துயரம் ஒரு வரைபடம்

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

எஸ். வேலுமணி


போர் மற்றும் பேரழிவுகள் மனிதர்களுக்கு ஏற்படுத்திய துயரங்களை புகைப் படங்கள் வழியாகக் காணும் போது மனம் பதை பதைக்கிறது. அந்த வகையில் காணக் கிடைத்த சில புகைப் படங்கள் மனதை விட்டு அகலாதவைகள்.
வியத்நாமிய போரின் பின்புலத்தில் ஆடைகளைத் துறந்து அழுது கொண்டு ஓடும் சிறுமியின் புகைப்படம், போபால் விஷ வாயுக் கசிவின் போது உயிரிழந்த சிறு குழந்தையின் தலைப் பகுதி மட்டும் வெளியில் தெரிய உடல் பகுதி மண்ணுள் புதைந்த புகைப்படம், சுனாமி ஆழிப் பேரலையின் போது உயிரிழந்தவர்களின் காணக் கிடைத்த புகைப் படங்கள், அண்மையில் இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அவலங்கள் என தொடரும். ராபர்ட் நிகல்ஸ்பர்க் எனும் டைம் பத்திரிகையின் புகைபடக்காரர் 1989ல் எடுத்த புகைபபடமும் ஒன்று. இப் புகைப் படம், Island of Blood எனும் அனிதா ப்ரதாப் எழுதிய புத்தகத்தின் அட்டைப் படமாக 2001 ல் வெளியிடப் பட்டது. அந்தப் புகைப் படத்தைப் பார்த்து நான் வரைந்ததை பார்வைக்காக இணைத்துள்ளேன். இலங்கையில் Lunuganwehera எனுமிடத்தில் JVP, தன் கணவரைக் கைது செய்த போது அவருடைய மனைவி வெளிப்படுத்திய துயரைக் காணலாம்

Series Navigation

எஸ் வேலுமணி

எஸ் வேலுமணி