ஞாபக வெற்றிடங்கள்

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

சேவியர்


0

ஒன்றன் மீது ஒன்றாய்
மனதுக்குள் அடுக்கி வைத்த
எண்ணங்களை
எழுத அமர்கிறேன்.

எண்ணங்களோ
கண்ணாமூச்சி ஆடிவிட்டு
காணாமல் போய்விடுகின்றன.

நேற்று
பேருந்தில் பயணித்தபோது
உள்ளுக்குள்
போர்க்களப் பரபரப்போடு
பவனி வந்த வார்த்தைகள்
இப்போது
நகர மறுத்து நிற்கின்றன.

யாரோ காலையில்
ஏதோ சொன்னார்கள்,
அது ஓர்
கவிதைக்கான கனத்தில் இருந்தது.

யாரோ எழுதிய
கடிதத்தை வாசிக்கையில்
உள்ளுக்குள்
சில
மின்மினிச் சிந்தனைகள் மிதந்தன.

மறந்து விட்டேன்.
எழுத நினைக்கையில்
எழ மறுக்கின்றன
நான்
மனசுக்குள் எழுதி முடித்திருந்த
கவிதைகள்.

இரயில் வண்டிகள்,
சாலையோரங்கள்,
தேனீர் விடுதிகள்,
அலுவலக படிக்கட்டுகள்
என
எங்கெங்கோ
தொலைத்து போயிருக்கக் கூடும்
என் கவிதைகள்.

0

சேவியர்

Series Navigation