ஜெனிபர் லோபஸ்:

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

கே ஆர் விஜய்


அவளோட பேரை ஒழுங்கா சொல்லுடா ! என் காதுல ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி விழுது !

சரி சரி நீயே சொல்லு !

Helen Hunt. அதை அப்படி லைட்டா சொல்லணும். அழுத்திச் சொன்னா அசிங்கமா இருக்குது. புரியுதா ?

கேவலமான பிறவிடா நீ.

நானா ? ? ?

அவளை இதுக்கு முன்ன எப்பவோ பார்த்தது அதான் தப்பா சொல்லிட்டேன் ..

தப்பா சொன்னதும் இல்லாம சப்பைகட்டு கட்டாத… போன வாரம் சினிமாக்ஸ்(cinemax) சேனல்ல ‘As good as it gets ‘ பார்த்தோமே, அதுல கூட இவ தான் ஹீரோயின். விட்டுத் தள்ளு ! ஜோதிகாவும் சிம்ரனும் உன் மனசுல நிக்கிற அளவுக்கு ஹெலனும் ஜெ.லோவும் நிக்க மாட்டாங்க.

மறுபடியும் சண்டை வேணாம். போன சனிக்கிழமை சண்டையே இன்னும் முடிஞ்ச பாடில்லை. அதுக்குள்ள அடுத்ததை ஆரம்பிச்சிடாத… என்னால உன்கிட்ட சண்டை போடமுடியாது

சரி ! நான் பேஸ் பால் விளையாடப் போறேன். அப்படியே பக்கத்துல இருக்க சப் வே(subway)ல சாப்பிட்டு மதியம் தான் வருவேன். உன்னோட ப்ளான் என்ன ?

கொஞ்ச நேரம் தூங்கிட்டு, புதுப்படம் வந்திருக்காம். ஹீரோ விக்ரம். த்ரிஷான்னு ஒரு புதுப் பொண்ணு நடிச்சது. நல்லா இருக்குண்ணு விக்கி சொன்னான். படம் பேரு தான் மறந்து போச்சு. உனக்கு விக்ரம் பிடிக்குமா ?

ம்ம்.. பேர் கேள்விப் பட்டிருக்கேன். ஆனா படம் ஏதாவது பார்த்திருக்கேனான்னு சரியா தெரியலை.

‘உல்லாசம் ‘ ல அஜீத்தோட நடிச்ச …

யு.எஸ் வந்த புதுசுல பார்த்தது. அப்புறம் வேற எந்த படத்துலயும் நடிக்கலையா ?

டே ! விக்ரம் தான் இப்ப நம்பர் ஒன் ஹீரோ.. நான் இங்க வர்ரதுக்கு முன்ன ‘சேது ‘ ன்னு ஒரு படம். தமிழ்நாட்டையே புரட்டி போட்டுச்சு.. அது தான் விக்ரமுக்கு டர்னிங் பாயின்ட்..

சரி உன்னோட கதை கேட்க எனக்கு நேரமில்லை. அலன் வில் பீ வெயிட்டிங் தேர் ஃபார் மீ … சீ யூ..

*******

விக்கி! நான் சிவா பேசறேன்.

சொல்லுடா சிவா, என்ன பண்ணிட்டு இருக்க ?

சும்மா தான் இருக்கேன். விக்ரமோட புதுப்படம் பேரு என்ன சொன்ன.

சாமி ..

கலக்கல் படம்டா ! நம்ம ஊர்ல பிச்சிக்கிட்டு ஓடுதாம். ஒருதடவை தாராளமா பார்க்கலாம். பக்கத்துல இருக்க தியேட்டர்ல ஓடுச்சுன்னா போயிப் பார்ரேன்.

ம்ம்ம்..

உன் ரூம் மேட் என்ன சொல்றான் ?

அவன் கிடக்குறான். பாதி அமெரிக்கன். A B C D .

என்ன ?

American Born Confused Desi

ஏன்டா ? அஜய்க்கு என்ன ?

அவரு இப்ப அஜய் இல்லை. ஏஜே .. யார் கேட்டாலும் பேரை ஏஜே-ன்னு தான் சொல்றான். எதோ அமெரிக்கனுங்க கேட்டு சொன்னாலும் பரவாயில்லை நம்ம குமார் போனவாரம் வீட்டுக்கு வந்தப்போ கூட ஏஜேன்னு சொன்னான். ஒரு வார்த்தை தமிழ்ல பேசலை. அவன் நொந்து புலம்பிட்டு போயிட்டான்.

இப்ப வீட்ல இல்லையா ?

தலைவர் பேஸ் பால் விளையாடப் போயிருக்கார்.

நீயும் போக வேண்டியது தான ?

நமக்கு கிரிக்கெட் தான். அடுத்த வாரத்துல இருந்து விளையாட ஆரம்பிக்கணும்.

அப்புறம் வீட்ல கல்யாணம் பத்தி ஏதாவது ?

அதை ஏண்டா கேக்குறா ? வயசாகிக் கிட்டே போகுதே ஒழிய வீட்ல யாரும் கண்டுக்கற மாதிரியே தெரியலை. நானே போய் எனக்கு எப்ப கல்யாணம்னு கேக்குற வரை எதுவும் நடக்குற மாதிரி தோணலை.

சரி ! பசங்க யாராவது வர்றாங்களான்னு பார்க்குறேன். வந்தா அப்படியே சாமி பார்த்துட்டு வந்து சாயந்திரமா போன் பண்றேன்.

அஜயைக் கூட்டிட்டுப் போக வேண்டியது தானே ?

அவனா… கட்டாயம் வரமாட்டான்.. ஏதாச்சும் குப்பை இங்கிலீஷ் படம் பார்ப்பானே ஒழிய தமிழ்ப் படத்துக்கு வரவே மாட்டான். அவன் போன 5 வருஷத்துல மொத்தமா பத்து தமிழ்ப் படம் கூட பார்த்தது இல்லையாம்.

அப்படியா ?

தலைவர் பேசினா .. டாம் குரூஸ்.. டாம் ஹேங்ஸ்.. ஜீலியா ராபர்ட்ஸ் .. ரெனி ஸால்வேகர் .. கிரிஸ்டினா அகரில்லா .. பிரிட்னி ஸ்பியர்ஸ் .. ஜெனிபர் லோபஸ்..ன்னு ஒரே ஹாலிவுட் மயம் தான்.

சிவா, நேரமாயிடுச்சு. சாயந்திரம் போன் பண்ணு. நான் சாப்பிட கிளம்புறேன்.

******

அஜய் ! என்ன கையில கட்டு ?

கிரவுண்ட்ல கல் தடுக்கி விழுந்து சிராய்ச்சிடுச்சு.

பார்த்து விளையாட …

இட்ஸ் ஓ.கே சிவா. இப்ப பரவாயில்லை. ஒண்ணும் பிரச்சினையில்லை.

டேக் ரெஸ்ட். நான் பக்கத்துல இருக்க மூவி-16 வரை போயிட்டு வந்துடறேன்.

என்ன படம் பார்க்க ?

சாமி !

ஓ! அதுதான் அந்த விக்ரம் படப் பேரா ?

நீயும் வர்ரீயா ?

நோ வே. நீ கிளம்பு.

ஒ.கே.. ஒன் மினிட் வெயிட் பண்ணு. நானும் வர்ரேன்.

படத்துக்கா ?

ஆமாம் ! charle ‘s Angeles பார்ட்-2 பார்க்கணும்.

யார் ஹீரோ ?

ஹீரோவா .. வெறும் ஹீரோயின்களின் படம்.. கேமரூன் டியாஸ்,ட்ரூ பாரி மோர், லூசி லூ, டெமி மூர்ன்னு ஒரே பொம்பளைங்க பட்டாளம்.

தனியாவா போற ?

படம் பார்க்குறதுக்கு துணை எதுக்கு ?

