ஞானியின் எதிர்பார்ப்புகள்

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

சின்னப்பயல்


ஞானியின்எதிர்பார்ப்புகள்அல்லதுஞானிஎன்று
சொல்லிக்கொள்பவரின்.

என்
மனம்என்வசப்படுமா
அதோடுபிறர்மனமும் ?

என்
அலைபாயும்எண்ணங்கள்என்னிலிருந்து
அகலுமா?

என்
நிஜத்தேடலைபிறர்அறியாவண்ணம்
பாதுகாக்கஇயலுமா..?

சகஞானியின்
கூட்டத்தைவிடஎனக்குகூடுதல்கூட்டம்
கூடுமா ?

அவ்வாறு
கூடியகூட்டத்தைஎன்கட்டுக்குள்
வைத்திருக்கஇயலுமா ?

வெள்ளைத்தோலுடையோர்என்
அங்கத்தினராவரா ?

தொலைக்காட்சியின்தொடர்
நிகழ்ச்சிக்குவாய்ப்புகள்குவியுமா ?

என்சித்துவேலைகள்
ரகசியமாகவேதொடருமா ?

புலித்தோலும்மான்தோலும்
தடைசெய்யப்பட்டதால்
என்ஆசனத்திற்கான
மென்பட்டுப்பூச்சிகளின்
கூட்டுக்கும்தடைவருமா ?

இட்டவசியமை
கூட்டம்முடியும்வரைகலையாதிருக்குமா ?

எனக்கே
பகுதிகூடவிளங்காதிருக்கும்என்பேச்சு
கூடியுள்ளவருக்குமுழுதும்விளங்காமலிருக்குமா..?

கடைசியாகஒன்று
தன்னைஉணர்ந்தவனேஞானி
என்றநிலைஅனைவர்க்கும்
தெரிந்துதான்போகுமா?

Series Navigation