ஜேர்மனியில் நூல்தேட்டம் ஐந்தாவது தொகுதியின் வெளியீடு

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

அறிவிப்பு


நூலகவியலாளர் என் செல்வராஜா லண்டனிலிருந்து தொகுத்து வெளியிட்டு வரும் ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான வரலாற்றுப் பதிவேட்டின் ஐந்தாவது தொகுதியின் வெளியீட்டு நிகழ்வு இம்முறை ஜேர்மனியில் டோர்ட்முண்ட் நகரில் இடம்பெறவுள்ளது.
காலம் : ஞாயிறு 14 – 12 – 2008
இடம்: Rheinisehe Str 130 – 3rd Floor, 44147 Dortmunt – Germany
நேரம் : மாலை 3.00 மணி முதல் – 6.00 மணி வரை
ஜேர்மனியின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களும், நூல் வெளியீட்டாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து சிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இச்சந்திப்பை நூலகவியலாளர் திரு. என் செல்வராஜா அவர்கள் ஒழுங்குசெய்திருக்கின்றார்.
இவ்விலக்கிய நிகழ்வில் நூல்தேட்டம் தொகுதி ஐந்தின் வெளியீட்டு நிகழ்வுடன் இணைந்ததாக, புலம்பெயர்ந்த தமிழ் படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு முயற்சிகள் பற்றியும், அவற்றின் அச்சாக்கம், விநியோகம், போன்ற நடைமுறைச் சிக்கல்கள் போன்றவை பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடல் இடம்பெறும். ஜேர்மன்வாழ் படைப்பாளிகள் இந்நிகழ்விற்குத் தவறாது நேரில் சமுகமளித்து, நூலகவியலாளர் திரு. என்.செல்வராஜாவின் பாரிய பணிக்கு ஆதரவு நல்குமாறும், கலந்துரையாடலில் பங்கேற்று ஆரோக்கியமானதொரு நூல் வெளியீட்டுத்துறையினை புகலிடத்தில் வளர்த்தெடுக்கும் வகையில் தங்கள் கருத்துகளையும் பதிவுசெய்தகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
என். செல்வராஜா 0044 1582 703786.
மின்னஞ்சல் selvan@ntlworld.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு