தாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி !

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


அனுதின வேலைகளை முடித்த பிறகு
விளையாட்டுக் களிப்பிலும்
நேரத்தைக் கழித்து இரவில்
திரும்ப வேண்டுமெனத்
தீர்மானித்து
காலைக் கதிரொளியில்
ஒரு நாள்
கவலை யின்றி நான்
வெளியே வந்தேன்
எனது பாதையைத் தேடி !

தடம் வைக்கும் ஒவ்வோர் படியிலும்
தடுமாறி விலக என்னைக்
கடத்துகிறாய் நீ !
உடல் களைத்துப் போய்,
பாதையை இழந்து
எங்கே நான் புகுவேனென்று
புரிய வில்லை
எனக்கெதுவும் ?
விஜயம் செய்கிறேன்
விசித்திர மான இடங்களுக்கு !

செங்குத்து மலை உச்சியில்
நிற்பேன்
சில சமயத்தில் !
கனவிலும் காணாத ஓர்
தனிப் பாதையில் சிக்கிக் கிடப்பேன்
சில வேளைகளில் !
சோகக் கருங் குகையில்
சுற்றித் திரிகிறேன்
பித்தனைப் போல !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 10, 2007)]

Series Navigation