This entry is in the series 20020217_Issue

சுகந்தி சுப்ரமணியன்


ஒவ்வொரு நிமிடமும்
அழுது கொண்டிருந்தேன்
ஜன்னல்களும் கதவுகளும் மூடிக் கிடந்தன.
அறைகள் இருட்டியிருந்தது.
எல்லாம் மெளனமாய்.
கதவு மெல்ல அழைத்தது.
அழாதே சாபிடு என்றது.
கதவு திறந்தேன்
பேரிரைச்சலுடன் நகரத்தை
அதிகாலை தந்தது.
கொஞ்சம் சிரிப்புடன் தரையிறங்கினேன்.
என்னைக் கழுவு என்றது வாசல்.
கோலம் போடு என்றழைத்தது மண்.
எனக்காய் தண்ணீர்விடு
என்றழைத்தன செடிகள்.

(பறத்தல தன் சுதந்திரம் – தமிழ்ப் பெண் கவிதி

Series Navigation