சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, சூடாகும் கடல்நீர், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-10 [கடைசிக் கட்டுரை]

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

நிலக்கரி எஞ்சின் மூச்சு நின்றது!
எலக்டிரிக் வண்டி உயிர் பெற்றது!
நீராவி எஞ்சின்
ஆயுள் ஓய்வெடுத்து டீசல்
குதிரைகள் வாகனம் இழுத்தன!
குறைவாக்கப் பட்டாலும்,
தெரியாமல் தினமும்
தொழிற்கூடம் வெளியாக்கும்
கழிவுத் திரவங்கள் நதியில் கலக்கும்!
எரிப்பில் விளையும்
கரி வாயுக்களும்,
கந்தக வாயுக்களும்,
சூழ்வெளியில் கலந்து சூடேறும் பூகோளம்!
புப்புசங்கள் நுகர்ந்து
அப்பாவி மாந்தர் தீரா
நோயில் வீழ்வார்,
ஆயுளும் குன்றி விடும்!

“[கேட்ரீனா ஹரிக்கேன் நியூ ஆர்லியன்ஸ் நகரை நரகமாக்கிய பிறகும்] சூடேறும் பூகோள விளைவுகளின் கோரத்தைப் பற்றி அமெரிக்க நாட்டின் புஷ் நிர்வாகக் குழுவினர் அறிந்து கொள்ள, மாபெரும் அடுத்தொரு தாக்குதல் மூண்டு எழுவதற்குக் காத்திருப்பதாகத் தெரிகிறது.”

கிளாஸ் லாக்னர், பூதளப் பௌதிகர் [Klaus Lacknar, Geophysicist, California University]

ஹரிக்கேன் ஈசல்களாய் உற்பத்தியாகும் கடல்களில் உஷ்ண ஏற்றத்தால் சீறியடிக்கும் சூறாவளித் தாக்குதல்களுக்கு, இயற்கையின் நிகழ்ச்சிகளை மட்டும் காரணமாக எடுத்துக் கொண்டு விளக்கக் கூடாது! அறிவு சார்ந்த ஆழ்ந்த விளக்கத்தில் மனிதரின் தொழிற்துறை வினைகளும் அதனில் பெரும்பங்கு ஏற்கின்றன என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.”

டாம் விக்லி, நிகார் காலநிலைவாதி [Tom Wigley, Climatologist, National Center for Atmospheric Research (NCAR)]

“சூழ்வெளி நச்சுக் கலப்புகள் மக்களைப் பெருமளவில் பாதிக்கின்றன. தொழிற்துறைக் கூடங்களின் கழிவு வெளியேற்றத் தவறுகள் பாதுகாப்பளவு வரம்புகளை மீறி விட்டதாக மாந்தர் உள்ளார உணர்கிறார். உலகச் சூழ்மண்டலத்தைச் சுத்த மாக்கவும், மனிதர் வாழத் தகுந்த சீர்தள மாக்கவும், எதிர்காலச் சந்ததிகளுக்கு ஏற்றதோர் தூய பூதளத்தை வடிக்கவும் மாந்தர் விரும்புகிறார்.”

ஜேம்ஸ் கஸ்டாவ் ஸ்பெத், அதிபர், உலக மூலச்சமூகக் கூடம் [James Gustave Speth, President World Resources Institutute]

“மனித இனங்கள், உயிரினங்கள், பயிரினங்கள் ஆகியவை அனைத்தும் சமநலச் செம்மையோடு வளரும் ஓர் உலகத்தை ஆரம்பிக்க எல்லோரும் ஒன்றாக உழைக்கப் போவது ஒரு மாபெரும் சவாலாக இருக்கப் போகிறது.”

ஜெரமி வைஸ்னர் [Jerome Wiesner, President Emeritus M.I.T]

“காலநிலைச் சுற்றுப் போக்கு [Climate Cycles] பரிதியின் கதிர்வீச்சு [Solar Radiation] பூகோளத்தின் மட்டரேகையில் படுவதாலும், விழும் காலத்தைப் பொருத்தும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்று வித வேறுபாடுகளால் மாறுபடுகின்றன. முதலாவது பூமி பரிதியை வலம்வரும் சுற்றுவீதி [Orbit] எப்போதும் முழு வட்டமா யில்லாது சற்று நீள்வட்டமாகி மீண்டும் வட்டமாகிறது! இரண்டாவது பூமி ஆடுமோர் பம்பரம் போன்று தலை சுற்றுகிறது [Spin Axis Wobble or Precession]! மூன்றாவது பூகோளத்தின் மத்திம ரேகைத் தளத்திற்கும், சுற்றுவீதித் தளத்திற்கும் இடைப்பட்ட கோணம் சில டிகிரிகளில் மாறி வருகின்றன.”

மிலுடின் மிலான்கோவிச் [Milutin Milankovitch, Yogoslav Geophysicist (1879-1958)]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அண்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர். அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது. காரணம் மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது. அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

ஆர்க்டிக் வட்டாரத்தைத் துணைக்கோள் கண்காணித்த உளவுகள், பூகோளச் சூடேற்றம் மெய்யானது என்று நிரூபித்ததுடன், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் முந்தைய காலத்தை விட 8 மடங்கு வேகத்தில் வெப்பச் சீற்றம் ஏறி வருகிறது என்றும் எடுத்துக் காட்டியுள்ளன! கடற்பனி உருகுவதால் கடல் மட்டம் உயராது. காரணம், கடற்பனிக் குன்றுகள் கடலில் மிதக்கின்றன. ஆனால் கிரீன்லாந்தின் நிலப்பகுதிப் பனிக் குன்றுகள் முழுதும் உருகினால் கடல் மட்டம் 7 மீடர் வரை [சுமார் 25 அடி] ஏறிவிடலாம் என்று அஞ்சப் படுகிறது! ஆனால் அவ்விதம் பனிக்குன்றுகள் யாவும் கிரீன்லாந்தில் உருக 1000 ஆண்டுகள் கூட ஆகலாம்!

மார்க் ஸெர்ரீஸ் [Mark Serreze, University of Colorodo]

முன்னுரை: பரமா பாஸ¤ என்னும் பாரத மாது தனது கட்டுரையில் [Ref:18] கூறுவது இதுதான்: “உலக உடல்நலப் பேரவை [World Health Organization (WHO)] சமீபத்தில் வெளியிட்ட அதிர்ச்சி தரும் தகவலில் மனிதரும், தொழிற்துறைகளும் உற்பத்தி செய்து வெளியாக்கும் நச்சு வாயுக்கள், நாசக் கழிவுகளால் சூழ்வெளிக் காலநிலை, மண்டலம் மாறுபட்டு 5 மில்லியன் நபர் நோயுறுவார் என்றும், அவர்களில் ஆண்டு தோறும் 150,000 மேற்பட்ட மரணங்கள் நேரலாம் என்று அறியப்படுகிறது! உஷ்ண ஏற்ற இறக்கத்தால் வெப்பப் புயல்கள் [Heat Waves] அடித்தும், பேய் மழையால் வெள்ளக் காடுகள் நிரம்பித் தொத்து நோய்கள் பீடித்துப் பல்வேறு முறைகளில் மனிதர் உடல்நலத்தில் ஆட்டம் காணப்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கிறார்கள். அந்தச் சீர்கேடுகளில் பாதிக்கப்படுவை, பூகோளத்தைச் சூடாக்கிச் சூழ்வெளியைப் பாழாக்கிய நகரங்கள் மட்டுமல்ல! முரணாகச் சூழ்வெளியை மாசுபடுத்தாமல் ஒதுங்கி நிற்கும் ஊர்களும் பெருமளவில் பாதகம் அடைகின்றன! இயற்கை வெளியீட்டிதழின் அறிவிப்பின்படி, வெப்ப மிகுதியால் பாதிப்பாகும் பகுதிகள்: பசிபிக் மாக்கடல், இந்தியக் கடல் தீவுகள், அவற்றின் கரைப்பகுதிகள், மற்றும் ஆ·பிரிக்காவில் ஸஹாரா பாலைவனச் சுற்றுப் பகுதிகள். அந்தப் பிரதேசங்களில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியாகும் அளவுகள் மிக மிகக் குறைவாக உள்ளவை, ஆ·பிரிக்க நாடுகள். அந்த ஏழ்மை நாடுகளில் வெப்ப மிகுதியாலும், சத்துள்ள உணவின்னையாலும், மக்களுக்கு உண்டாகும் நோய்கள் பல!

சூடேறும் பூகோளத்துக்கும், சீறியெழும் சூறாவளிக்கும் தொடர்பு

சமீபத்தில் உளவியறிந்த காலநிலை ஆய்வுகளின்படி, பேராற்றல் பெற்ற பேய்மழைச் சூறாவளிகள் கடற் பூதமாய் எழுந்தடிப்பதற்கும், சூடாகும் கடல் உஷ்ணத்துக்கும் தொடர்பிருப்பது தெளிவாக அறியப்பட்டுள்ளது! மனிதர் ஆக்கிய தொழிற்துறைகளால், “வெப்பக் கண்ணாடிக் கூட விளைவு” [கிரீன்ஹவுஸ் வாயுக்கள்] நேர்ந்து சூழ்வெளியில் நிரம்பிப் பரிதியின் வெப்பத்தை நீண்ட காலம் போர்த்திக் கொள்வது அதற்கு ஒரு காரணம். அட்லாண்டிக், பசிபிக் கடற் பகுதிகளின் உஷ்ண ஏற்றத்தில் மூன்றிலிருபாகப் பங்கீடை மனித வினைகள் பொறுப்பு ஏற்கின்றன. “ஹரிக்கேன் ஈசல்களாய் உற்பத்தியாகும் கடல்களின் உஷ்ண ஏற்றத்தால் சீறியடிக்கும் தாக்குதல்களுக்கு, இயற்கையின் நிகழ்ச்சிகளை மட்டும் காரணமாக எடுத்துக் கொண்டு விளக்கக் கூடாது! அறிவு சார்ந்த ஆழ்ந்த விளக்கத்தில் மனிதரின் வினைகளும் அதனில் பெரும்பங்கு ஏற்கிறது,” என்று நிகார் காலநிலைவாதி டாம் விக்லி, [Tom Wigley, Climatologist, National Center for Atmospheric Research (NCAR), Boulder, Colorado] சொல்கிறார்.

செப்டம்பர் 11, 2006 அன்று வெளிவந்த தேசீய விஞ்ஞானக் கழகத்தின் நிகழ்வு அறிக்கையில் [Proceedings of the National Academy of Sciences] பத்து ஆய்வுக் கூடங்களின் காலநிலை விஞ்ஞானிகள் உளவு செய்த 19 ஹரிக்கேன்களின் உற்பத்தி விளக்கங்கள் வெளிவந்துள்ளன. அந்த அறிக்கையில் ஹரிக்கேன் சூறாவளிகளின் சீற்றங்கள் பெருகிய பசிபிக், அட்லாண்டிக் கடல்களில் 1906 முதல் 2005 ஆண்டுவரை உஷ்ண ஏற்றம் 0.6-1.2 டிகிரி F என்பதாகக் காணப்படுகிறது. ஹரிக்கேன் உருவாகிக் கிளம்புவதற்குக் கடல்நீரின் மேற்தள உஷ்ணம் மட்டும் மூலப் பௌதிக காரண மில்லை! காற்றின் முறிவு, ஆவியீரம், வாயு மண்டல சமநீடிப்பு [Wind Shear, Water Vapour & Atmospheric Stability] ஆகியவையும் அதற்கு உதவி புரிகின்றன. முக்கியமாகக் கடல்நீர்ச் சூடேற்றமும், காற்றின் ஆவியீரக் கலப்பும் ஹரிக்கேனின் உந்து சக்தியாக ஆற்றல் தருகின்றன! சூடாகும் கடல் வெள்ளமே பூதச் சூறாவளிகளின் ஆக்கசக்தி என்பதற்குச் சான்றுகள் தற்போது பெருகி வருகின்றன.

