ஜெயமோகன் ஆதரவு கடிதம் பற்றி

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

பெ.அய்யனார்


திண்ணை இதழில் ஜெயமோகனுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகக் கட்டுரை வெளியிட்ட ஆனந்தவிகடன் இதழுக்குத் தெரிவித்துள்ள கண்டனத்தில் மூத்த மற்றும் பல எழுத்தாளர்களும் கையொப்பமிட்டிருப்பது ஆரோக்கியமான போக்காகும்.

ஜெயமோகனின் இலக்கியப் பங்களிப்பைக் கவனத்தில் கொள்ளாமலும் எந்தவித விமர்சன பார்வை இல்லாமலும் ஆனந்தவிகடன் கட்டுரை வெளியிட்டிருப்பது ஆபத்தான செயலாகும்.

இதேபோல் சாருநிவேதிதாவை ஆபாச எழுத்தாளராக மாற்றலாம். ச.பாலமுருகனை தீவிரவாத எழுத்தாளராக்கலாம். இப்போது தீவிரமாக எழுதிவரும் பெண் கவிஞர்களை அவர்களுக்கு எதிராகவே திருப்பிவிடலாம்.

இப்போதைய இலக்கிய அரசியல்போக்கில் ஜெயமோகன் நன்றாக மாட்டிக் கொண்டார் என நினைப்பவர்கள்கூட இருக்கலாம். ஆனால் நவீன இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்களை மறுபடியும் ஏடாகூடமாக மாட்டிவிடமாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இதன் மூலம் எனது கண்டணத்தையும்; பதிவு செய்ய விரும்புகிறேன்.

அன்புடன்

பெ.அய்யனார்
ayyapillai@gmail.com

Series Navigation

பெ.அய்யனார்

பெ.அய்யனார்