திறப்பதற்கு மறுக்கட்டுமே !…

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

அனாமிகா பிரித்திமா


பிற்பகல் இரண்டு மணி…
முருங்கை குழம்பு…
வெண்டை பொரியல்…
நெய் மீன் வறுவல்…

பரிமாற தயாராக நான்…
அழைப்புமணி ஒலித்தது…
சாவியுடன் ஓடினேன்…
என்னவர் பசியுடன்…
ஆவலாய் …

கதவு திறக்க மறுக்கிறது…
நல்ல வேளை…
அவரிடம் மாற்றுச்சாவி உண்டு…
அதுவும் கை கொடுக்கவில்லையே?…

பூட்டை திறப்பவனை அழைத்தால்…
வர இரண்டு மணி நேரம் ஆகும்…
மீண்டும் வேலைக்குச்செல்ல வேண்டுமே?…

உள்ளே நான்…
வெளியே என்னவர்…
நான் கதவின் வழி ஊட்ட…
என் குழந்தை சாப்பிட்டது …

அடுத்த வீட்டு மலாய் பாட்டி…
கேலியாய்…
“கணவர் மேல் இத்தனை பாசமோ” ?…

என் மனதில் சின்ன ஆசை …
தினமும் கதவு …
திறப்பதற்கு …
மறுக்கட்டுமே !…


-anamikapritima@yahoo.com
http://anamikapritima.blogspot.com/
http://anamikapritima.weebly.com

Series Navigation