தாகூரின் கீதங்கள் – 43 உன்னுடன் மீள் இணைப்பு !

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



என்னரும் காதலி !
உன்னைச் சந்திக்க ஏங்குது
என்னிதயம்
இரவும் பகலும் !
மரண உருவம் விழுங்கும்
பெரும் சந்திப்பிது ! காதலி
புயலாக அடித்தென்னை
உயர்த்திச் செல் !
என் சொத்து அனைத்தும்
எடுத்துக் கொள் !
உறக்கத்தைக் கலைத்து
முறித்து விடு என் கனவை !
திருடிக் கொள் என் உலகை !
அந்தக் கொந்தளிப்பில்
ஆடை யிழக்கும்
ஆன்மா வோடு இருவரும்
ஒருவர் ஆகுவோம்
அழகை நோக்கி !
அந்தோ ! அது
எந்தன் வீண் ஆசை !
இந்த மீள் இணைப்பை
உறுதி செய்ய
உள்ளது வேறு யார்
உன்னைத் தவிர
என் இறைவா ?

************

1. The Gardener,
Translated By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 3 2008)]

Series Navigation