ஞானவாணி விரூது 2004

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

அறிவிப்பு


வாழிய உலகநல நற்பணி மன்றம்

7,மங்களம் தெரு, ,

பழ்னி-624601.

ஞானவாணி விரூது 2004

அன்புடையீர்,

பழனியில் கடந்த 15ஆண்டு காலமாக வாழிய உலக நல

நற்பணி மன்றம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், சமூக

மேம்பாட்டிற்காகவும் தொண்டாற்றி வருகிறது . இப்பணியில் பள்ளி

மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் மாநில அளவில்

கல்லூரி மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு கவிதைப்

போட்டிகளைச் சிறப்பாக நடத்தி பரிசளித்து வருகின்றது.

ஆண்டுதோறும் தமிழில் வெளியான சிறந்த ஒரு தமிழ்

நூலிற்கு பத்தாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வெள்ளியிலான

பதக்கமும் கொண்ட ஞானவாணி என்ற விருதை வழங்கி தமிழ்

இலக்கியத்தின் மேம்பாட்டிற்கு தன் பங்கினை ஆற்றி வருவது

குறிப்பிடத்தக்கதாகும்.

2003ம் ஆண்டிற்கான ஞானவாணி விருது

திரு..எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி என்ற நாவலுக்கு

வழங்கப்பட்டது

2003ஆம் ஆண்டின் ஞானவாணி விருது பெற்ற

திரு.எ.ஸ்.ராமகிருஷ்ணனின் குறிப்பு :-

எஸ். ராமகிருஷ்ணன் சமகால தமிழ் இலக்கியத்தில் முக்கிய

படைப்பாளி, நாடகம் ,பத்திரிக்கை, இலக்கியம் ,சினிமா என்று

பல்வேறு தளங்களிலும் இருபது ஆண்டுகாலமாக தீவிரமாகி

இயங்கி வருபவர் . இவர் ஐந்து சிறுகதை தொகுதிகள் மூன்று

கட்டுரை தொகுதிகள் மற்றும் நான்கு நான்கு நாடகங்களை

எழுதியுள்ளார் . இவரது உப பாண்டவம் நாவல்

மகாபாரதத்தை மையமாக கொண்டது. . ஆனந்த விகடனில்

இவர் எழுதிய துணையெழுத்து பல்லாயிரம் வாசகர்களின்

பாரட்டுதலைப் பெற்றது .

இந்த ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும்

மூத்த தமிழ் அறிஞர்களைக் கெளரவிக்கும் வகையில் ரூ .25000/-

{இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாயும் }வெள்ளி பதக்கமும் கொண்ட

தமிழ் பரிதி விருது புதிதாக வழங்கப்பட உள்ளது.

2004 ஆம் ஆண்டிற்காக ஞானவாணி விருது ரூ… .15000/-

{பதினைந்தாயிரம் ரூபாயும்} வெள்ளிபதக்கமும் கூடியது .

இந்த விருதிற்கான பரிசீலனைக்காக ஜனவரி 2004 முதல்

டிசம்பர் 2004 வரையில் வெளியான கவிதை, சிறுகதை,

நாவல், கட்டுரைகள் ,மொழிபெயர்பு ம்ற்றும் ஆய்வு

நூற்களை கீழ்கண்ட முகவரிக்கு மார்ச் 30 தேதிக்குள்

பதிப்பாளர்களோ அல்லது எழுத்தாளர்களோ அனுப்பி

உதவ வேண்டுகீறோம் .

அனுப்ப வேண்டிய முகவரி:

இல.. ஞானசேகரன்

தலைவர் ,

வாழிய உலகநலநற்பணி மன்றம்.

7,மங்களம் தெரு , பழனி, தொலைபேசி: 98421 41633.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு