தலைமுறைகள் கடந்த துவேஷம்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

பத்ரிநாத்


வாசந்தியின் கட்டுரையும் அதைத் தொடர்ந்த பெரியசாமியின் பதில் கட்டுரையும் இந்தப் பிரச்சனையின் இன்னுமொரு பரிமாணத்தைப் பற்றிப் பேசவில்லை. ஏன் இந்த துவேஷம் ? இதன் தொடக்கப் புள்ளி எங்கிருந்து வந்தது என்றவுடன் உடனடியாக ஜஸ்டிஸ் பார்ட்டி, திராவிட இயக்கம் என்று சிலர் சொல்லிவிடலாம். ஆனால் அதுதான் உண்மையா.. ? உவேசாவையோ, மகாகவியையோ திராவிட தேசம் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவர்கள் கூறும் குற்றச்சாட்டோ, இவர்கள் வள்ளுவனையோ, இளங்கோவடிகளையோ கம்பனைப் போல கொண்டாடுகிறார்களா என்பதுதான்… கம்பனைப் போற்றக் காரணம் அவர் ராமகாதை- ஆரியக் கடவுளைப் பற்றி எழுதியதால் பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வத்துக் கொண்டு ஆடினார்கள் என்கிறார்களே. இதற்கு என்ன பதில்..

ஆக ஒன்று தெரிகிறது. இரு புறமும் கூரான கத்தியைப் போல உள்ள துவேஷம் (அறிஞர் அண்ணா பாணியில்)… காலங்காலமாய் வளர்ந்து செழித்து விருட்சமான துவேஷம். சாதியில் தாழ்ந்தவன் படித்தால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்ன காலத்தில் இருந்து வளர்ந்து வந்த துவேஷம். தலைமுறைகள் கடந்து வந்த இந்த துவேஷம், வரும் தலைமுறையிலாவது மறையும் அல்லது குறைந்த பட்சம் குறையும் என்று நம்புவோம்.

–பத்ரிநாத்

prabhabadri@yahoo.com

(இந்தக் கடிதம் சில பிழைகளுடன் பிரசுரிக்கப்பட்டது . இது சரியான பிரதி. – திண்ணை குழு)

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்