தமிழ் இணைய இதழ்கள் – ஒரு முன்னோட்டம்

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ.,


உலகம் தன் பரப்பில் இருந்துச் சுருங்கி இன்று ஒரு கிராமமாக மாறிவிட்டது, இதற்குக் காரணம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி. இத்துறையின் பெரும்பகுதி வளர்ச்சிக்குக் காரணம் கணினித்துறை. அறிவியல் துறையின் முன்னேற்றத்திற்கும், புரட்சிகரமான செயல்பாட்டிற்கும் காரணமாக விளங்கி வருவது கணினித்துறை என்பது கண்கூடான உண்மை.

அறிவியல், தொழில்நுட்பத்தின் வழியில் கணினித்துறையும், தகவல் தொழில் நுட்பத்துறையும் இணைந்து மனித சமுதாயத்திற்குத் தந்துள்ள புதிய வழிமுறைதான் இணையம். அதன் விரிவும், அது ஏற்படுத்தியுள்ள வாய்ப்புகளும் எண்ணிலடங்காதவை. மனித அறிவுத்திறனின் எல்லையே அதன் எல்லை ; மனித படைப்புத்திறனின் வரம்பே அதன் வரம்பு.

உலகு முழுவதும் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இணையத்தின் செயல்பாடு அண்மையில்தான் பல்வேறு வழிகளில் பெரும்¢ மாற்றத்தையும் வளர்ச்சியையும் கண்¢டுள்ளது. தொடக்க காலத்தில் அஞ்சல் செய்திகளை அனுப்ப மட்டுமே பயன்பட்டுவந்த இணையம் தற்போது மின்வணிகம், மின் அரசான்மை, மின் பொழுதுபோக்கு, மின்நூலகம், மின்னிசை எனப் பல வகைகளில் தன் பயன்பாட்டுத்தளத்தை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது.

அண்மைக்காலம் வரையில் இணையத்தின் செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றில் பெரும்பாலும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு நாடுகள் இணையத்தைப் பலவழிகளில் பயன்படுத்தத் தொடங்கியபின் அந்தந்த நாட்டு மொழிகள் இணையத்தில் இடம் பெறும் தேவை ஏற்பட்டது. எந்தத் துறையின் அறிவும் மக்கள் பேசும் மொழியில் இருந்தால் அது மக்களை எளித்¤¢ல் சென்றடையும்; மக்களால் பெரிதும் பயன் படுத்த முடியும் என்ற அடிப்படையி¢ல் தமிழ் மொழி இயைத்தில் இடம் பெற வேண்டி தேவையைக் காலம் ஏற்படுத்தித் தந்தது.

தமிழும் கணினிப் பயன்பாடும்
தமிழ் மொழியைப் பொறுத்த மட்டில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பே அது இயைத்தில் இடம் பெறத் தொடங்கிவிட்டது. இதன் வழியாக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களும் இணையத்தை, கணினியை அதிகமாகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. மின் அஞ்சலில் தமிழ் முதலில்¢ இடம் பெற்றது. மெல்ல மற்ற துறைகளிலும்¢ கால்பதி¢த்தது.

தமிழ் இணையம் 99 மாநாட்டிற்கு முன்வரை உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பல குழுவினராக இருந்து அவரவருக்கான தனித்தனியான தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டு அவ்வற்றை மின்னஞ்சலிலும் இணைய தளங்களிலும் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஒரு குழுவினர்¢ அனுப்பிய மின்னஞ்சலையோ, இணையதளத் தகவலையோ ஏனையோர் படித்து அறிய இயலாத நிலை நிலவியது. தமிழ்மொழி ஒன்றுதான் என்றபோதிலும் அது இணையத்தில் பல வடிவங்களில் வலம் வந்து கொண்டிருந்தது.

மேற்கண்ட சிக்கலில் இருந்து மீள தமிழக அரசு நடத்திய தமிழ் இணையம் 99 மாநாட்டில் தமிழ் எழுத்துருக்கள் தரப்படுத்தப்பட்டு டாம் (TAM), டாப் (TAM) என்ற எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட அறிவிக்கப்பட்டன. இதனால் அச்சிக்கல் ஓரளவிற்கு அந்நேரத்தில் தீர்க்கப்பட்டது. இருப்பி¢னும் இந்த எழுத்துருக்களை ஒரு கணினியில் உள்ளீடு செய்தபின்னேதான் பயன்படுத்தமுடியும் என்ற சிக்கல் நீடித்தது.