சிவா. என்னோட படம் 2 மணி நேரத்துல முடிஞ்சிடும். நான் வீட்டுக்குப் போயிட்டு அரை மணி நேரம் கழிச்சு வர்ரேன். அதுக்குள்ள படம் முடிஞ்சிடும் இல்ல.

ம்ம்ம்ம்…

*******

அஜே! எழுந்திடு. நேரமாயிடுச்சு.

ம்ம்.. இன்னும் அரை மணி நேரம் டா…. டெமி மூர் என்னைப் பாடா படுத்துறாடா..

படம் பார்த்து ரெண்டு நாளா புலம்பிட்டு இருக்க நீ ?

கனவைக் கலைக்காம கிளம்பு ..

சரி இன்னும் 15 நிமிஷம் உனக்காக காத்திருப்பேன். வரலைன்னா நான் மட்டும் கோவிலுக்குப் போகப் போறேன்.

நில்லு நில்லு! நானும் வர்ரேன். இங்க வந்ததிலிருந்து ரெண்டு மூணு தடவைக் கூட போனதில்லை. அம்மாவும் கோவில் போகச் சொல்லி அடிக்கடி புலம்பல்.

இன்னைக்கு பராசக்தி கோவில்ல விஷேசம் தெரியுமா ? நம்ம ஊர் மாதிரியே பால் குடம் – காவடியாட்டம் எல்லாம் உண்டு.

சரி வா ! எல்லாம் அங்க போய் பார்த்துக்கலாம்.

****

பார்த்தியா – கோவில்ல கூட்டத்தை.

அதான் எனக்கும் ஒரே ஆச்சர்யமா இருக்கு. இங்கு வந்தும் நம்ம பசங்க கோவில்ல சைட் அடிக்கிறத நிறுத்தலைன்னு நினைக்கிறேன்.

அஜே! இன்னைக்கு ஒரு நாளாவது நம்ம கல்சரை மதிச்சுப் பேசு! இதுக்கு மேல ஏதாவது கிண்டல் பண்ண எனக்குக் கெட்ட கோவம் வந்துடும்.

சாரி ! நான் என்ன சொல்ல வந்தேன்னா!

ப்ளீஸ் ஸ்டாப் இட்! இங்க இருக்கறது எல்லாம் யோக்கியம் .. அங்க நடக்குறது எல்லாம் அயோக்கியத்தனம்.. போதுமா ?

சாரி! சிவா ! ஐ அம் ரியலி சாரி !

சரி சரி ! கமான்! நம்ம உள்ள போயி பூஜையில கலந்துக்கலாம்.

சிவபூஜை தான..

ஆமா ?

சரி நீ முன்னாடி போயிட்டு இரு!நான் ஒரு நிமிஷம் அப்படியே சுத்தி பார்த்துட்டு வர்றேன்.

ஓ.கே.

**********

சிவா ஒரு நிமிஷம் இங்க வாயேன்!

என்ன ?

அங்க பாரு! அந்த இடத்துல பிள்ளையார் சிலை பக்கத்துல !

பிள்ளையார் சிலை பக்கத்துல என்ன ?

அந்தப் பொண்ணு தாண்டா …

டே ! கோவில்ல வந்து ?

சரி ! நீ சாமி கும்பிட்டு முடிச்சாச்சா ?

ம்..

கிளம்பு ..

எங்க

அந்தப் பொண்ணு போற வழியில தான்.

இங்க வந்தும் பாஃலோ பண்ணனுமா ?

ஆமா! இப்படி ஒரு ..

டே அவ பக்கத்து பில்டிங் போறா ! அதுவும் ஒரு சின்ன கோவில் தான்.

அப்ப வா அங்க போகலாம்.

இவ்வளவு அழகான பொண்ணுங்க கூட உண்டா ?

தமிழ்ப் பொண்ணா ? தெலுங்குப் பொண்ணான்னு தெரியலை.. எதுவா இருந்தாலும் ஓ.கே.

தமிழா தான் இருக்கும். கவலைப் படாத! பராசக்தி கோவிலுக்கு வர்ரதுல்ல 90% பேர் தமிழ் தான்.

ரொம்ப சந்தோஷம்.

*****

எக்ஸ்கியூஸ்மீ !

கவிதா ! உன்னை யாரோ கூப்பிடுறாங்க ?

யாரு ?

நான் தான். ஐ அம் ஏஜே. General Motorsல வேலை பார்க்குறேன். உங்களை இங்க அடிக்கடி பார்த்திருக்கேன். அடிக்கடி கோவில் வருவீங்களோ ?

ம்ம்ம்.. ஆனா நான் உங்களை இதுக்கு முன்ன பார்த்ததில்லையே.. ஆனா உங்க பக்கத்துல இருக்காரே இவரைப் பார்த்திருக்கேன்.

நான் ரொம்ப நேரம் கோவில்ல இருக்க மாட்டேன். வந்ததும் கொஞ்ச நேரத்துல போயிடுவேன். இந்த தடவை தான்.. அதுவும் உங்களைப் பார்த்ததும்…யூ ஆர் லுக்கிங் ரியலி ப்யூட்டிபுல்.

தேங்ஸ் ஏஜே.

நீங்க என்ன பண்றீங்க ?

டூயிங் மை எம். எஸ் இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன் வெயின் ஸ்டேட் யுனிவர்சிட்டி(wayne state university, michigan).

ஓ. தட் ஸ் க்ரேட்.

வாங்க நம்ம நடந்துகிட்டே பேசலாம்….

…..

…..

….

..

..

கவிதா, எனக்கு ரொம்ப பசிக்குது. நிம்மி நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா ! கமான் , லெட் அஸ் கோ.

ஓ.கே அஜே. நான் கிளம்புறேன். நேரமிருக்கும் போது போன்ல கூப்பிடுங்க. பாய்ய்ய்ய்ய்ய்ய்…

*********

கவிதா, சச் அ பியூட்டிபுல் கேர்ள்.

என்ன ஒரு ஹோம்லி லுக் பார்த்தியா ?

அவகிட்ட எதுவுமே குறை இல்ல…

அழகு, குணம்னு….. ஸோ க்ரேட் டா சிவா ! என்ன சொல்ற ?

நீ சொன்னா கரெக்ட் தான்

அதுல்லடா , அந்தக் கவிதா .. இந்தியப் பொண்ணுங்களுக்கு நிகரில்லை டா …

அவளோட ஒவ்வொரு பேச்சும் தெள்ளத் தெளிவா .. அருவி மாதிரி .. .

அதுசரி ! ஐயா எப்ப ஜெனிபர் லோபஸ் ல இருந்து ஜோதிகாவுக்கு மாறுனீங்க ?

அட போடா ! ஜெனிபர் லோபஸாம்… முழு உடம்பையும் திறந்து காட்டுரா.. அவளைப் போயி கவிதாவோட கம்பேர் பண்ணிட்டு..

பொண்ணுன்னா ஒரு அடக்கம் … அறிவு .. அழகு .. .அம்சம் …. இதெல்லாம் உனக்குப் புரியாது. நான் நாளைக்கு கோவிலுக்குப் போறேன். நீ வர்ரீயா ?

இல்லை அஜே. நேத்து அலன் போன் பண்ணி இருந்தார். நீ நாளைக்கு வரலைன்னு சொன்னியாமே ? பேஸ்பால் விளையாட வர்றீயான்னு கேட்டாரு. ஸோ ஐ அம் கோயிங் வித் ஹிம்.

சிவாவின் பேச்சை மெல்ல காதில் வாங்கியபடியே தன் அறையில் இருந்த ஜெனிபர் லோபஸ் படங்களை கிழித்துக் கொண்டிருந்தான் ஏஜே (என்கிற) அஜய்.

*****

கே ஆர் விஜய்

vijaygct@yahoo.com

Series Navigation