தவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

விஸ்வாமித்ரா


சென்ற வாரத் திண்ணையில் திரு.பெரியசாமி என்பவர் எழுதிய கடிதத்தில், கோவிந்தராஜன் என்ற விமர்சகர் எப்படி படத்தின் குறைகளை எடுத்து எழுதப் போயிற்று என்ற ரீதியில் குற்றம் சாட்டுவதுடன் விமர்சகருக்கு உள்நோக்கம் இருக்கலாம் என்றும் அவதூறு கூறுகிறார். ஒரு திரைப்படம் வெளியாகும் பொழுது அதைப் பாராட்டியும், விமர்சித்தும் கருத்துக்கள் வருவது இயற்கையே. ஒரு திரைப்படத்தில் குறை கண்டு பிடிப்பதே குற்றம் என்று அவர் எழுதியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. குற்றம் கண்டு பிடிப்பதும் விமர்சகர்களின் வேலைகளில் ஒன்றுதானே ? இதில் கடுமையாக கண்டனம் செய்ய என்ன இருக்கிறது என்பது புரியவில்லை ? குறைகளைச் சுட்டிக் காட்டுவது குற்றமா என்ன ? சேரன் படங்களின் மீது இருக்கும் எதிர்ப்பார்ப்பினால்தானே இது போன்ற விமர்சனங்கள் எழுகின்றன ? ஆறு, மஜா போன்ற படங்களுக்கா இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன ? இணைய தளங்களில் அது போன்ற படங்கள் கண்டு கொள்ளப் படுவது கூட இல்லையே ? இந்தியா டுடே பத்திரிகையும் கூட இதே போன்ற விமர்சனத்தைதானே எடுத்து வைக்கிறது ? இந்தக் குறைகள் எல்லாம் ஒரு திண்ணையில் எழுதிய ஒரு விமர்சகரின் கண்ணுக்கு மட்டும் தென்பட்டவை அல்ல. நான் தேடிய வரையில் இதே படத்திற்கான விமர்சனங்கள் மேலும் சில இணையத்தில் கிட்டின. இது போல் இன்னும் பல பார்வைகள் பல்வேறு இணைய தளங்களில் வைக்கப் பட்டிருக்கலாம். தவமாய் தவமிருந்து படம் பற்றிய பின்வரும் விமர்சனங்களையும் பெரியசாமி போன்றவர்கள் படித்துப் பார்த்தால் இணைய விமர்சனங்களின் வெளிப்படையான போக்குகள் பிடிபடலாம்.

தூள் டாட் காம்

மரத்தடி-1

மரத்தடி-2

பத்ரி வலைப்பதிவு

http://dhool.com/blog/ ?item=films-rounup-thavamaai-thavamirundhu-tamil http://www.maraththadi.com/article.asp ?id=2818

http://thoughtsintamil.blogspot.com/

http://www.maraththadi.com/article.asp ?id=2822

அச்சுப் பத்திரிகைகளில் இது போன்ற சுதந்திரமான வெளிப்படையான விமர்சனங்கள் வருவதில்லை. அச்சுப் பத்திரிகைகளின் வழா வழா கொழா கொழா விமர்சனங்களுக்குப் பழக்கமாகி விட்ட நமது இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் இது போன்ற வெளிப்படையான கருத்துக்களும் விமர்சனங்களும் கடும் அதிர்ச்சியைத் ஏற்படுத்துகின்றன என்பது எதிர்வினைகளைக் காணும் பொழுது புரிகிறது. திண்ணையில் வந்த விமர்சகரின் பார்வையுடன் நானும் முழுவதும் ஒன்று படவில்லையெனினும் கூட அதைத் தெரிவிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். விமர்சகர் தெரிவித்த கருத்துக்களில் தவறு இருந்தால் பதிலுக்கு கண்ணியமாகச் சுட்டிக் காட்டலாம் ஆனால் குறை சொல்வதே குற்றம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள இயலாது.

விஸ்வாமித்ரா

viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா