ஜெய்பூர் கால்— டொக்டர் பிரமோத் கரன் சேத்தி மறைவு

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

நடேசன்ஏனது நண்பரை; ஒருவரை இருபது வருடங்களுக்கு பின்னால் இந்தியாவில் சந்தித்துவிட்டு பின்பு ஜெய்ப்பூர் செல்லத்தயாராகியபோது கேட்டேன்.

‘டொக்டர் சேத்தி எப்படி இருக்கிறார்?’

இந்த கிழமைதான இறந்துவட்டார்.’

டெல்லி குளிர்போல் மனத்தில் சோகம், மிகவும் நெருங்கிய ஒருவரை இழந்துவிட்டது போல இறுக்கமாக கவ்விக்கொணண்டது.

86; ஆண்டில் தமிழர் மருத்துவ நிதியத்தின் செயலாளரான நானும் நண்பன் டொக்டர் சிவநாதனும் அக்காலத்தில் ஜெயபூர் செயற்கை காலை அறிந்து , ஜெய்பூர் சென்றோம்

பும்பாயில் பரதம் பயின்ற சுதா சந்திரன் திருச்சியில் நடந்த விபத்தில் காலை இழந்து பு¢ன் ஜெய்பூர் செயற்கை காலை பொருத்திய பின் நடனமாடி மயூரி திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகையாக அறியப்பட்டார்.

எலும்பு சத்திர வைத்தியராகிய டொக்டர் பிரமோத் கரன் சேத்தி Dr Pramod Kran Sethi) ராம் சந்தரால் (Ram Chandar )ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட அலுமினியத்தால் ஆன இந்க செயற்கை கால்கள் டொக்டர் சேத்தியினால் முன்னேற்றமாக தரப்படுத்தப்பட்டு பலருக்கு பொருத்தப்பட்டது. இந்த கால்கள் காலணி அணியாதவர்கள்களுக்கு ஏற்றபடி உள்ளதால் மூன்றாம் உலக நாடுளில் வாழ்பவர்களுக்கு உகந்தது. மிகக் குறைந்த செலவில் கயாரிக்க முடியும்;.

ஜெயபூர் சென்ற நாங்கள் சேவா மான்சிங் வைத்தியசாலைக்கு சென்று விசாரித்தோம். அங்கு உள்ளவர்கள் தொலைபேசியில் “இலங்கைத்தமிழர்கள் இருவர் உங்களை தேடிவந்திருக்கிறார்கள்” என்றார்கள்.

“உடனே அனுப்பவும்”

இளம் காலை நேரத்தில் டொக்டர் சேத்தியின் வீட்டில் உபசரிக்கப்பட்டோம்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அழைப்பில் தான் ஆப்கானிஸ்த்தான் சென்றதையும் அங்கே ஜெயபூர் செயற்கை கால் செய்வதற்கு தாங்கள் பயிற்றுவத்ததையும் எமக்கு கூறினார்.
நாஙகள் இலங்கையில் நடக்கும் போரை விளக்கிவிட்டு ‘தற்பொழுது பெருமளவில் தேவை இல்லவிடினும் எதிர்காலத்தேவையைகருதி சிலரை செயற்கை கால் செய்வதில்
புயிற்றுவிக்கவிரும்புகிறோம்’

அதற்கான ஆவன செய்வதாக உறுதியளித்தார்.

சில மணி நேரம் அவருடன் பேசியதில் அவரது தாழ்மை உணர்வு என்னை மி¢கவும் கவர்தது. உலக புகழ் பெற்ற ஓதோபீடிக் சேர்ஜன் என்பதற்கான தன்மை எதுவும் அவரது வார்த்தையில் வெளிவரவில்லை. இறுதியில் ‘நீங்களா இந்த ஜெய்ப்பூர் காலை வடிவமைத்தது? என்ற எனது கேள்விக்கு அமைதியாக ‘அதன் பெருமை ராம் சந்தருக்கே சேரும்’ என்றார்.

மூன்றுதடவை ஜெய்ப்பூர் சென்று 18 இலங்கைத் தமிழர்களை பயிற்றுவித்தோம்.
இதன் பின் இலங்கையர் பலர் அரசாங்கத்தின் சார்பில் பயிற்றப்பட்டனர்.

எலும்பு சத்திர வைத்தியராகிய டொக்டர் பிரமோத் கரன் சேத்தி பேராசிரியராக இருந்து இழைப்பாறியவர். இவரது சேவை இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ கொடுத்தும் பிலிப்பைன்ஸ் அரசால் ராமன் மகக்¡ஸே விருதும் அளித்தும் கெளரவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே சொந்தமான டொக்டர் சேத்தி தனது 80 பது வயதில் இவ்வருடம் ஜனவரி 5 ம் திகதி காலமானார்


Series Navigation

நடேசன்

நடேசன்