தமிழில் யுனிகோடு முறைமை
தற்போது உலகமொழிகள் எல்லாவற்றிற்கும் ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமான யுனிகோடு (UNICODE) என்ற எழுத்துருவால் உலக மற்றும் இந்திய மொழிகளின் இடையில் தமிழுக்கு என்று தனியிடம் கிடைத்துள்ளது. இம்மாற்றம் குறிப்பிடத்தக்கது. இதிலும் சில கயைப்பட வேண்டிய குறைபாடுகள் உள்ளன என்ற கருத்தும் இங்கு சுட்டத்தக்கது.

இந்த யுனிகோடு முறை மூலம் பதிக்கப்பட்ட தகவல்களைத் தமிழிலேயே தேடவும், பெறவும், மின்னஞ்சல்களை அனுப்பவும் எளிதாக முடியும். மேலும் இத்தகுதரம் உலகில் உள்ள பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டமையால் தமிழ் மொழிக்கு இணையத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறப்பான ஏற்றம் உண்டு என்பதில் ஐயமில்லை.

யுனிகோட் முறை தமிழ் இணையப் பயன்பாட்டில் ஒரு மைல்கல். இவ்வளர்ச்சியால் தமிழ் மொழியிலேயே கணினி பயன்பாடு அமைவது மிகச் சிறந்த மாற்றத்தைத் தற்போது ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் தமி¢ழின் இடம்
இன்று இணையத்தில் உலகின் பல மொழிகள் இடம் பெற்றுவருகின்றன. ஆயினும் ஆங்கில மொழியை அடுத்து மிகுதியாகப் பயன்படுத்தப்படும் மொழி தமிழ் என்பது பெருமைக்குரிய செய்தி. மேலும் இதனால் வளர்ந்துவரும் கணினித்துறை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவ எளிதான வழி பிறந்¢துள்ளது.

தமிழ் இணைய இதழியல்
இன்று கல்வி, வணிகம், வங்கி, வேளாண்மை, பொறியியல், மருத்துவம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகள் கணினி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேறி வருகின்றன. இவ்வரிசையில் இதழியல் துறையும் முன்னேறி வருகிறது. அச்சு இதழியல் தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கணினி விளைவித்துள்ளது. இது தவிர இணையத்தில் இதழியல் என்ற புதிய பிரிவும் தற்போது தொடங்கியுள்ளது. தமிழ் மொழியிலும் பல இணைய இதழ்கள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இது ஒரு புதிய முயற்சியாகும்.

தமிழ் இணைய இதழ்கள் உலக அளவில் உள்ள தமிழ் வாசகர்களை உடன் எட்டுகின்றன ; உலக அளவில் வாசகர்களைப் பெறுகின்றன. உடனடியாக மின்னஞ்சல் மூலமாக வாசகர் கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்று விடுகிறது. இதன்மூலம் தமிழ் மொழியின் கலை, பண்பாட்டுப் பகிர்வுகள், தேடல்கள், பார்வைகள் பன்முக நோக்கில் பரவிவருகின்றன.

உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இடத்தால் வேறுபட்டு, பண்பாட்டு நாகரிக மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் தமிழால் தமிழ் இணையத்தால் இன்று ஒன்றுபட முடிகிறது. இதற்குப் பெரும் பங்காற்றி வருவன தமிழ் இணைய இதழ்கள்.

தமிழ் இணைய இதழ்கள் சிலவும் அவற்றின் வகைப்பாடும்
தமிழில் பல இணைய இதழ்கள் தற்போது எழுந்து வளர்ந்து வருகின்றன. அவற்றுள் பின்வருவன குறிக்கத்தக்கன. அம்பலம், திண்ணை, தமிழோவியம், வார்ப்பு, திசைகள், ஊடறு, நிலாச்சாரல், ஆறாந்திணை, மரத்தடி, பதிவுகள், வெப் உலகம், தமிழ்சிபி தோழி.காம் போன்ற இதழ்கள் வாசகர்களைப் பெருமளவில் பெற்றவை.

இவ்விதழ்களில் சில மாத இதழ்கள், சில வார இதழ்கள். இவை பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த இதழ்கள் என்பது இவற்றின் பொதுப்பண்பாக உள்ளது. இந்த இதழ்களில் பெண்களுக்கானவை, கவிதைக்கானவை, செய்திகளுக்கானவை என்ற பிரிவுகளும் உண்டு. கட்டணம் கட்டி படிக்கவேண்டியவை, கட்டணம் தேவைப்படாதவை என்ற பிரிவுகளும் உண்டு. இவை தவிர தமிழ் நாட்டில் வெளியாகும் அச்சு இதழ்களி¢ல் பேர்போன இதழ்களும் தங்கள் இதழ்ப்பகுதிகளை இணையவழியாகத் தந்து வருகின்றன. அவற்றை மீள்பிரசுரம் என்பதாகக் கருத இயலுமே தவிர இணைய இதழ்களாகக் கருதத் தகாது. மேலும் இணைய இதழ்களைச்¢ சிற்றிதழ்கள் போன்றவை/ தரத்தவை என்று கருதினாலும் தவறாகாது. இதனடிப்படையில் தமிழ் இணைய இதழ்களின் தரத்தையும் அவற்றின் பங்களிப்பையும் ஆராய ஏற்ற காலம் இதுவேயாகும்.

