தீக்களம்
Published August 26, 2005 • By
கவிநயா
கவிநயா

சின்னச் சூரியர்களாய் ஜொலிக்கும் நெருப்புக் கங்குகள்
பாதையெங்கும் கம்பளம் விரித்திருக்கும் சிகப்புப் பூக்கள்
முத்தமிடக் காத்திருக்கும் தீயின் நாக்குகள்
உறுத்து வழி பார்த்திருக்கும் அக்கினி விழிச் சுடர்கள்
இறங்காமல் அக்கரை சேர்தல் அசாத்தியம்
கால்கள் புதைய இரணப்பட்டு
இரத்தம் கசிய மரணப்படும் தருவாயில் பலர்
கருகிச் செத்தாலும் சாவோம் – ஆயின்
மருகிச் சாகோம் என்ற வைராக்கியத்துடன்…
நம்பிக்கையின் ஒளியில், உறுதியின் உரத்தில்
ஒளிரும் கண்களுடன்…
கோடிச் சூரியர்களைக் கோடிச் சந்திரர்களாய்க்
குளிர வைக்கும் புன்னகையுடன்…
காணக் காண வளரும் தைரியத்துடன்
இதோ… நானும்…
—
meenavr@hotmail.com