திரு நாகூர் ரூமி என்கின்ற பேராசிரியர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி அவர்களுக்கு

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

கால்கரி சிவா



அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

இந்த வார திண்ணையில் நாகூர் ரூமி என்ற பேராசிரியர் எஸ்.ஏ. முகமது ரஃபி அவர்கள் http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905126&format=html இந்த கடிதத்தை திரு நேசகுமார் என்பவருக்கு திண்ணை வாயிலாக அனுப்பியிருந்தார். இதில் அவர்கள் இருவரும் ஒண்டிக்கு ஒண்டி மோத போகிறார்களோ என்ற கவலை எனக்கில்லை. ஆனால் அந்த கடிதத்தில் //Islam is the fastest growing religion in USA என்று ஹிலாரி கிளிண்டன் ஏன் சொன்னார்? மனிதாபிமானமற்ற சிலர் செய்த வன்முறையால் இரட்டைக் கோபுரங்கள் தரைமட்டமாக்கப்பட்ட மண்ணில் அது எப்படி சாத்தியமாயிற்று? அதையும் பார்க்கலாம். உங்கள் குற்றச்சாட்டுகளிள் உண்மை இருக்கிறதா என்றும் திறந்த மனதுடன் விவாதிக்கலாம்// என்று எழுதியிருந்தார். இது என் கவனத்தை ஈர்த்தது அதனால் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்த வாக்கியத்தைப் பார்த்ததும் தங்களுடைய் திண்ணைபேச்சில் திரு வஹாபி என்பவருக்கு இதே வாக்கியத்திற்கு தாங்கள் ”அமெரிக்காவில் மிக வேகமாக வளர்கிற மதம் இஸ்லாம் என்ற புள்ளி விவரம் தவறு என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் கூட அது இஸ்லாமின் தகுதியைக் காட்டிலும், அமெரிக்காவின் பல்கலாசாரப் பண்பிற்கு ஒரு பாராட்டாகத் தான் அமையுமே தவிர வேறில்லை” பதில் சொல்லியிருந்தீர்கள் இங்கே http://www.thinnai.com/?module=displaystory&story_id=20803272&format=print. அது என் நினைவிற்கு வருகிறது.

பேராசியர் ரஃபி, அரேபியாவில் என் முஸ்லிம் நண்பர்கள், ஊடகங்கள், ஹிலரி கிளிண்டன் போன்ற அரசியல் வாதிகள் எல்லாரும் அமெரிக்காவில் வேகமாக வளரும் மதம் இஸ்லாம் என்ற கூறியதை பார்த்தால் அது உண்மையாக இருக்குமா என பட்டது, சரி நாமும் இணையத்தில் தேடலாமே என தேடினேன். இதற்காக நான் மொத்தமாக செலவழித்த நேரம் பத்து நிமிடங்கள் தாம். இணையம் என்ன சொல்கிறது என்று ஒவ்வான்றாக பார்ப்போம்.

ஜனநாயக அமைப்பில் அரசியல்வாதிகள் அவ்வபோது இந்த மாதிரி சில அறிக்கைகளை விடுவார்கள். அதனால் அவர்களுக்கு வாக்கு கிடைக்கும். 1996ல் ஹிலரி கிளிண்டன் லாஸ் ஏஞ்லஸ் டைமிற்கு பேட்டி அளிக்கும் போது அதை சொன்னார் என்று விக்கிபிடீயா இங்கே சொல்கிறது http://en.wikipedia.org/wiki/Political_positions_of_Hillary_Rodham_Clinton. ஆனால் பேராசிரியர் ரஃபி அவர்கள் ஹிலரி கிளிண்டன் 9/11/2001க்கு அப்புறம் சொன்னது போல் சொல்லியிருக்கிறார். இப்படி எங்கோ சில வாக்கியங்களை பிடித்து அதை மீண்டும் மீண்டும் சொல்லி அது உண்மை போல் ஆக்கிவிடுவார்கள். இதே போல் மீண்டும் மீண்டும் சொல்ல பட்ட பொய் 9/11 நடத்தியது இஸ்ரேல் என்று. அரேபியாவில் பெரும்பான்மையோர் இன்னும் அது உண்மை என நம்புகிறார்கள்.

இந்த தளம் கொடுத்த இணைப்பு http://en.wikipedia.org/wiki/Fastest_Growing_Religion. இதில் என்ன சொல்கிறார்கள். ஒரு மதம் வளர காரணங்கள் இரண்டு மத மாற்றம் செய்வது அல்லது அந்த மதத்தை சார்ந்தவர்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்வது. இந்த மாதிரி புள்ளிவிவரங்களை அமெரிக்க போன்ற மத சார்பற்ற நாட்டில் பெறுவது மிக கடினம் என்று இந்த இணையம் கூறுகிறது.

http://www.gc.cuny.edu/faculty/research_briefs/aris/key_findings.htm இந்த தளத்தில் பத்து வருட 1990 முதல் 2001 வரை ஆய்விற்க்கு பின் ஒரு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். இந்த அறிக்கையின் படி அமெரிக்காவில் எந்த மதத்தையும் தழுவாதவர்கள் அதிகரித்திருக்கிறார்கள் என்று அறிகிறேன். மேலும் இந்த மதத்தினர் சுமார் 2.3 லட்சத்திலிருந்து 7.66 லட்சத்திற்கு உயர்ந்திருக்கிறார்கள் என அறிகிறோம். இதனால் எனக்கு பெருமையோ அல்லது நான் பிறந்த மதத்திற்கு பெருமையோ ஏற்படும் என நான் நினைக்கவில்லை.

