திருவண்டம் – 5 (End)

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

ஜாவா குமார்


‘என்னை இடையன் மூலன் என்பர். இவர் வாதவூரர். மாணிக்கவாசகர் என்பர் வழக்கில். நரிகளைப் பரியாக்கவல்ல இந்திரஜாலர். என்னை அறியாவிடினும் இவரை நீர் நன்கறிவீர் ‘ என்று அருகில் நின்றவரைச் சுட்டி நகைத்தார் எதிரில் நின்ற முதியவர்.

‘யோகரே, திருமூலநாதர் வெறும் இடையரல்லர். தறிகெட்டுத் திரியும் பசுக்களின் மேல் கருணை கொண்டு, அவற்றைப் பதியிடம் சேர்க்கும் வழியைத் தமிழில் பாட இறங்கி வந்த ஆதிசித்தர். ‘

யோகநாதனின் கண்கள் நிறைந்தன.

‘ஐயா, சிறுவயதில் உங்களைப் பற்றி என் தாத்தா நிறையவே கதை சொல்லி இருக்கிறார். திருமூலரின் பாடல்கள் அவ்வளவாய் நினைவில் இல்லை. மன்னியுங்கள். ஆனால் உங்கள் பாடல்களை அவர் தினமும் பாடிக் கேட்டிருக்கிறேன். காலையில் அவர் தினமும் பாடும் நமச்சிவாய வாழ்க இன்னும் நினைவிருக்கிறது. அவர் உங்கள் தீவிர பக்தர். உங்களைப் பார்த்தது என் தாத்தாவைப் பார்ப்பது போல் உள்ளது. யாழ் நூலகத்தில் அவருக்கு வேலை. அது எரிக்கப்பட்ட சிலநாட்களில் வருந்தியே அவரும் இறந்து விட்டார். அப்பா, என்னையும், அம்மாவையும் கூட்டிக்கொண்டு இங்கே வந்து விட்டார். ‘

மேலே பேச முடியாமல் தொண்டை அடைத்தது யோகநாதனுக்கு.

மணிவாசகர் அவரைக் கருணைமிகப் பார்த்தார்.

‘யோகநாதரே, முருகானந்தர் எங்கும் தொலைந்து போகவில்லை. உம்மேல் கொண்ட பாசத்தை மறக்கவும் இல்லை. அக்காரணம் கொண்டே உம் மகன் கதிர்காமரின் விந்ததனூறி உம்முலகிலேயே மேலும் ஒரு காயம் பெற இறங்கி வருவார். ஆயின் இதை அவரிடம் நீர் சொல்லற்க. யாம் விடைபெறுகிறோம். மீள்வோமா மூலநாதரே! ‘

யோகநாதன் குழந்தைபோல் குனிந்து அவர் கால்களைக் கட்டிக் கொண்டார்.

‘ஐயா, இன்னும் சற்று நேரம் இருங்கள் ஐயா. என் தாத்தாவைப் பற்றிச் சொன்னீர்கள். அப்புறம், அவர் உங்களைப் பற்றிச் சொன்ன நரியைப் பரியாக்கிய கதையைச் சொல்லுங்கள். உங்கள் வாயால் கேட்க வேண்டும். ‘

மணிவாசகர் மெல்ல நகைத்தார்.

‘யோகநாதரே, அது புராணம். நம் பெம்மான் அத்திருவிளையாடலை எம்மை வைத்து நிகழ்த்தியதும், என்றாவது, எங்காவது உம் போன்றோர் அதன் சூக்குமத்தைத் தெரிந்து தெளியவே. நரிகளைப் பரியாக்குதல் என்பது மூலநாதர் சொன்ன மத்தியாலவத்தை எனும் யோக உச்சத்தில் நிகழ்வது. ஒன்றிரண்டல்ல, பதினான்கு நரிகள். ஐம்பொறிகளும், கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் அவற்றின் ஐந்து தன்மாத்திரைகளும், மனம், புத்தி, அகங்காரம், சித்தமெனும் நான்கு அந்தக்கரணங்களுமே அந்த நரிகள். அவை சிந்தை குவியத் துரியப்பரியாகும். அதன்பின் அல்லல் இல்லை. வளி வழங்கும் அவரவர் ஞாலத்தையும் கடக்கலாம். அப்பரியேறியே யாம் உம்மைத் தேடி வந்தோம். என்ன மூலநாதரே ? அதையும் பாடியுள்ளீர் அல்லவா ? ‘

‘துரியம் இஇருப்பதும்

சாக்கிரத்து உள்ளே

நரிகள் பதினாலு

நஞ்சுண்டு செத்தன

பரிய புரவியும்

பாறிப் பறந்தது

துரியம் இறந்திடம்

சொல்ல ஒண்ணாதே.

துரியப் பரியில்

இஇருந்த அச்சீவனைப்

பெரிய வியாக்கிரத்து

உள்ளே புகவிட்டு

நரிகளை ஓடத்

துரத்திய நாதர்க்கு

உரிய வினைகள் நின்று

ஓலமிட்டன்றே! ‘

திருமூலநாதர் சன்னமான குரலில் பாட இருவரும் எதிர்ச்சுவர் நோக்கி நகர்ந்தனர்.

