தராசு

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


யாருக்கு யார்
அளவுகோல் ?

யாருக்கு யார்
எடைக்கல் ?

உன்னை
நிறுத்துப்பார்க்க
என்னிடம் போதுமான
எடைக்கல் உண்டா!

என்னை
அளந்துபார்க்க
உன்னிடம் சரியான
அளவுகோல் இருக்கிறதா ?

நிறுவைக்கு
வருபவை
பொதுவானவை.

எடைக்கல்லும்
அளவுகோலும்
அவரவர்
கைவசயிருப்பின்படி.

தன் தட்டுகள்
தாங்கும்
நிறை தெரியாமல்
தராசு பிடித்தபடி
நிறைய……
————-நெப்போலியன்
சிங்கப்பூர்
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation