தவறிய அவதாரம்

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

கி.சீராளன்


இது கமலின் தசாவதாரம் குறித்த என் கருத்துக்கள். நமக்கென்ன வேண்டியிருக்கிறது சினிமா விமரிசனம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் சில சமயங்களில் சில விஷயங்கள் கமலின் காதுக்கு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது மீண்டும் தோன்றுகிறது. நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு கமலிடம் கருத்து சொல்ல வழியும் இல்லை தகுதியும் இல்லை. ஒரு வேளை திண்ணை போன்ற தளத்தில் கண் பட்டால் யாராவது நலம் விரும்பிகள் அவரிடம் கொண்டு செல்லலாம்.

பிரியத்திற்குரிய கமல், ரொம்ப நாளாகவே நான் உங்கள் சாதாரண ரசிகன். உங்கள் நடிப்பால், ஆம், நடிப்பால் உலக நாயகன் என்று பட்டம் பெறுகிற அளவுக்கு உயர்ந்தவர் நீங்கள். இந்தியன், அவ்வை சண்முகி பார்த்த போதே உங்களிடம் கேட்கத் தோன்றியது, ‘ என்ன கமல் உங்களை படத்தில் காணவில்லையே என்று’. ஒரு வேளை அப்படி யாராவது கேட்டிருந்தால் மீண்டும் இப்போது நீங்கள் காணாமல் போயிருக்க மாட்டீர்களோ என்னவோ! அரிதாரத்திற்கு பதிலாக முகமூடிகளை தூக்கி மாட்டிக் கொண்டால், கமல் எங்கே, அவரது நுணுக்கமான நடிப்பு எங்கே? திருவிழாக்களில் முகமூடி பொம்மைகளை பார்த்திருக்கிறோம். அதைப்
போல இருக்கிறது. ரஜினியை கவனித்தீர்களா, அவர் அவரது இளமைக்கால முகவெட்டைப் போலவே முகமூடி அணிந்து கொள்கிறார். அவரல்லவோ தமிழ் சினிமாவை சரியாக புரிந்துகொண்டவர். இரட்டை வேடங்களில் ஒன்றை சிறிய அளவில் தாடி அல்லது மீசை மூலம் மட்டுமே வேறுபடுத்திக் காட்டுகிற எம்.ஜி.ஆ£¢. போன்றவர்கள் புத்திசாலிகள். நடிகனின் முகம் தெரியவேண்டும் என்பதே குறிக்கோள்.

உயிரற்ற அந்த முகமூடிகள் அருவருப்பாக இல்லையா? குறைச்சலாக வேடமிட்ட அந்த தெலுங்கு பாத்திரம் மட்டுமே ரசிக்கத் கூடியதாய் இருக்கிறது. ‘அவர்கள’¢ படத்தில் கையில் வைத்திருப்பீர்களே, ஜூனியர் பொம்மை அந்த சாயலில் இருக்கிறது, பூவராகவன் வேடம்.

சரி, இந்த முகமூடி அதிசயங்கள் உண்மையிலேயே வியக்கத் தகுந்தவையாக இருக்கட்டும், ஆனால் இது அந்த கலைஞரின் திறமை மட்டுமே அல்லவா? கமலின் பங்கு என்ன இருக்கிறது. இதே முகமூடியை யார் வேண்டுமானாலும் மாட்டிக்கொண்டு நடிக்கலாமே. நீங்கள் இல்லாத சமயங்களில் ரவிக்குமார் மாட்டிக்கொண்டு நடித்ததாக கேள்வி.

கமலை பார்க்க வருகிற என்போன்ற கமல் ரசிகர்களுக்கு கமலை காணவில்லை என்றால் வருத்தம் தான்.

மற்றபடி படத்தைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை. நல்ல நகைச்சுவை கலந்து படங்கள் எடுக்கக்கூடிய ரவிக்குமார் தூங்கிவிட்டார். நாராயணனை மூழ்கடிக்கிற முதல் பகுதிக்கும் எஞ்சிய பகுதிக்கும் என்ன சம்பந்தம் என்று என் மூளைக்கு எட்டவில்லை. ஆனால் நாராயணன் கடைசி வரை அஸினுடன் வருகிறார். விழா மேடையில் நாராயணனுக்கு அருகில் அஸினுக்கும் இடம் கொடுத்திருக்கலாம். தான் இன்னும் பகுத்தறிவு வாதிதான் என்று காட்டிக்கொள்ள கடைசி காட்சிகளில் சிறிய வசனங்கள் கமலுக்கு.

கதை எல்லா படங்களிலும் வருகிறதை போலவே ஏதோ பொருளை காப்பாற்ற துடிக்கும கதாநாயகனும், அழிக்கத் துடிக்கும் வில்லனும்தான் கதை. இந்தக் காலத்திற்கு ஏற்றாற் போல் வைரஸ் ஆயுதம். அந்தக் காலத்தில் மின்னலை குப்பிக்குள் பிடித்த உலகம் சுற்றும் வாலிபன்.

போகிற இடமெல்லாம் திடீர் திடீரென்று புதிய புதிய பாத்திரங்கள், இது கமலா இல்லையா என்று பக்கத்திலிருக்கிறவரை கேட்டுத் தெரிந்துகொள்வதில் படம்பார்ப்பது தவறுகிறது. ஜார்ஜ் புஷ் கூட கமல்தானாமே? அடடா என்ன அற்புதமான முகமூடி.

சர்தார்ஜி வேடத்தில் கம்பீரமாய் ஆடுகிற கமல் மட்டுமே ரசிக்க வைக்கிற கமல். ஆனால் திருஷ்டி வைக்கிறது போல் அவரை துப்பாக்கியால் சுட்டு அதனால் தொண்டையிலிருக்கிற கேன்சர் குணமாகி, என்ன கொடுமை சார் இது?

அதே போல், வானத்தில் ªŒலிகாப்டரில் அமர்ந்து கொணடு, பைனாக்குலர் மூலம், கமலின் உடலில் பரவுகிற வைரஸ்களை பார்க்கிறார் இன்னொரு கமல். இதெல்லாம் என்ன மாதிரி விந்தை கமல்? பைனாக்குலர், மைக்ரோஸ்கோப் வித்தியாசம் கூடவா தெரியாது நம் ரசிகர்ளுக்கு?

சரி, அந்த வைரஸ் ‘அமெரிக்க’ கமலை கொன்றுவிடுமா இல்லையா என்று உங்களுக் கே சந்தேகம் வந்து விட்டதா? எங்கிருந்தோ வந்து ஒரு வேல் குத்திக்கொள்கிறதே! ஏன்? இல்லை பி. வாசுவை திருப்திப்படுத்த வேண்டிய நிர்பந்தமா?

கடலில் மூழ்கிய கமல், தரையில் பெருவிரல் ஊன்றி நெம்பி ஓரே தாவலில், நாராயணன் சிலையோடு, ஆளவந்தான் பாய்ச்சலில் வெளிவந்து நெப்போலியனை பழிவாங்குவார் என்று எதிர்பார்த்தேன் நடக்கவில்லை. நெப்போலியன் தான் அமெரிக்க கமலாக பிறந்திருக்கிறார் என்று காட்டியிருந்தால் இன்னும் நன்றா£££££க இருந்திருக்கும். விட்டுவிட்டீர்கள்.

எல்லாவற்றையும் கழற்றிபோட்டுவிட்டு, எளிமையாக, ஜாலியாக அல்லது Œ£யாக, அனுபவித்து வசூல் ராஜா மாதிரி ஆட்டம்போட வைக்கிற ஒரு படம் பண்ணுங்கள் கமல்.

கி.சீராளன்
punnagaithozhan@yahoo.com

Series Navigation