http://www.nytimes.com/2008/02/25/us/25cnd-religion.html?_r=2&ex=1361682000&en=f0f81c08d22aea7c&ei=5090&partner=rssuserland&emc=rss&pagewanted=all இந்த செய்தி குறிப்பு 25% அமெரிக்கர்கள் தாங்கள் பிறந்த மதத்திலிருந்து மாறியிருக்கிறார்கள் அதில் அதிக பட்சமாக 16% மதத்தை கை கழுவியிருக்கிறார்கள் என்று சொல்லுகிறது. இந்த செய்தி குறிப்பு பிப் 2008 இல் வெளியானது.

http://www.foreignpolicy.com/story/cms.php?story_id=3835 இந்த சுட்டி இஸ்லாமின் வளர்ச்சி அதிக குழந்தைகள் பெறுவதால் என்று சொல்கிறது. மேலும் மேற்கே இஸ்லாமின் வளர்ச்சி அதிக பட்ச குடியேற்றத்தால் ஏற்பட்டது என்கிறது.

பேராசியரின் கடிதத்தை படிக்கும் மக்கள் ”இந்த இஸ்லாம் நல்ல மதம் போலிருக்கு அதனால்தான் அமெரிக்காவிலே கூட நல்ல வளர்கிறது” என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் மக்கள் அதிக குடியேற்ற உரிமை பெற்று அந்த நாட்டு பிரஜை ஆகிறார்கள். இந்த குடியேற்றத்திற்கு மிக அதிகமாக விண்ணப்பிப்பவர்கள் முஸ்லிம் நாட்டு மக்கள் தாம். இவர்கள் முஸ்லிம் நாட்டு அடிமைத்தனத்தை பொறுக்க முடியுமால் சுதந்திரத்தை நாடி இங்கே வருகிறார்கள். இது ஒரு நகை முரண். மேற்கின் நாகரீகத்தை வெறுப்பவர்கள் அங்கே குடிபுக முண்டியடித்து ஓடுகிறார்கள்.

என்னுடைய சில அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கனடா அரசாங்கம் உலக மக்களை கனடாவில் குடியேற அனுமதியளிக்கிறது. இதில் விற்பன்னர்கள்(Skilled Worker), ஏற்கனவே குடியேறிய மக்களின் உறவினர்கள்(Family category), உள்நாட்டு கலவரங்களால் அல்லல் படும் மக்கள் (Refugee) ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்க படுகிறது. முஸ்லிம் நாட்டை சேர்ந்த குறிப்பாக ஆப்கானிஸ்தான், சூடான், சோமலியா, பாலஸ்தீனம் நாட்டினர் அகதிகளாக இங்கே குடியேறுகிறார்கள். கனடா அரசாங்கம் இந்த மக்களின் புனர் வாழ்விற்கு அதிகம் செலவிடுகிறது. இவர்கள் இங்கே வந்து தங்கி அதிக குழந்தைகளை பெற்று வருமானத்தையும் பெருக்கி மதத்தையும் வேகமாக வளர்க்கிறார்கள் என்பதே உணமை.

கனடாவில் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்க அராசாங்கம் பெற்றோருக்கு மானிய தொகை அளிக்கிறது. எனக்கு தெரிந்த இரு அரேபிய முஸ்லிம் இளைஞர்கள் திருமணமாகி ஐந்து வருடங்களில் ஐந்து குழந்தைகளை பெற்றார்கள். ஒருவர் என்னிடம் மதத்தை வளர்க்கிறேன் அதனால் அதிகம் குழந்தைகளை பெறுகிறேன் மேலும் என் குழந்தைகளுக்காக அரசாங்கம் எனக்கு அதிக மான்யம் வழங்குகிறது என பெருமை பட்டார். “தங்கள் மனைவியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டீர்களா?” என கேட்டதற்கு ”என் மனைவியின் உடல் கெட்டால் இன்னொரு கல்யாணம்” என் கண் சிமிட்டி சிரிக்கிறார். இவர் மெத்த படித்தவர், மனைவியும் முதுகலை பட்டதாரி. மதம் வேகமாக வளர காரணம் இந்த மாதிரி அதிக பிறப்பு விகிதம் முஸ்லிம்களிடையே இருப்பதால் தான்.

பேராசிரியர் எழுதியதைப் பார்த்தால் இஸ்லாம் மதத்தின் மேன்மையை உணர்ந்து கொத்து கொத்தாக வெள்ளைகாரர்கள் மதம் மாறுகிறார்கள் என நினைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் ஆராய்ச்சியின் முடிவுகள் வேறுவிதமாக அமெரிக்கர்கள் கொத்து கொத்தாக் மதங்களின் பிடியிலிருந்து விலகி ஓடுகிறார்கள் என்று சொல்லுகிறது

அன்புடன்

கால்கரி சிவா

http://sivacalgary.blogspot.com

Series Navigation