‘டென்ஸ் நே ப்யார் கியா! ‘

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

வாஞ்சி


‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ‘ என்பது போல ‘காமெடி கலாட்டாவெல்லாம் காதல் முதற்றே கல்லூாி ‘ எனலாம். அப்படியாகப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஸ்ரீ மகாகணம் காதல் டென்ஸ் வாழ்க்கையில் கபடி, கில்லிப்பந்து முதல் பேஸ்பால் வரை விளையாடியதில் ஆச்சிாியம் இல்லை தான்.

டென்ஸ் – இது என்ன பெயர் என்கிறிர்களா ? அப்பா,அம்மா வைக்கிறதெல்லாம் சும்மா உலுவலாங்காட்டி பெயர். வியாதியே உடம்பாயிருக்கிவன் பெயரைக் கேட்டால் ‘ஆரோக்கியசாமி ‘ என்பான். கோக்(சோடாவெல்லாம் இப்ப அவுட்!) புட்டிக்காரன் பெயரைக் கேட்டால் ‘கண்ணாயிரம் ‘ என்பான். காலேஜால் வைக்கபபடும் (பட்டப் ?) பெயர் தான் அப்படியே குணாதிசயங்களை உாித்துக் காட்டும். நம்ம தோஸ்த் பெயரும் அப்படிதான். நம்ம ஆளு செம டென்ஷன் பார்ட்டி. கண்ணை கொஞ்சம் தாழ்த்தினால், மூக்கு நுனி தரையை மறைக்கிற அளவுக்கு நீளமான மூக்கு. அந்த மூக்கை சாியாக உபயோகிக்க வேண்டும் என்பத்ற்காகவே அணிந்தது போல ஒரு கண்ணாடி. ‘கண்ணாடி அணிந்ததால் மூக்கு வளர்ந்ததா ? மூக்கு வளர்ந்ததால் கண்ணாடி அணிந்தானா ? ‘ என்று பட்டிமன்றமே வைக்கலாம்.

காலேஜ் வந்த முதல் நாளே, டென்ஸ் இரவு எழரைக்கு ‘ஐயோ! அம்மா! ‘ என்று அலறிக் கொண்டு ரூமிலிருந்து வெளியே வந்தான். கையெல்லாம் ஒரே இரத்தம். ஹாஸ்டல் வார்டன் முதலுதவி பெட்டியை முதல் நாளே திறக்க வேண்டியதாயிற்று. ‘எப்படிடா ஆச்சு ? ‘ என்று கேட்டோம். டென்ஸாற்க்கு தலைவலி மாத்திரை தேவைப்பட்டிருக்கிறது . நார்மலாக உள்ள டென்ஷனோடு தலைவலி டென்ஷன் சேர்ந்து கொள்ள, டென்ஸாற்கு மாத்திரையை கையால் கவாில் இருந்து எடுக்க வரவில்லை. ஆதலால் மாத்திரை கவரை விரல் இடுக்கில் பிடித்துக் கொண்டு, நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் இன்னொரு கையால் அன்றுதான் வாங்கிய கூரான ஸவன் ாஓா க்ளாக்கை இழுக்க அது மாத்திரை கவரைத் தாண்டி விரலை பதம் பார்த்து விட்டது. அன்று அவனுக்கு சூட்டப்பட்ட நாமகரணம் தான் டென்ஸ்.

