தீ, திருடன், சிறுத்தை

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

பசுபதி


பஞ்சென்பான் ஆலாய்ப்ப றந்தான்,
பரவசமாய்ப் பாவைபக்கம் வந்தான் !
. . . மஞ்சத்தில் ராசாத்-தீ !
. . . வாட்டியது காமத்-தீ !
வஞ்சியுடல் தொட்டபஞ்சு வெந்தான் !

*****
கன்னமிட்டான் காரிருளில் நம்பி
தந்திரமாய் ஜன்னல்கம்பி நெம்பி !
. . . குடியிருந்தவன் போலீசு !
. . . தடியெடுத்தவன் ‘விளாசு ‘ !
இiன்றுநம்பி எண்ணுகிறான் கம்பி !

*****
சிரித்தபடி செல்கின்றாள் வீரி
சிறுத்தையதன் முதுகில்ச வாரி !
. . . திரும்பிவந்தனர் சேரி ,
. . . சிறுத்தைவயிற்றில் நாரி ;
விரிந்தபுலி முகத்தில்நகை மாரி !
*****
(மூலம்: ஆங்கில லிமெரிக்; நன்றி: எஸ்.பொன்னுத்துரை)
pas@comm.utoronto.ca

Series Navigation