தமிழ் சினிமா.. உல்டா படலம்…

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

ராஜு


ரஜினியின் அந்தக் கதை ‘அருணாச்சலம் ‘.

படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பது போல், ரஜினி செயல்.

உல்டாக்கள் இப்படி நிறைய இருக்கிறது.

‘விசில் ‘ படம் ‘URBAN LEGEND ‘ ன் அப்பட்டக் காப்பி. இதன் இயக்குனரும் ‘பாலுமகேந்திரா ‘ மாணவர் தான். எதிர்பாரா ஒற்றுமை.

சரி காப்பி – உல்டாவிற்கும், பாதிப்பில் (inspiration) படம் பண்ணுவதற்கும் என்ன வித்தியாசம்… ?

‘தேவர் மகன் ‘ ஐச் சொல்லலாம். உலக சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர் ‘அக்கிரா குருசோவா ‘. ஸ்டாவன் ஸ்பீல்பெர்க் தன் குரு என பெருையுடன் சொல்லுவார். சத்யஜித்ரே, தார்க்கோ வஸ்கி என எல்லா பெரிய இயக்குனர் அனைவருக்கும் இவர் மேல் மரியாதையுண்டு.

அவரின் படம் தான் ‘ரெட் பியர்ட் ‘ RED BEARD. அந்தக் கதையை தமிழ் களத்திற்கு ஏற்ற மாதிரி செய்து, அதன் ஜீவனை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை வேறு உடலில் புகுத்தி அழகாக பண்ணியு படம் ‘தேவர் மகன் ‘.

அதுவன்றி சும்மா திருடி உல்டா , காப்பி அடிப்பது தண்டிக்கப்பட வேண்டியது.

அது இந்தியாவில் சட்டம் இல்லை என்பதால் இந்த நிலை.

ஹிந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘humraaz ‘, அப்பட்டமாக ‘Perfect Murder ‘ம் காப்பி & உல்டா. கேட்டால் ‘Perfect Murder ‘ மட்டும் என்னவாம், ‘Dial M for Murder ‘ன் வேறு வடிவம் தானே என்கிறார்கள்.

அவர்கள் தயவு செய்து அதற்காக தரப்பட்ட பணம், பின்பற்றிய வழிமுறை இவற்றைத் தெரிந்து கொள்வது நன்று.

தொழில் தர்மம் இல்லாமல் சினிமாத் தொழில் நமது நாட்டில் நலக்கிறது.

12 கோடியில் படமெடுக்கும் தமிழ் சினிமாவினர், அதில் 3 கோடி நடிகருக்கு கொடுக்க தயார். ஆனால், படத்திற்கு ஜீவனாய் இருக்கும் Location-க்கு 50லட்சம் கொடுக்க தயாரில்லை. ( ஒரு நாளைக்கு 2லட்சம் என மிக மிக அதிக அளவீட்டில் ). ஏன்.. ?

ஏனென்றால் நாம் சினிமாத் தொழிலை அளவிற்கு மீறி ஆராதனை செய்கிறோம்.

அது மாற வேண்டும் என்பதே இக் கடிதத்தின் ஆசை.

Series Navigation

ராஜு

ராஜு