அடுத்த நூற்றாண்டில் [2100] கடல்மட்ட நீரின் உஷ்ணம் விரைவாக நான்கு மடங்கு [1.3C-2.7C] ஏறப் போவதாய் எதிர்பார்க்கப் படுகிறது என்று டாம் விக்லி மதிப்பிட்டுக் கூறுகிறார். சென்ற ஆண்டு வெளிவந்த “இயற்கை” [Nature] விஞ்ஞான வெளியீடு கடல்நீர் உஷ்ண ஏற்றத்துக்கும், ஹரிக்கேன் எழுச்சிகளுக்கும் தொடர்புள்ளதென ஓர் அழுத்தமான முடிவு 1970 ஆண்டுமுதல் காணப்படுவதாய்க் கூறுகிறது. தீவிரநிலை: 4-5 ஹரிக்கேன்கள் [Category: 4-5 Hurricanes] சூடாகும் கடற்தள உஷ்ணத்தால் உதித்தன வென்று ஈராய்வு வெளியீடுகளில் வந்துள்ளன. 2006 ஜூனில் வெளியான நிகார் [NCAR] ஆய்வறிக்கை, ஹரிக்கேன் உற்பத்தி வாயிலான வட அட்லாண்டிக் கடலின் தள உஷ்ண ஏற்றத்தில் பாதியளவுக் காரணம், மனிதரியக்கும் தொழிற்கூடங்கள் வெளியாக்கும் கார்பன் டையாக்ஸைடும், ஏனைய கிரீன்ஹவுஸ் வாயுக்களுமே என்று கூறுகிறது. 1901-1970 ஆண்டுகளின் சராசரி உஷ்ணத்துக்கு மேலாக, வட அட்லாண்டிக் கடல்மட்ட உஷ்ணம் 2005 ஆம் ஆண்டில் 1.7 டிகிரி F மிகையாகி விட்டது என்றும் அறிக்கை மூலம் தெரிய வருகிறது!

கடல்நீர் உஷ்ணம், கடல் பனிக்களஞ்சியம், பூகோளச் சூழ்வெளி ஆகியவற்றை 22 வேறுபட்ட முறைகளில் பின்னிய நூதனச், சீரான மின்கணனி மாடல்களில் [Computer Study Models] 80 விதமான “போலி நிகழ்வுகளை” [Simulations] உருவாக்கி, மேற்கண்ட முடிவுகள் மற்றும் கடற்தள உஷ்ண மாறுபாடுகளின் காரணங்கள் ஆராயப்பட்டன. ஆராய்ச்சிக் குழுவினர் கடந்த நூறாண்டுக் காலத்தில் (1906-2005) கிரீன்ஹவுஸ் வாயு வீச்சுகள் அட்லாண்டிக், பசிபிக் கடற் பகுதிகளின் 65% வீத உஷ்ண ஏற்றத்திற்குக் காரணம் என்பது 80% அளவு நிகழக் கூடுமானது [80% Probability] என்று அறிக்கையில் காணப் பட்டது.

(முற்றும்)