யோகநாதன் அவர்களைத் தொடர்ந்து ஓடினார்.

‘சற்றுப் பொறுங்கள் ஐயா. இந்தப் புத்தகம் என் தாத்தா ஞாபகமாய் இங்கேயே வைத்திருக்கிறேன். நீங்கள் பாடிய திருவாசகம்தான். இதில் உங்கள் கையெழுத்து இட்டுப் போகுமாறு வேண்டுகிறேன் ஐயா! ‘

அவர் நீட்டிய புத்தகத்தில் மணிவாசகர் எதையோ உள்ளே வைத்துத் திருப்ப, அதைக் கைநீட்டி வாங்கும் கணத்தில் சுவரினூடே இருவரும் மறைந்தனர்.

யோகநாதன் நம்பவியலாமல் சற்றுநேரம் நின்றுவிட்டுப் புத்தகத்தைப் பிரித்தார்.

தானாய்த் திறந்துகொண்ட உட்புறத்தில் ஓர் உருத்திராக்கம் இருந்தது. திறந்து கொண்ட பக்கத்தில் திருவண்டப்பகுதி என்று பாடல் விரிந்தது.

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேல்பட விரிந்தன

இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

சிறியவாகப் பெரியோன் தெரியின்

வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்

தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய

மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து

எறியது வலியின்

கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும்

படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை

காப்போன் காக்கும் கடவுள் காப்பவை

கரப்போன் கரப்பவை கருதாக்

கருத்துடை கடவுள் திருத்தகும்..

ஒருவன் என்னும் ஒருவன் காண்க..

விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க..

அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க..

நூலுணர் உணரா நுண்ணியோன் காண்க!

– முடிந்தது –

****

கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவரே

அண்டத்தி னப்புறத்த தென்னாதே – அண்டத்தின்

அப்புறமு மிப்புறமு மாரறிவுஞ் சென்றறியும்

எப்புறமுங் கண்டவர்க ளின்று.

திருக்களிற்றுப்படியார் – 8

உணராதே யாது முறங்காதே யுன்னிற்

புணராதே நீபொதுவே நிற்கி லுணர்வரிய

காலங்கள் செல்லாத காத லுடனிருத்தி

காலங்கள் மூன்றினையுங் கண்டு.

திருக்களிற்றுப்படியார் – 31

****

The dates on Mayan inscriptions range deep into the past and occasionally far into the future. One inscription refers to a time more than a million years ago and another perhaps refers to events of 400 million years ago, although this is some dispute among the Mayan scholars. The events memorialized may be mythical, but the time scales are prodigious. A millennium before Europeans were willing to divest themselves of the Biblical idea that the world was a few thousand years old, the Mayans were thinking of millions and the Indians of billions…

The Hindu religion is the only one of the world ‘s great faiths dedicated to the idea that the Cosmos itself undergoes an immense, indeed an infinite, number of deaths and rebirths. It is the only religion in the world in which the time scales correspond, no doubt by accident, to those of modern scientific cosmology. Its cycles run from our ordinary day and night to a day and night of Brahma, 8.64 billion years long, longer than the age of Earth or the Sun and about half the time since the Big Bang. And there are much longer time scales still.

There is the deep and appealing notion that the universe is but the dream of the God who, after a hundred Brahma years, dissolves himself into a dreamless sleep. The universe dissolves with him – until, after another Brahma century, he stirs, recomposes himself and begins again to dream the great cosmic dream. Meanwhile, elsewhere, there are an infinite number of other universes, each with its own god dreaming the cosmic dream…

The most elegant and sublime of these is a representation of the creation of the universe at the beginning of each cosmic cycle, a motif known as the cosmic dance of Lord Shiva. The god, called in this manifestation Nataraja, the Dance King. In the upper right hand is a drum whose sound is the sound of creation. In the upper left hand is a tongue of flame, a reminder that the universe, now newly created, with billions of years from now will be utterly destroyed. ‘

– Carl Sagan (Cosmos, Page 213-214)

****

The similarities between Indian and modern cosmology do not seem accidental. Perhaps ideas of creation from nothing, or alternating cycles of creation and destruction are hardwired in the human psyche. Certainly Shiva ‘s percussive drumbeat suggests the sudden energetic impulse that could have propelled the big bang. And if, as some theorists have proposed, the big bang is merely the prelude to the big crunch and the universe is caught in an infinite cycle of expansion and contraction, then ancient Indian cosmology is clearly cutting edge compared to the one-directional vision of the big bang. The infinite number of Hindu universes is currently called the many world hypothesis, which is no less undocumentable nor unthinkable.

– Dick Teresi (The Ancient Roots of Modern Science)

****

சமர்ப்பணம்:

புவியெங்கும் சிதறியிருந்தாலும் வேர்மீது கொண்ட வேட்கை மாறாத எம் ஈழச்சோதரர்க்கு.

****

‘அறியும் அறிவே சிவமுமாம் ‘ என்று ‘மெய்யான ‘ பகுத்தறிவு என்னவென்று பாடம் சொல்லிக்கொடுத்த மெய்கண்டதேவரின் திருவடி வணங்கி,

அன்புடன்,

குமார்

ஜாவா

sarabeswar@yahoo.com

Series Navigation