தாகூரின் கீதங்கள் -4 உன் திருவிளையாடல் !

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உன் ஆனந்த மனப்பாங்கில்
என்னோடு ஆடிவரும்
எப்போதும் புதிதான
இத்திரு விளையாடலின் பொருள்
என்ன வென்று சொல் ?
நான் பேச விழைவ தெல்லாம்,
சொல்ல விடுவ தில்லை நீ !

உதட்டி லிருந்து
வார்த்தைகளைப் பிடுங்குவாய்,
உள்ளே என்னுள்
உட்கார்ந்த வண்ணம் !
என் மொழிகளைக் கொண்டு
உன் வாசகத்தை உரைத்திடுவாய்,
உன்னிசை மூலமாக !

நான் பேச நினைத்த தெல்லாம்
நான் மறந்து போகிறேன் !
நான் சொல்ல
நீ விழைவ தெல்லாம்
நான் மட்டும் நவில்கிறேன் !
அலை மோதும் கீதங்களில் எனக்கு
கரைதெரி யாமல் போகும்
அறியாத தொலைவுக் கப்பால் !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 19, 2007]

Series Navigation