தில்லைச் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் ஏறிய‌து த‌மிழ்! …மார்ச் 2 அன்று!

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

கிரிஜா ம‌ணாள‌ன்


சித‌ம்ப‌ர‌ம் ஆல‌ய‌ச் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் ப‌க்த‌ர்க‌ள் அனைவ‌ரும் தேவார‌ம் பாட‌லாம் என்று பிப்ர‌வ‌ரி 29 ஆம் தேதிய‌ன்று த‌மிழ் நாடு அர‌சு ஆணை பிற‌ப்பித்தும் அந்த‌ அர‌சாணையை ம‌திக்க‌வில்லை சித‌ம்ப‌ரத் திலுள்ள‌ தீட்சித‌க் கும்ப‌ல்! ஓதுவார் ஆறுமுக ‌சாமி சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் ஏறி பாட‌த்துவங் கிய‌தும், தீட்சித‌க் கும்ப‌ல் க‌ருவ‌றையை மூடி. முல‌வ‌ருக்குக் குறுக்கே நின்று ம‌றைத்துக் கொண்டு நின்றார்க‌ள். ஓதுவார் ஆறுமுக‌சாமியையும், அவ‌ருக்குப் பாதுகாப்பாக‌ வ‌ந்த‌ காவ‌ல்துறை அதிகாரிக‌ளையும் தாக்கினார்க‌ள்.

ஆயிர‌மாயிர‌ம் ஆண்டுக‌ளாய் இந்த‌ ம‌ண்ணைப் பிடித்து ஆட்டிவ‌ரும் சாதிப் பேயான‌து ம‌லையேற‌ ம‌றுத்து, அந்த திருச் சிற்ற‌ம்ப‌ல‌ ஆல‌ய‌த்தினுள் ஊழிக் கூத்து ஆடிய‌தை அந்த‌ கூத்த‌ர‌ச‌ர் ந‌ட‌ராச‌ரும் க‌ண்டார், நாட்டு ம‌க்க‌ளும் க‌ண்ட‌ன‌ர்! தீட்சித‌க் கும்ப‌லின் திமிரைய‌ட‌க்கி அன்றுதான் அம்ப‌ல‌த்தில் ஏறிய‌து த‌மிழ்!
தேவார‌ம் பாடிய‌த‌ற்காக‌ 8 ஆண்டு க‌ளுக்கு முன்ன‌ரே தீட்சித‌க் கும்ப‌லால்
தாக்கப்ப‌ட்ட‌ ஓதுவார் ஆறுமுக‌ச‌மி அவ‌ர்க‌ள்
இப்போது த‌ன் 79 வ‌ய‌திலும், த‌ன்னுட‌லின் த‌ள்ளாமையையும் ம‌ற‌ந்து, த‌மிழை மேடை யேற்றும் முய‌ற்சியில் வென்றுள்ளார்! அவ‌ர‌து முய‌ற்சியை தேவைய‌ற்ற‌ போராட்ட‌ம் என்று விம‌ரிசிக்கும் இந்து முன்ன‌ணி அமைப்புக‌ள் இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தின் மூல‌ம் தோல்வியைத்தான் த‌ழுவியுள்ள‌ன. த‌மிழைக் காக்க முய‌ல்ப‌வர் க‌ளுக்கு த‌ன‌து ஒத்துழைப்பையும், பாதுகாப் பையும் அளிக்கும் த‌மிழக‌ அர‌சுக்கு உல‌கின் ஒவ்வொரு மூலையிலுமுள்ள த‌மிழ் ம‌க்க‌ள் ந‌ன்றி கூற‌வேண்டும்!

கிரிஜா ம‌ணாள‌ன், திருச்சிராப்ப‌ள்ளி.

Series Navigation