தாய் மண்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

ஜெ. தினேஷ் பாபு.எங்கும் வானத்தில்
வேட்டுச் சத்தம்!
தீபாவளி அல்ல
தோழா!
பதுங்கு குழியில்
நித்தம்
எம் வாழ்வு!
உயிர் பயம் அல்ல!
நம்மை நம்பும்
உயிர்களுக்கான ஒரு
பாதுகாப்பு!

அரவணைப்பு தேடி
வந்தோம்
தாய் மண்ணை நோக்கி!
கரிய இருளில்
எம் உறவுகளுடனான
அந்த பயணம்
வேண்டாம்
எம் எதிரிக்கு கூட!

சுதந்திர காற்றை
சுவாசித்தவுடன் எம்
காதில் விழுந்த
முதற் சொல்
அகதி என்று!
வேண்டாம் சகோதரா
எமக்கு அந்த
அவப்பெயர்!

தாய் மண்ணை
அடைந்த எம்மை
உம் பாதம் தொட்டு
வேண்டுகிறேன்
உம் சொந்தமாய்
எற்க வேண்டி!


dhinaram123@rediffmail.com

Series Navigation

ஜெ. தினேஷ் பாபு.

ஜெ. தினேஷ் பாபு.