தாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு !

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


அமைதி பெறுவாய் என்னிதயமே !
பிரிவு வேளை
இனியதாக அமையட்டும் !
மரண மாயின்றி
பூரணம் அடையட்டும் !
காதல் பாசம் நினைவில்
காலூன்றிக்
கானமாய் மாறி விட்ட
ஓர் மன வலி !
வான் வெளிப் பயணம்
முடியட்டும்
கூட்டின் மேல் பறந்து
குவிந்திடும் இறக்கை களுடன் !
உன் கடைசி மென் தொடுகை
இரவு மலர் போல்
விரல்கள் மூலம்
பரவட்டும் மெதுவாய் !
ஒருகணம் நிலையாய் நின்று
உன் இறுதி மொழிகள்
ஒலிக்கட்டும் மௌனமாய் !
நளின விளிம்பே !
உனக்குத் தலை வணங்கி
ஒளி காட்டுவேன்
உன் வழிக்கு !

************

1. The Gardener,
Translated By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 11 2008)]

Series Navigation