தமிழ் இலக்கியத் தோட்டம் – தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue


தமிழ் இலக்கியத் தோட்டம் – தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது

பரிந்துரைக்கான அழைப்பு

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.

2010 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். விண்ண்ப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியமில்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.

பரிந்துரைகளை சமர்ப்பிக்க இறுதி நாள் 31 மே 2010

விண்ணப்பம் மற்றும் மேலதிகத் தகவலுக்கு http://sites.google.com/site/tcaward/

Series Navigation

தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது – 2004

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

அறிவிப்பு


கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், வாசகர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோரின்

ஆதரவுடன் செயல்படும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை

வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகும். இது வருடா வருடம் வாழ்நாள் இலக்கிய

சேவைக்காக உலகத்தின் மேன்மையான தமிழ் இலக்கியப் படைப்பாளி ஒருவரை தேர்வு செய்து

பரிசு வழங்கும். கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக் கழக தென்னாசிய

கல்வி மையமும் இணைந்து வழங்கும் இந்தப் பரிசு, கேடயமும் 1500 கனடிய டொலரும் கொண்டது.

பரிசு பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், நேரம் போன்ற விபரங்கள் பத்திகைகளிலும்,

இணையத்திலும் அறிவிக்கப்படும்.

விண்ணப்ப படிவம்

விண்ணப்ப முடிவு தேதி: 30 செப்டம்பர் 2004

விண்ணப்பதாரர் பற்றிய விபரம்

பெயர்:

முகவரி:

தொலைபேசி: தொலைநகல்:

மின்னஞ்சல்:

படைப்பாசிரியர் பற்றிய விபரம்

பெயர்:

முகவரி:

தொலைபேசி: தொலைநகல்:

மின்னஞ்சல்:

பிறந்த தேதி ( அல்லது வயது ):

கல்வித்தராதரம்:

தொழில்/ உத்தியோக விபரம் :

பெற்ற விருதுகள், பரிசுகள் பற்றிய விபரம்:

படைப்பாசிரியரின் பிரசுரமான புத்தகப் பட்டியல். பதிப்பாளர் பெயரும், பதிப்பித்த தேதி

விபரமும் மட்டுமே கொடுக்கப்படவேண்டும். புத்தகமாக வெளிவராத சிறுகதைகள், கட்டுரைகள்

தேவையில்லை. விண்ணப்பத்துடன் புத்தகங்களை இணைக்க வேண்டாம்.

நாவல்கள் விபரம்:

சிறுகதை தொகுப்பு விபரம்:

கவிதை தொகுப்பு விபரம்:

விமர்சனங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், செவ்விகள்:

படைப்பாசிரியர் இந்த விருதுக்கு தகுதியானவர் என்பதை பரிந்துரைத்து 500 வார்த்தைகளுக்கு

குறையாமல் ஒரு குறிப்பு தரவும்:

விண்ணப்பதாரரின் கையொப்பம்:

தேதி:

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவம் கீழ்க்கண்ட முகவரிக்கு 30 செப்டம்பர் 2004 க்கு முன்பாக

தபாலில் அனுப்பப்பட வேண்டும். மின்னஞ்சல் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.

Nomination for Iyal Virudhu

Room 268 S

Centre for South Asian Studies

Munk Centre for International Studies

University of Toronto, #1, Devonshire Place

Toronto, ON

M5S 3K7

CANADA

Series Navigation