தகவல் பிழைக்கு வருந்துகிறேன்

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

கற்பகவிநாயகம்


****

திண்ணையில் நான் எழுதிய ‘சொல்ல மறந்த கதைகள்-கோல்வல்கர் பற்றி ‘ எனும் கட்டுரையில் 2 பிழைகள் எனது கவனக் குறைவால் ஏற்பட்டு விட்டன. அதற்காக வருந்துகிறேன்.

1) காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலை அடைந்தவர் கோல்வல்கர் அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர், வீர சர்க்கர் ஆவார்.

2) பார்வர்டு பிளாக்கில் இருந்து பின்னால் இந்து அமைப்பிற்கு வேலை செய்தவர் ரங்கசாமித் தேவர் ஆவார். அவரின் பெயர் கந்தசாமித்தேவர் எனத் தவறாக எழுதப்பட்டிருந்தது.

இனிமேல் இத்தகைய தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்வேன்.

இவ்விடத்திலும் சாவர்க்கரின் கொலைச்சதித் தொடர்பை நீதிபதிகள் சாட்சியங்களின் போதாமையால் நிராகரித்தாலும், அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்களைத் தருவது அவசியமாகிறது.

காந்தி கொலை சதி குறித்து விசாரிக்க ஜே. எல். கபூரின் தலைமையில் 1965ல் ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டது. அதில் சாவர்க்கரின் மெய்க்காப்பாளர்கள் அப்பா ராமச்சந்திர காசரும், செயலாளர் கஜனன் விஷ்ணு தாம்வேயும் சாட்சியம் அளித்தனர். காந்தி கொலை வழக்கில் அப்ரூவர் திகம்பர் பாட்கே கொடுத்த வாக்குமூலத்தையும், அப்போதைய இந்தி சினிமா நடிகை ஒருவரின் சாட்சியத்தையும் உண்மை என்றே ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இந்த விசாரணைக்கமிஷனின் விசாரணையின்போது சாவர்க்கர் உயிருடன் இல்லை. இயற்கை அழைத்துக்கொண்டு விட்டது. காந்தி கொலை வழக்கின்போதே அரசு போதிய கவனத்துடன் இதில் இருந்திருக்குமாயின், கோட்சேயைத் தூண்டியதற்காக சாவர்க்கரும் தண்டிக்கப்பட்டிருப்பார்.

****

vellaram@yahoo.com

Series Navigation