திருமண அழைப்பு

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

முருகன் சுப்பராயன்


திருமண அழைப்பு
நேரில் கொடுக்கலை
சாப்பிட கூப்பிடலை
வாங்கன்னு சொல்லலை
நெத்தி பட்டம் கட்டுனதுக்கு
துணிமணி கொடுக்கலை
உறவினர்களின் எந்த குற்றச்சாட்டுகளும்
என் காதில் விழலை – என்
ரெண்டாம் வகுப்பு நண்பன்
செவி வழி சேதி கேட்டு
நேரில் வந்து – திருமண
வாழ்த்து சொன்னப்போது….


murugan_ambal@yahoo.com

Series Navigation

முருகன் சுப்பராயன்

முருகன் சுப்பராயன்