தமிழ்த்திரைப்பட உலகமும் கணிணி உலகமும்

This entry is part [part not set] of 10 in the series 20000702_Issue

V.R. மூர்த்தி


பில்லா – ஆள்விற்பவன் (பாடி ஷாப்பர்)

எங்க ஊரு பாட்டுக்காரன் – எங்க ஊரு பாடி ஷாப்பர்

வேலைக்காரன் – புரோகிராமர் (நம்மதான்)

எஜமான் – புரோஜக்ட் மேனேஜர்

கைதி கண்ணாயிரம் – TCS ப்ரோகிராமர்

அடிமைப்பெண் – பெண் TCS ப்ரோகிராமர்

ஒரு கைதியின் டயரி – TCS புரோகிராமர் ரெசூமே

சவால் – TCS பாண்டு

கோபுர வாசலிலே – அமெரிக்க தூதரக நுழைவாயில்

வாழ்வே மாயம் – கிடைக்காத H1 விசா

மெளனராகம் – விசா கிடக்காமல் போனதும் வீட்டில் பாடுவது

உன்னால் முடியும் தம்பி – மீண்டும் விசா அப்ளிகேஷன் போட தேவையான ஊக்கம்

மறுபடியும் – மீண்டும் H1 க்கு முயற்சி

24 மணி நேரம் – அமெரிக்க தூதரகத்தில் விசா ஒப்பம் வாங்க காத்திருக்கும் நேரம்

கடலோரக் கவிதைகள் – விசா வாங்கியபின்னர் மெரினா பீச்சில் பாடுவது

அந்த 7 நாட்கள் – H1 விசா வாங்கியதற்கும் அமெரிக்கவில் இறங்குவதற்கும் இடையே உள்ள கால இடைவெளி

சவாலுக்கு சவால் – TCS பாண்டை உடைப்பது

மின்சாரக் கனவு – கிரீன் கார்ட்(பச்சை அட்டை)

சகலகலா வல்லவன் – பில் கேட்ஸ்

நீரும் நெருப்பும் – மைக்ரோசாப்ட் ஐபிஎம்

நேருக்கு நேர் – நெட்ஸ்கேப்பும் எக்ஸ்புலோரரும்

பார்த்தால் பசி தீரும் – மின்வலையில் நேர்வது

பட்டிக்காடா பட்டணமா ? – லெகஸி ஸிஸ்டமா, கிளையண்ட் சர்வரா ?

புன்னகை மன்னன் – நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாத புரோஜக்ட் மேனேஜர்

டிக் டிக் டிக் – கிளையண்ட் அலுவலகத்தில் முதல் நாள்

ஓட்டம் – முதல் பாடி ஷாப்பரை விட்டு ஓடுவது

அலைகள் ஓய்வதில்லை – கம்பெனி விட்டு கம்பெனி ஓடிக்கொண்டே இருப்பது

நல்லவனுக்கு நல்லவன் – பெஞ்சில் இருக்கும் போதும் முழு சம்பளம் கொடுக்கும் கம்பெனி

அடிமைச் சங்கிலி – பாண்ட்

பசி – பெஞ்சில் சம்பளம் இல்லாமல்

வைதேகி காத்திருந்தால் – பெஞ்ச் முடிய காத்திருப்பது

படிக்காத மேதை – y2k புரோகிராமர்

சர்வர் சுந்தரம் – y2k வேலை முடிந்ததும்

பயணங்கள் முடிவதில்லை – புரோகிராமில் உள்ள தவறுகளை களைவது

திருடா திருடா – அடுத்தவன் புரோகிராமை காப்பி அடிப்பது

எங்கேயோ கேட்ட குரல் – ஒரே ஒரு தடவை ஓடிய புரோகிராம்

ஆயிரத்தில் ஒருவன் – அஸெம்பிளி புரோகிராமர்

 

 

  Thinnai 2000 July 02

திண்ணை

Series Navigation

Scroll to Top