தமிழ் இணைய இதழ்களின் உள்ளடக்கம்
மேற்சுட்டிய இணைய இதழ்களின் உள்ளடக்கத்தை அறிந்து கொள்வது அவற்றின் தரத்தை உணர்ந்து கொள்வதற்கு ஈடானது. அவவ்கையில் சில இதழ்களின் உள்ளடக்கம் இங்கு தரப்படுகின்றன.

திண்ணை
இந்த இதழ் அரசியலும் சமூகமும், கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில் நுட்பமும், கலைகள், சமையல், இலக்கியக்¢ கட்டுரைகள், நகைச்சுவையும் வித்தியாசமானவையும், கடிதங்கள் அறிவிப்புகள் போன்ற பல பகுதிகளை உள்ளடக்கி அமைகிறது. இது ஒரு வார இதழாகும்.

பதிவுகள் இந்த இதழில் அரசியல், கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல்விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல் , திரைப்படம், வாசகர் எதிரொலி, நாவல், உங்கள் நலம், விவாதம், தமிழ் வர்த்தக் கையேடு, இலவச வரிவிளம்பரம், நூல் அங்காடி போன்ற பகுதிகள் இடம் பெறுகின்றன.

தோழி. காம்
இந்த இதழ் பெண்களுக்கான இதழ் ஆகும். இதனுள் விவாதம், அழகு, தாய்மை, பயணம், திரை, உங்கள் நாட்குறிப்பு முதலிய இடம்பெற்று வருகின்றன.

அம்பலம்
இந்த இதழில் செய்திகள், வார இதழ், கவிதைகள், சிறப்பிதழ்கள், மகளிர்பக்கம், வாழ்த்துகள், மின்னஞ்சல், இளையர், திரை முதலிய பகுதிகள் உள்ளன.

வார்ப்பு
இது கவிதைகளுக்கான இதழாக வெளிவருகிறது. இதில் கவிதைகள், கவிதைத்தொகுதி அறிமுகம், கவிதை விமர்சனங்கள், கவிஞர்களின் பட்டியல் முதலியன இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு வகைக்கு ஒன்று இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவைதவிர மற்றவையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டியவையே. இடங்கருதி இவை மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

தமிழ் இணையஇதழ்கள் ஆய்வின் தேவை
தமிழ் இணைய இதழ்கள் என்பவை தமிழ் இதழியல் வரலாற்றில் புதுமையானவை. அவற்றிற்கு என்று சில வரையறைகள் தற்போது உள்ளன ; பொதுப்பண்புகள் உள்ளன. அவை இணைய இதழ்களுக்கு மட்டுமே உரித்தானவை. இவை ஆராயப்படவேண்டும்.
தமிழ் இணைய இதழ்களில் உள்ள குறை நிறைகள் ஆராயப்பட வேண்டும். இதன்மூலம் இணையஇதழ்கள் சரியான பாதையை நோக்கிப் பயணிக்க முடியும்.
தமிழ் இணைய இதழ்களின் தரம், வாசகர் கருத்து ஆகியவையும் ஆராயப் படவேண்டிய களங்கள். இதன்மூலம் இணையஇதழ்களின் தரம் மேம்பாடு அடையும்.
தமிழ் இணைய இதழ்கள் ஒரு குறிப்பிட்ட வட்ட மக்களை மட்டுமே சென்றடைகின்றன. அவை அனைத்து வட்ட மக்களையும் சென்றடைவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும்.
தமிழ் இணைய இதழ்களுக்கும் மற்ற துறை இதழ்களுக்குமான ஒற்றுமை வேற்றுமை அளந்தறியப்பட வேண்டும். இதன்மூலம் இணைய இதழ் வளர தனித்த வழி உருவாகும்.

சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., ஆசிரியப் பயிற்றுநர், வட்டார வளமையம், புதுக்கோட்டை

குறிப்பு
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இந்தக் களத்தை எடுத்துக்கொண்டுள்ளேன். இதற்கு ஆய்வு நெறியாளராக முனைவர் மு. பழனியப்பன் எம்.ஏ., எம். பில்., பிஎச்.டி., பிஜிடிசிஏ., முதுநிலை தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, (த), புதுக்கோட்டை, 622 001 அமைகிறார். இது குறித்தத் தகவல்கள் ஏதேனும் இருப்பினும் கீழ்க்காணும் மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

muppalam2003@yahoo.co.in

Series Navigation