This entry is in the series 20090108_Issue

ரஜித்


தீதும் நன்றும் பிறர்தர வாரா
பதித்துவிடு

பேச்சுக்களில் நச்சு
சலித்துவிடு

கழிவுகளும் மழையாகும்
கவலைவிடு

எல்லாநாளும் வெயிலல்ல
சலிப்புவிடு

குறைகாணல் உலகம்
சலனம்விடு

புழுவாழ்வும் புனிதம்
வாழ்ந்துவிடு

மண்ணுக்கடியில்தான் பொன்
தோண்டிவிடு

கதைவசனஇயக்கம் கடவுள்
நடித்துவிடு

கணணீரால் கழுவும் நட்புக்கள்
தொழுதுவிடு

ஆடையாகக் குடும்பம்
உடுத்திவிடு

விளக்காகட்டும் பொறிகள்
எண்ணெயாகட்டும் இவைகள்
தீக்குச்சியாகட்டும் புத்தாண்டு

இருள்கள் கிடக்கட்டும் வெளியே
ஒளிகளைக் கூட்டு உள்ளே


Series Navigation