ஜமாத்தின் அதிகாரம் என்ன ? ஜமாத் தேவைதானா ?

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

மயிலாடுதுறை சிவா


ஆகஸ்ட் 11 2004. இந்த வாரம் தமிழ் நாட்டில் மதுரையில் ‘தமிழ்நாடு முஸ்லிம் பெண் முன்னேற்ற கழகத்தில் ‘ இருந்து ‘சாரிபா கானம் ‘ என்ற பெண் ‘ஜமாத்தில் ‘ உள்ள ஆண்வர்க்க மேலஆதிக்கத்தை மற்றும் ஜமாத்தில் உள்ளமுஸ்லிம் ஆண்களின் அராஜகத்தைத் தடுக்க வேண்டும் எனவும், தங்களுக்கு சரிக்கு நிகர் சமானம் வேண்டும் என்று, மனித உரிமைகள் கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்து உண்ணாவிரதமும் இருந்தார்.

நான் பிறந்து, வளர்ந்து, படித்த ஊர் மயிலாடுதுறை. முன்பு தஞ்சை மாவட்டம். தற்ப் பொழுது நாகை மாவட்டம். மயிலாடுதுறையைச் சுற்றி கிட்டத்தட்ட 50க்கும் மேற்ப் பட்ட முஸ்லிம் ஊர்கள். ஓவ்வொரு முஸ்லிம் குடும்பத்தில் இருந்தும் யாரவது ஓர் நபர் வெளிநாடுகளில் வேலைப் பார்ப்பது வழக்கம். குறிப்பாக மலேசியா, சீங்கப்பூர், ஓமன், மஸ்கட், துபாய், புருனே, சவுதி, அபுதாபி இப்படிப் பல நாடுகளில் வேலைப் பார்த்து அவர்களின் குடும்பங்களை முன்னேற்றுவது வழக்கம். மயிலாடுதுறை ஓர் சிறிய நகரம். அந்த ஊருக்கு முக்கிய வருமானம் விவசாயம் மற்றும் வியாபாரம் மட்டுமே. விவசாயம் முழுக்க முழுக்க காவேரி நீரை நம்பி உள்ளது.

வியாபாரத்தில் நிறைய முஸ்லிம் நபர்கள் உணவகம், துணிக் கடை, மளிகைக் கடை, இரும்பு வியாபாரம், திருமண விடுதிகள், மருந்தகம் இப்படிப் பல வியாபாரங்கள் செய்து வருவதை, நன்றாக நடப்பதை நான் கண்கூடப் பார்த்து இருக்கிறேன். இவை அனைத்தையும் நான் சொல்ல வந்தக் காரணம் தான் என்ன ?

எனது முஸ்லிம் நண்பர் ஓருவர் மிக பெரிய மளிகைகடை வைத்திருக்கிறார். வியாபாரமும் இன்றுவரை நன்கு ஆகிக் கொண்டுள்ளது. பாபர் மசூதி இடித்த நாளை டிசம்பர் 6ந் தேதியை முஸ்லிம்கள் கறுப்புத்தினமாக அறிவித்து அனைத்து முஸ்லிம் கடைகளையும் மூடுவது வழக்கம். எனது நண்பர் தீவர முஸ்லிம் ஆதரவாளர் என்றாலும் கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக அவர் தன்னுடைய வியாபாரத்திற்கு விடுமுறை விடுவது இல்லை. அதற்கு ஓரே காரணம் தனது வியாபாரம் பாதிக்கப் படுவது என்பது மட்டும்தான். இதனை பார்த்த தீவிர முஸ்லிம் உணர்வாளர்களில் சிலர், ஜமாத்தில் சொல்லி ‘அந்த ‘ கடைக்கு முஸ்லிம்கள் போக வேண்டாம் என்றும், அதனைப் புறக்கணிக்கச் சொல்லியும் சொல்லி விட்டார்கள். அதன் பிறகு சில காலகட்டத்திற்குப் பிறகு எனது நண்பரின் தகப்பனார்-பெரியப் பணக்காரர் இருந்தும் ஜமாத்துச் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக கேள்விப் பட்டேன். எது உண்மையோ ?

ஜமாத் எனபது என்ன ? அதன் அதிகாரம் என்ன ? ஏன் ஜமாத்தைப் பற்றி ஓர் முஸ்லிம் பெண் நபரே குற்றம் சாட்ட வேண்டும் ? ஜமாத்திற்கு என தனி சட்டத் திட்டங்கள் உள்ளாதா ?

அதை வரையறுப்பது யார் ? ஜமாத்தை எப்படி நிறுவுகிறார்கள் ? ஜமாதின் முடிவில் நீதிமன்றம் குறுக்கீட முடியுமா ? ஜமாத்திற்குக் கட்டுப் படுகிறவர்கள் நீதிமன்றக்கு கட்டுப் படாமால் இருக்கலாமா ?

ஜமாத்தில் தலைவரை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் ? ஓர் சாதரண எழை முஸ்லிம் ஜமாத் தலைவராக வர முடியுமா ? ஜமாத்தைப் பற்றி ஏதாவதுக் குறிப்புகள் புனித நூலான குர்ரானில் உள்ளனவா ?

ஜமாத்தில் பெண்களின் பங்கு என்ன ? பெண்கள் கலந்துக் கொள்ள முடியுமா ? அனைத்து முஸ்லிம்களும் ஜமாத்திற்குக் கட்டுப் பட்டுதான் ஆக வேண்டுமா ? ஜமாத் உண்மையில் தேவைதானா ?

திண்ணை முஸ்லிம் வாசகர்கள் இதனைத் தெளிவாக விளக்கினால் பரவாயில்லை ?

நன்றி.

மயிலாடுதுறை சிவா….

mpsiva23@yahoo.com

Series Navigation

மயிலாடுதுறை சிவா

மயிலாடுதுறை சிவா