயே இருக்கிறது என்று பொருள். அதுவும் மேல்நோக்கிய பாதை சூரியனுக்கு வலதுபுறமாக 45 பாகை சாய்வாக இருக்குமானால், உணவு இருக்கும் திசை சூரியனிலிருந்து 45 பாகை சாய்வாக இருக்கிறது என்று பொருள். அதேபோல எட்டு வடிவ நடனத்தை ஆரம்பிக்கும்ிபோது சூரியனுக்கு எதிர் திசையிலிருந்து ஆரம்பிக்குமானால், உணவு சூரியனுக்கு எதிர் திசையில் இருக்கிறது என்று பொருள்.

அது சரி, மகரந்தம் மற்றும் பூந்தேனைக் கண்டுபிிடித்தவுடன் அதை எப்படி அடைக்கு எடுத்துக்கொண்டுி வரும் தொுயுமா ? அதைப்பற்றி தொுந்ிது கொள்ள வேண்டுமானால், தேனீக்களின் கால்களில் உள்ள அமைப்புகளைத் தொுந்ிது கொள்ள வேண்டும்.

தேனீக்கு மொத்தம் முன்னங்கால் (Forelegs), நடுக்ிகால் (Middle legs), பின்னங்ிகால் (Hindlegs) என ஆறு கால்கள் இருக்கும். ஒவ்வொரு காலிிலும் 5 கணுக்கள் இருக்கும். பணித்தேனீயின் முன்னங்ிகாலின் 4 ஆவது கணுவின் முடிவில் antenna cleaner எனப்படும் உணர்கொம்புகளை சுத்தப்படுத்தும் தூரிகை இருக்கும். நடுக்காலின் 4 ஆவது கணுவின் முடிவில் spur எனப்படும் மகரந்தத்தை உதிர்க்கும் முட்கள் இருக்கும். இவைதான் மலர்களிலிருந்து மகரந்தத்தை உதிர்க்கும். இவ்வாறு

உதிர்க்கப்படும் மகரந்தம் பணித்தேனீயின் உடல் முழுவதும் ஒட்டிக்கொள்ளும். அவற்றை சேகரிக்க நடு மற்றும் பின்னங்ிகால்களில் Pollen brush எனப்படும் மகரந்தத்தைச் சேகரிக்ிகும் மகரந்தத் தூரிகை இருக்கும். மகரந்தத் தூரிகை எனப்படுவது 4 ஆவது கணுவில்ி வரிிசையாக உள்ள முடிநீட்சிகள் ஆகும்ி. இவ்வாறு சேகரிக்கப்பட்ட மகரந்தத்தை, பின்னங்ிகாலின் 4 ஆவது கணுவின் முடிவில் உள்ள Pollen comb எனப்படும் மகரந்தச் சீப்புகள் ஒன்றாகத் திரட்டும். இந்த மகரந்த உருண்டைகள் பின்னர் பின்னங்ிகால்களில் உள்ள Pollen basket எனப்படும் மகரந்தக்கூடைக்கு மாற்றம் செய்யப்படும். மகரந்தக்கூடை குவிந்த முடிக்கற்றைகள் ஆகும்ி. இந்த மகரந்த உருண்டைகள் கீழே விழாதவாறு மிக அடர்த்தியாக Pollen press மூலம் நன்கு Pack செய்யப்படுகின்றன.

இறுதியாக, மலர்களிலிருந்து பூந்தேனைக் குடிக்கும். ஆனால் அவை செரித்துவிடாவண்ணம் இரைப்பையில் உள்ள சிறுசிறு தேன் பைகளில் சேர்த்து வைக்கும். ஏனெனில் பூந்தேன்தான் தேன் உற்பத்தியின் மூலதனமே! பின்னர் ஜம்மென்று வயல்வெளிலிருந்து அடைக்குத் திரும்பிவரும்.

கால்களில் நன்கு Pack செய்யப்பட்ட மகரந்த உருண்டைகள்

அது சரி, மகரந்தம் மற்றும் பூந்தேனை எடுத்துக்கொண்டு அடைக்குத் திரும்பிவரும் பணித்தேனீக்கள் எளிதில் அடைக்குள் புகமுடியுமா என்றால், இல்லை. மிகுந்த பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறஅிக உள்ளே புகமுடியும்.

அது…. அடுத்த வாரம்!!

Series Navigation