தீவு

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

அருண்பிரசாத்


வசீகரிக்கும் அழகுடன்
வரவேற்கிறது
பூஜ்ஜியங்கள் நிறைந்த தீவு.

இதுவரை எவரும் மீளாத
திரும்ப இயலாத
தீவின் ஒருவழிப்பாதைகள்.

முடிவற்ற பாதைகளில்
தொடர்கின்றன புதிய பயணங்கள்
தொலைகின்ற தடங்களின் வழியில்.

everminnal@yahoo.com

Series Navigation

அருண்பிரசாத்

அருண்பிரசாத்