சொர்க்கத்தின் குழந்தைகள்

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

ச. மணி ராமலிங்கம்


(Children Of Heaven என்ற ஈரானிய படத்தை மையமாக கொண்டு சில கற்பனை துளிகள்)

இரு காலணிக்காக
காலம் தவறாமல்
காத்துகிடக்கும்
இரு காரணிகள்
அலியும் சாராவும்…

காலணி சலவை நீரை
மூல பொருளாக
கொண்டு வெளிப்படும்
நுரை முட்டை விட
கணம் குறைந்து
விடுகிறது இதயம்…

சாரா தவறவிட்ட
ஒற்றை காலணியை
அடித்து செல்லும்
ஓடை நீரின் வேகத்தை
விட அதிக வேகமாய்
செல்லுகிறது நரம்பின்
இரத்த ஓட்டம்….

ஓட்டத்தில் முதலாய்
வந்து வெற்றி
கோப்பையுடன் தோற்று
நிற்பது அலியும்
என் மனதும்…

வாழ்ந்து முடித்த
எனது குழந்தை
பருவம் என்னும்
புத்தகத்தின் தவறவிட்ட
ஒரு பக்கமாக நினைத்து
மீண்டும் சேர்த்து
கொள்கிறேன் இந்த
காலணி கதையை….

ச. மணி ராமலிங்கம்

Series Navigation

author

ச. மணி ராமலிங்கம்

ச. மணி ராமலிங்கம்

Similar Posts