நாங்கள் படிப்பது வட இந்தியாவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூாி. நானும் அவனும் பக்கத்து பக்கத்து அறை என்பதாலோ என்னவோ, டென்ஸான் இனை பிாியாத ஃபிரெண்டு, ஃபிலாஸஃபர் மற்றும் கைட் நானானேன். நம்மகிட்ட கேட்காம அது எதுவும் செய்யாது. அப்படி ஒரு நாள் அவன் என்கிட்ட வந்து சொன்னதைக் கேட்டு நான் ஆடிப் போயிட்டேன். டென்ஸ் காதல் வயப்பட்டுவிட்டான். இதில் என்ன பொிய விஷயம் என்கிறீர்களா ? அவன் சைட் அடிக்கிற பிகர் ஒரு வட நாட்டுப் பெண் – பெயர் ஸாாிஷா . பெயரை தமிழில் எழுதுவது கூடக் கடினம். அவளிடம் ாதமிழ்ா என்றால் ாகிலோ என்ன விலை ?ா என்று கேட்பாள். அதுவாவது பரவாயில்லை. டென்ஸாற்கு ஹாந்தியின் அளவு கோலே தொியாது. அதாவது கிலோ என்ன விலை என்று கேட்பதா ? லிட்டர் என்ன விலை என்று கேட்பதா ? என்றே தொியாது. ஆங்கிலத்தை நம்பி கடலை முயற்சியில் ஈடுபடுவது மண் குதிரையை நம்பி நயாகராவில் இறங்குவது மாதிாி. தனது மொழி தொியாதவனிடம் பெண்ணிற்கு ஈடுபாடு வருமோ ?

காதல் என்று வந்து விட்டால் பிரச்சனை இருக்க தானே செய்யும். ‘ காதலுக்கு உதவுபவனே நண்பன் ‘ என்ற காலேஜ் புதுமொழிக்கேற்ப மொழிப் பிரச்சினையால் விழி பிதுங்கிய டென்ஸாற்கு நான் உதவி செய்ய சித்தமானேன். ஆனால் அதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அந்த ரகசியத்தை உங்களிடம் மட்டும் சொல்கிறேன். ஸாாிஷாவோட வலது கை நண்பி – சோனியா. அவள் மீது எனக்கு ஒரு கண், இல்லை இல்லை இரண்டு கண்ணும். டென்ஸாற்கு உதவுகிற சாக்கில் எவனோட கிண்டலுக்கும் ஆளாகாம நம்ம ரூட் விடலாம். ஒரே கல்லில் இரண்டு மாம்பழம். (எனக்கு என்ன மசக்கையா ? மாங்காயை வைச்சு என்ன பண்றது ?) நான் எப்படி ஒரு ஹாந்திப் பெண்ணிற்கு லைன் விடலாம் என்ற உங்கள் புத்திசாலித்தனமான கேள்வி எனக்கு கேட்கிறது. நானொரு ஹாந்தி பண்டிட். சும்மா கும்பலோட கோவிந்தாவா எப்பவோ படித்த ஹாந்தி இப்பொழுது சிறு துரும்பாகி பல் குத்த உதவுகிறது.

டென்ஸான் காதல் முயற்சியில் முதல் வேலையாக நானும் டென்ஸ ‘ம் பிளாட்பார்ம் கடைகளில் ‘ஹாந்தி கற்றுக் கொள்ளுங்கள் ‘ புத்தகம் தேடினோம். ’21 நாட்களில் ஹாந்தி ‘ என்ற புத்தகம் மாட்டியது. டென்ஸ் கடைக்காரனிடம் இதை விட கம்மியான நாட்களில் கற்று கொள்கிற மாதிாி புத்தகம் இருக்கிறதா என்று கேட்க கடைக்காரன் டென்ஷனானான். அடுத்த 21 நாட்கள், நான் கண்ணன் ஆனேன், டென்ஸ் அர்ச்சுனன் ஆனான். அதாவது நான் டென்ஸாற்கு ஹாந்தி கற்று கொடுக்க ஆரம்பித்தேன். பாவம் டென்ஸ் ! ‘தும்ஹாரா நாம் க்யா ஹை ? ‘ ‘மெரா நாம் டென்ஸ் ஹை ‘ என்று தனக்கு தானே ஹை ஹை என குதிரை ஓட்டத் தொடங்கினான். டென்ஸ் இரவும் பகலுமாக அந்த புத்தகத்தை பத்தரை நாட்களில் படித்து முடித்தான்.

பின்பு பேச்சு பயிற்சிக்காக நாங்கள் கையில் நோட்டும் பேனாவுமாக தியேட்டர் தியேட்டராக ஏறி இறங்கி ஹாந்திப் படம் பார்த்தோம். டென்ஸ் தான் எடுத்த நோட்ஸால் இருந்து படம் முடிந்ததும் என்னிடம் சந்தேகம் கேட்பான். உதாரணம் –

‘ அது என்னடா, கதாநாயகன் கதாநாயகியை பார்த்து ‘ருக்கு ஜா ருக்கு ஜா ‘ ன்னு சொல்லறான். ருக்குன்னா நில்லுன்னு அர்த்தம், ஜான்னா போன்னு அர்த்தம்.இப்போ நில்லுன்னு சொல்றானா போன்னு சொல்றானா ? ‘

– நான் ‘குழந்தையெல்லாம் எப்படிப்பா பிறக்கும் ? என்ற மகனின் கேள்விக்கு பதில் சொல்லத் தொியாத தந்தை மாதிாி பேந்த பேந்த முழிப்பேன்.

அடுத்தது நாங்கள் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவுமா என்று ஆராய செயலில் இறங்க முடிவு செய்தோம்.

முயற்சி ஓன்று :

‘ டென்ஸ், இப்போ உனக்கு ஹாந்தி பேசத் தொியும்னு அந்த பெண்ணுக்குப் புாியனும். அப்பிடின்னாதான் உன் கூட பேசறதுக்கு அவளுக்கு ஈடுபாடு வரும். அதனால என்ன பண்ற, ஏதாவது பொது இடத்திலே அவளுக்கு முன்னால் நீ ஹாந்தியிலே பேசற. ஒகேயா ? ‘.

‘ ஒகேடா ‘.

ஸாாிஷா (கூடவே நம்ம சோனியாவும் தான்) நாள் தவறாமல் கல்லூாி வாசலில் உள்ள பழக்கடைக்கு வருவார்கள். அன்று நானும் டென்ஸ் அவள் வருகைக்காக அங்கு தவம் கிடந்தோம். ஸாாிஷாவும் சோனியாவும் கலகலவென்று சிாித்துக் கொண்டே சைக்கிளில் வந்து சேர்ந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் சாவே உனக்கு ஒரு சாவு வராதா என்ற எழுதிய கண்ணதாசன் நடையில் கனிகளே இங்கு கனிகள் வாங்க வந்தனவா என்று கவிதை எழுத ஆரம்பித்தேன். டென்ஸ் உசிப்பினான்.

‘ டென்ஸ், இது தாண்டா சந்தர்ப்பம். போடா! போய் அந்தக் கடையிலே அவங்க முன்னால் ஹாந்தியில் பேசி ஏதாவது வாங்கு ! ‘

‘ சில்லறை இல்லடா! நூறு ரூபாயா இருக்கு ! ‘

‘ போடா அங்கே ! சில்லறை இல்லன்னா கடைக்காரன் கிட்டே கேளு ‘ – துரத்தினேன் டென்ஸை.

‘ சில்லறைக்கு என்னடா, ஹாந்திலே, அவசரத்துல மறக்குது ‘.

‘ குல்லாடா. குல்லான்னா சில்லறை. ‘.

டென்ஸ் வீர நடை போட்டு கடையை நெருங்கினான் –

‘ ஜா ! ‘ – டென்ஸ்.

‘ கியா ஹை ? ‘ – கடைக்காரன்.

அப்பொழுது ஓரக்கண்ணால் டென்ஸ் ஸாாிஷாவை நோக்க, அவளும் அவனை நோக்க, ‘ காக்க காக்க கனகவேல் காக்க ‘ என்று டென்ஸ் மனதிற்குள் கந்த சஷ்டி கவசம் சொன்னான். ஆனால் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலன், பிரதருக்கு உதவுவானா ?

‘ சவ்… சவ்… ‘ டென்ஷனில் வாய் குழறியது டென்ஸ். .

‘ க்யா ஹை ? ‘ – கடைக்காரன்.

‘ நஹா நஹா, ஜா சவ் ருபயா கேலியே கேலா ஹை ? ‘.

போச்சு ! கேலான்னா வாழைப்பழம். குல்லான்னா சில்லறை. டென்ஸ் பதற்றத்தில் குல்லாவிற்கு பதில் கேலா என்று சொல்லி விட்டது.

‘ சவ் ருபயா கேலியே கேலா ? ‘. கடைக்காரன் அரை மயக்கமானான்.

‘ ஜா ஹாங், சவ் ருபயா கேலியே கேலா சாஹாயே ‘

ஸாாிஷாவும் சோனியாவும் ஆச்சிாியத்துடன் டென்ஸைப் பார்த்தார்கள்.

பிறகு என்ன ? அன்று முழு ஹாஸ்டலுக்கும் நாங்கள் தலையில் குல்லா போட்டுக் கொண்டு கேலா விநியோகித்தோம்.

முயற்சி இரண்டு :

நாங்கள் தோல்வியால் துவண்டு போகவில்லை. காலேஜ் ஒரு சிம்லா சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து எங்கள் அடுத்த முயற்சிக்கு மேடை போட்டுக் கொடுத்தது. ஒரே பேருந்தில் எல்லோரும் சேர்ந்து போவதென்றால் கும்மாளம் தானே! வழியில் பேருந்து மதிய உணவிற்காக நின்றது.

இறங்கியவுடன் நாங்கள் மூளையை கசக்க ஆரம்பித்தோம். வழக்கம் போல் எனக்கே ஐடியா கிடைத்தது.

‘ டென்ஸ், பஸ் கிளம்பற வரைக்கும் நான் ஏற மாட்டேன். நீ ஏறி உட்கார்ந்துக்கோ. பஸ் கிளம்பும் போது இன்னும் ஒருத்தன் ஏறலைன்னு ஹாந்தியிலே கத்திச் சொல்லு. இதனால் உனக்கு ஹாந்தி தொியும்னு அவங்களுக்கு தொிய வரும். சாியா ? ‘

டென்ஸ் பிரகாசமானான். பஸ் ஏறினான். நான் ஏறத்தாழ ஒளிந்து கொண்டேன். பேருந்து கிளம்பியது. ஓட்டுனர் மதிய உணவு சாப்பிட்ட உற்சாகத்தில் படு வேகத்துடன் வண்டியை எடுக்க, டென்ஸ் டென்ஷனாகி எழுந்து கத்தினான்.

‘ காடி ருகோ ! காடி கே நீசே ஏக் ஆத்மி ஹை! ‘.

டென்ஸ் கத்தியதற்கு ஹாந்தியில் ஏறக்குறைய வண்டியின் கீழே பல்சக்கரம் டயர்களில் மாட்டிக் கொண்டு ஒருவன் சாகக் கிடக்கிறான் என்று அர்த்தம். பாவம் அந்த ஓட்டுனர். மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்து விட்டது அவருக்கு. சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி விட்டு மயக்கம் போட்டு விட்டார்.

இப்படியாக எங்கள் முயற்சிகள் திருவினையாகாமல் வினையில் முடிந்த வண்ணம் இருந்தன. ஆனால் ஆண்டவனின் கருணையே கருணை! கல்லூாியில் தொழிற் கல்வி பயிற்சிக்காக மாணவர்களை நால்வர் அணியாக பிாித்து செயல்முறை வகுப்பு கொடுப்பது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு நால்வர் அணியில் நான், டென்ஸ், ஸாாிஷா…முக்கியமாக சோனியா. அன்று முதல் டென்ஸாற்க்கும், எனக்கும் சாலையின் மேடு பள்ளங்களால் எந்த ஒரு கஷ்டங்களும் இல்லை. ஏனென்றால் நாங்கள் சந்தோஷத்தில் பறக்க ஆரம்பித்து விட்டோம். காலேஜாற்குள் பொது மொழியான ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற சட்டம் இருந்ததனால் டென்ஸான் ஹாந்திப் புலமைக்கு நல்ல வேளையாக வேலை இருக்கவில்லை.

பிறகு என்ன ? உஷார் செய்வது, கடலை போடுவது, ஜொள்ளு விடுவது, ஃபிகர் மடிப்பது – என்று பல்வேறு காலேஜ்களில் பல்வேறு பெயர்களால் வர்ணிக்கப்படும் கலையே, எனக்கும் டென்ஸாற்கும் முழு நேர வேலையானது. அந்த வருட நாள் காட்டியின் தாள்கள் குறையக் குறைய எங்கள் நால்வாின் நட்பு வளர்ந்தது.

செமஸ்டர் முடியும் நாள் நெருங்க நாங்கள் பதட்டமானோம். வழக்கம் போல் மூளை கசக்கல் ! டென்ஸாற்கு பேசும் பொழுது டென்ஷனில் வாய் குழறுக் கூடும் என்பதால், தொன்று தொட்டு வரும் முறையான காதல் கடிதத்தில் இறங்க முடிவெடுத்தோம். நான் உஷாராக, டென்ஸான் காதல் கடித டெஸ்ட் ாிசல்ட் பார்த்து விட்டு சோனியாவிடம் ‘ காதலில் எந்த வகை கூறு ? ‘ என்று கேட்க முடிவு எடுத்தேன்.

மறுநாள் சாயுங்காலம். நான் டென்ஸான் காதல் ாிசல்ட்டிற்காக கையும் காலும் ஓடமால் ஹாஸ்டல் படிக்கட்டில் உட்கார்ந்து காத்திருந்தேன். டென்ஸ் மிகவும் சோகமாக வந்தான்.

‘ என்னடா ? என்ன ஆச்சு ? லெட்டர் கொடுத்தியா ? ‘

‘ இல்லடா. அவ எனக்கு முன்னால லெட்டர் கொடுத்துட்டா. என்னை பேக்குன்னு சொல்லிட்டாடா ! ‘

டென்ஸான் குரல் கரகரத்தது. என் கையில் நாளாக மடித்த அந்த லெட்டரைத் தந்தான். மடித்த பாகத்தில் ‘ பேக்கு ‘ என்று பொிதாக எழுதியிருந்தது. லெட்டரைப் பிாித்துப் பார்த்தேன்.

‘ டேய் ! டென்ஸூ….! ‘

– எனது சந்தோஷக் கதறலில் டென்ஸ் குழப்பமானான். பிாித்த லெட்டரை அவனிடம் காட்டினேன். அதில் ‘ மேரா தில் தேர லியே பேக்கரார் ஹை ! ‘ என்று எழுதியிருந்தது. அப்படியென்றால் ‘ எனது உள்ளம் உனக்காக தவிக்கிறது ‘ என்று அர்த்தம். டென்ஸ் பேக்கராாில் உள்ள ‘ பேக் ‘ கைப் பார்த்து குழம்பியிருக்கிறான். ஆனால் நான் விவரமாக விளக்கிய பின்பும் டென்ஸ் முகத்தில் சந்தோஷ பல்பு ஏறியவில்லை.

‘ என்னடா, இன்னும் என்ன ? ‘

‘ இல்லடா…அந்த லெட்டரை கொடுத்தது…. ‘

‘ கொடுத்தது … ? ? ‘

‘ சோனியாடா! ‘

எனக்கு தலை சுற்றியது. வேகமாக தாடி வளர்ந்தது. என் கனவெல்லாம் இப்படி அரவிந்தசாமின் மின்சாரக் கனவாகி விட்டதே ! நானும் டென்ஸ ‘ம் கோவென்று அழத் தொடங்கினோம்.

***

nvanjee@yahoo.com

Series Navigation

வாஞ்சி

வாஞ்சி