டாக்டரும் கத்திாிக்கோலும்.[டாக்டர் ஒருவர் பேஷண்ட் வயிற்றில் கத்தாிக்கோலை வைத்துத் தைத்துவிட்டார் என்ற செய்தி வாசித்தபின் உருவான

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

கோமதிநடராஜன்.


1- ‘எங்க ஊர் டாக்டர் ஆப்ரேஷன் பண்ணிட்டு பேஷண்ட் வயித்தில கத்திாிக்கோலை வச்சு தச்சிட்டார்டா! ‘

‘இதென்ன பிரமாதம்!எங்க ஊர் டாக்டர்,பேஷண்ட் வயித்துக்குள்ளே உட்கார்ந்துட்டுத் தன்னைத்தானே உள்ளே வச்சுத் தச்சிக்கிட்டார்டா ‘


2-அம்மா!என்னோட கத்திாிக்கோலைப் பார்த்தியாம்மா ? ‘

எங்கிட்டே கேட்டா ?உங்க அப்பாவைக் கேளு,எந்த பேஷண்ட் வயித்துக்குள்ளே ஒழிச்சு வச்சிருக்காரோ ? ‘


3-நர்ஸ்:டாக்டர்!டாக்டர்!கத்திாிக்கோலை உள்ளேவச்சு தச்சுகிட்டிருக்கீங்க…. ‘

டாக்டர்:உஷ்!சத்தம் போடாதே,இந்த பேஷண்ட்டுக்கு இன்னும் நாலஞ்சு சர்ஜாி பாக்கி இருக்கு,ஒவ்வொரு தடவையும் கத்திாிக்கோலைத் தேடிட்டு இருக்க முடியாது.


4-என்ன ஸார் இது ?மெடிக்கல் பில்லில் கத்திாிக்கோல் ரூபாய் 342.56பைசான்னு சேர்த்திருக்கீங்க ?!

பேஷண்ட் வயித்தில ஒரு கத்திாிக்கொலை வச்சு அனுப்பியிருக்கோமே , சந்தேகமா இருந்தா இதோ எக்ஸ்ரேல பாருங்க, நல்ல குவாலிட்டி சர்ஜிகல் ஸ்டெயின்லஸ் ஸ்டால் ஐட்டம்,க்ளியரா தொியுது பாருங்க!


5-மத்த டாக்டர்ஸ் மாதிாி எங்கடாக்டர்,அத்தனைஅஜாக்ரதையகத்திாிகோலையெல்லாம் உள்ளே வச்சு தச்சுட மாட்டார்… ‘

‘ரொம்ப சர்வஜாக்கிரதைன்னு சொல்லு. ‘

கத்திாிக்கோலை அதுக்கான டப்பாவோட சேர்த்து வச்சுதான் தைப்பார்,வயித்தில குத்தாது பாருங்க ? ‘


6- ‘டாக்டர்!என் வயித்துக்குள்ளே கத்திாிக்கோலை வச்சிட்டாங்க டாக்டர் ‘!

‘பயப்படாதீங்க!அது ஒரு மொட்டைக் கத்திாிக்கோல்தான்,அதனால ஆபத்து ஒண்ணும் இல்லை!


7- ‘ஆப்ரேஷனுக்குப் பிறகு உன் வீட்டுக்காரர் ரொம்பத்தான் மாறிட்டாடி,எதைச் சொன்னாலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசறார்டி ‘

‘மாட்டாரா பின்னே!அவர் வயித்துக்குள்ளே கத்திாிக்கோல் இருக்குதே! ‘


8-எண்டி !காயையெல்லாம் இப்படி முழுசு முழுசா சாம்பார்ல போட்டிருக்கியே மனுஷன்

எப்படிடி சாப்பிடறது ?

‘உங்கவயித்துக்குள்ளேதான் கத்திாிக்கோல் இருக்கே,வெட்டிச் சாப்பிட வேண்டியதுதானே ‘


Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்