This entry is in the series 20110327_Issue

சின்னப்பயல்


எதையும் கடந்து செல்லுதல்
என்பது முடிவுறாப்பயணத்தின்
மூலம் மட்டுமே சாத்தியமெனில்
பாதி வழிப்பயணத்தில்
தங்கிவிட்ட என்னிலிருந்து
எதுவும் தானாகச்
சென்றால் மட்டுமே
அவை எனைக்கடந்து
செல்லுதல் சாத்தியம்.

உண்மையில்
என்னை எதுவும் கடந்து
செல்வதில்லை
காய்ந்த நீரோடையின்
வடுக்களைப்போல அவை
தங்கித்தான் விடுகின்றன.

என்றாவது பயன்படும்
என எடுத்துவைத்த
ஒரு சிறு குண்டூசியைப்போல
அவை இன்னமும் என்னுள்
தைத்துக்கொண்டு தானிருக்கின்றன.

Series Navigation