தமிழோவியத்தின் தீபாவளி மலர்

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

அறிவிப்பு


தீபாவளி நெருங்கிவிட்டது. தமிழோவியத்தின் தீபாவளி மலர் தயாரிப்பு வேலைகளையும் நாங்கள் துவக்கிவிட்டோம். சென்ற வருடம் மின்புத்தகமாக நாம் வெளியிட்ட தீபாவளி மலரை

4000க்கும் மேற்பட்ட வாசகர்கள் படித்து மகிழ்ந்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற தீபாவளி மலருக்கான படைப்புகளை அனுப்பியிருந்த அனைவருக்கும்

எங்களது மனமார்ந்த நன்றிகள்.

இந்த தீபாவளிக்கும் ஒரு ஸ்பெஷல் தீபாவளி மலர் தமிழோவியத்தின் மூலம் வெளிவரவுள்ளது. தீபாவளி மலருக்கான கதை, கட்டுரை, கவிதை, சிறு குறிப்புடன் நீங்கள் எடுத்த புகைப்படம்,

துணுக்கு மற்றும் நகைச்சுவை பகுதிகளை எங்களுக்கு அக்டோபர் 15ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பலாம்.

சென்ற வருட மலர்..

http://www.tamiloviam.com/ebook/html/download.asp ?id=DiwaliMalar2004.zip

—-

– உங்கள் படைப்புகள் Tscii 1.7 அல்லது யுனிகோடில் இருந்தல் நல்லது. Tscii 1.7 / Unicode ல் தட்டச்சு செய்ய முரசு , ஈகலப்பை , அழகி ஆகிய செயலிகளை உபயோகிக்கலாம்.

– ஒரே நேரத்தில் ஒரே படைப்பை பல இடங்களுக்கு அனுப்புவதை தவிர்த்தல் சிறப்பு.

– பிரசுரத்திற்கு வரும் படைப்புகளை வலையேற்றவோ / நிராகரிக்கவோ தமிழோவியம் ஆசிரியர் குழுவுக்கு அதிகாரம் உண்டு.

– கூடுமான வரை படைப்புகளில் பிழைதிருத்தம் மட்டுமே செய்யப்படும். படைப்புகளின் நீளமோ / கருத்தோ மாற்றம் செய்யப்பட மாட்டாது.

– உங்கள் படைப்புகளின் உரிமை உங்களுடையதே.

– உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : feedback@tamiloviam.com தலைப்பு : Deepavali Malar

– உங்கள் படைப்புகளை ஆவலோடு எதிர்கொள்ளும்…

தமிழோவியம் ஆசிரியர் குழு.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு