தென் அமெரிக்காவின் வேலையில்லாத்திண்டாட்டம் உச்சத்துக்குச் செல்கிறது

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue


தென் அமெரிக்க நாடுகளில் மொத்தம் 17 மில்லியன் மக்கள் வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதனால், சமூக நெருக்கடி தோன்றலாம் என்று இண்டர்நேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் பிராந்திய இயக்குனரான அகஸ்டின் முனோஸ் அவர்கள், ‘1990களில் நடந்த இரு பெரும் சாதனைகளை பின்னோக்கித் தள்ளிவிடலாம் என்று கருதுகிறோம். அதாவது தென்னமெரிக்காவில் தோன்றிய ஜனநாயக அமைப்புக்கள், இரண்டாவது உலகமயமாதலில் பங்கெடுப்பு ‘

அதுவும் வேலை செய்யும் தொழிலாளர்களில் மூன்றில் ஒருவருக்கே ஓரளவுக்குச் சமூகப்பாதுக்காப்பு திட்டம் இருக்கிறது, அதிலும் நான்கில் மூன்று வேலைகள் வரைமுறைக்கு வராத, கூலி வேலைகள். வறுமை பரந்த அளவில் இருக்கிறது. சமூகப்பாதுகாப்பு இல்லவே இல்லை.

‘இருப்பதே சில வேலைகள்தான். அதுவும் இருக்கும் வேலைகளுக்கும் கூலி மிக மிகக்குறைவு ‘ என்று ஐ.எல்.ஓவின் இயக்குனர் ரிகார்டோ இன்ஃபாண்டே தெரிவிக்கிறார்.

‘பொதுவான பொருளாதார சீரழிவும், பொருளாதார தேக்கமும் பல தென்னமெரிக்க நாடுகளில் வேலை வாய்ப்பை சீரழித்துவிட்டன, ‘ என்று ஐ.எல்.ஓ கூறுகிறது.

சென்ற வருடம் 8.1 சதவீதம் வேலைவாய்ப்பின்மையிலிருந்து இந்த வருடம் முதல் 9 மாதங்களில் 9.2ஆக உயர்ந்திருக்கிறது. குறைந்த பட்ச சம்பளம் 2001லிருந்து 3 மடங்கு கீழே இறங்கிவிட்டது.

சென்ற வருடம் தென்னமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 0.5 சதவீதம் தான். இந்த வருடம் இந்தப்பகுதியின் பொருளாதாரம் 0.8 சதவீதம் சுருங்கும் என்று ஐ.எல்.ஓ தெரிவிக்கிறது. (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: பொருளாதார வளர்ச்சி என்ற GDP வளர்ச்சி இந்தியாவில் 6 சதவீதம், சீனாவில் 8 சதவீதம். அதிக வேகத்தில் வளர்ந்தால் அதிக வேலைகளும் உற்பத்தியாகும், வளர்ச்சி குறைந்தால் வேலை வாய்ப்புகள் குறையும்)

‘இதன் விளைவு, வாங்குபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். வாங்குபவர் இல்லாததால், உற்பத்தியும் குறையும். உற்பத்தி குறைக்க வேண்டியதால் வேலை வாய்ப்புகள் குறையும் ‘ என்று தெரிவித்தார்.

2002 முழுமைக்கும் வேலை வாய்ப்பின்மை சுமார் 9.3 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எல்.ஓ மதிப்பிடுகிறது.

ஐ.எல்.ஓ இந்த பகுதிக்கு 3 சதவீத பொருளாதார வளர்ச்சி வரும் என்று எதிர்பார்க்கிறது, வந்தால், வேலைவாய்ப்பின்மை 8.6 சதவீதமாக அடுத்த வருடம் குறையும்.

‘இது நடக்கவேண்டுமெனில், இந்த பகுதிக்கு வெளியே ஏதேனும் அதிர்ச்சிகள் நடக்கக்கூடாது ‘ என்று முனோஸ் தெரிவிக்கிறார்.

‘அமெரிக்காவின் (U.S.A) பொருளாதாரம் 4 சதவீதமாக வளர்ந்தால், அர்ஜைண்டினாவின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் ‘ என்று கூறுகிறார்.

இந்த பகுதியிலேயே மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட நாடு அர்ஜைண்டைனா. இதில் இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இதன் வேலைவாய்ப்பின்மை 21.5 சதவீதத்தைத் தொட்டுவிட்டது. சென்ற வருடம் இதன் வேலைவாய்ப்பின்மை 16.4 சதவீதமாகத்தான் இருந்தது.

வெளிநாட்டில் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்கத் திணறிக்கொண்டிருக்கிறது இந்நாடு. இந்த வருடம் இதன் பணம் விலைகுறைப்புச் செய்யப்பட்டது. இதில் பல கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள்.

வெனிசூவெலாவில் பெட்ரோல் எண்ணெய் தொழிற்சாலைகளில் நடக்கும் ஸ்ட்ரைக் காரணமாக, வேலைவாய்ப்பின்மை சுமார் 15.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

பிரேசிலில் வேலைவாய்ப்பின்மை 7.3 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது.

மெக்ஸிகோ, உருகுவாய், பெரு, கோஸ்டா ரீகா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. ஆனால் ஈகுவடார், கொலம்பியா, பனாமா, எல் சால்வடார் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பின்மை குறைந்திருக்கிறது. வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

http://news.bbc.co.uk/2/hi/business/2561107.stm

Series Navigation

செய்தி

செய்தி