************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Is Our World Warming? By: Samuel Matthews, Senior Assistant Editor National Geographic [Oct 1990]
10 http://www.thinnai.com/sc1014051.html [Author’s Article on Katrina Damage & Evaquation]
11 Stormy Weather: Can We Link to Global Warming By: Jim Motavalli [Nov 11, 2004]
12 A Cold Hard Look at a Telltale Region Arctic By: Peter Spotts, Christian Science Monitor [Nov 18, 2004]
13 Global Warming : Definitions & Debate [http://zfacts.com/p/49print.html
14 Meltdown: Arctic Wildlife is On the Brink of Catastrophe By Steve Connor [Nov 11, 2004]
15 Discovery of Greenpeace Expedition on Greenland By: Dr. Gordon Hamilton [July 22, 2005]
16 Carbon Dioxide [CO2] & Global Warming Potential [Several Internet Reports]
17 Ecological Reports: The Data on Global Warming is Conclusive [Jan 29, 2004]
18 Third World Nears Brunt of Global Warming Impacts By: Paroma Basu [July 11, 2006]
19 Ozone Crisis, The 15 Year Evolution of a Sudden Global Emergency By: Shron L. Roan [1989]
20 Evidence for Global Warming: Degradation of Earth’s Atmosphere; Sea Level Raise; Ozone Holes; Vegetation Response By: Dr. Mitchell K. Hobish [Earth System Science]
21 Warning from Al Gore on Future, “Global Warming Called an Emergency” (June 5, 2005)
22 National Geographic: “Unlocking the Climate Puzzle [May 1998]
23 National Geographic: “Global Warming” Your Vacation May Never Be the Same, The Climate Bomg By: Jonathan Tourtellot [July-Aug 2006]
24 Macleans Magazine: Now with the Weather -Al Gore [May 22, 2006]
25 Pledge to See “An Incovenient Truth” Movie [May 27, 2006]
26 Milankovitch Cycles: Changes in Earth-Sun Interaction By: Matt Rosenberg
27 Astronomical Theory of Climate Change -NOAA Paleoclimatology Program [Sep 9, 2003]
28 Anandu Vernekar Home Page Biographical Sketch [www.atmos.umd.edu/~adv/]
29 Sun, Not Carbon dioxide, is the Primary Driver of Ice Ages; Carbon dioxide is only a Secondary Driver [A New Theory (July 24, 2006)]
30 Milankovitch Theory, Ice Age & Glaciation from: Wikipedia
31 Earth Science & The Environment By: Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D. [1993]
32 Time – Nature’s Extremes, Time Inc Special Issue [2006]
33 National Geographic -Will We Mend Our Earth, By Gilbert M. Grosvenor [December 1988]
34 Scientific American -How to Power the Economy & Still Fight Global Warming [September 2006]
35 Earth & Sky: Large Human Influence Found in Hurricane Breeding Waters [September 11 2006] By: Jorge Salazar.
[www.earthsky.org/topstories.php?date=20060911]
36 Environment News Service: Study Strengthens Link Between Global Warming & Fiecrcer Storms [September 12, 2006]

******************

jayabarat@tnt21.com [September, 14 2006]

Series Navigation

சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, மேலேறும் கடல் மட்டம், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-9

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பச்சை நிறத்தை ஒட்டி ஓரளவு
மினுமினுக்கும்,
இன்றைய மரங்களின் இலைகள்!
ஆயினும்
அவ்விதம் மின்னும் பசுமை தென்படுமா,
கோலம் மாறும் போது,
காலமும், கடல் மட்டமும்
மனிதக்
கைப்பிடியில் சிக்கி?
புனித நிலத்தைப்
புண்படுத்திப்
பாலை மணலாய்ப் பாழாக்காதே
மனிதா!

பூகோளம் தாங்கிக் கொள்ளும் வரை விதைநடுப்பு-அறுவடை, வெப்பம்-குளிர்ச்சி, வேனிற் காலம், குளிர்காலம், பகலிரவு ஆகியவை ஒருபோதும் நிறுத்த மடையா!

ஜெனெஸிஸ் 8:22 [பைபிள்]

“தனிப்பட்ட மனிதரைச் செம்மைப் படுத்தாது, புதியதோர் உலகத்தை உருவாக்க எதிர்பார்க்கக் கூடாது! அந்தக் குறிக்கோளைப் பின்பற்றி நாம் ஒவ்வொருவரும் நம்மை மேம்பத்த முனைய வேண்டும். அதே சமயத்தில் அனைத்து மனித வர்க்கமும் அப்பொறுப்பில் பங்கு கொள்ளப் பணிபுரிய வேண்டும். குறிப்பாக நமது பணிகள் மிகையாகத் தேவைப் படுபவருக்கு நாம் முன்வந்து உதவிடக் கடமைப் பட்டுள்ளோம்.”

மேரி கியூரி [இரட்டை நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை (1867-1934)]

“மனிதத் தலையீடுகளால் பூகோளத்தின் காலநிலைப் பெருமளவில் சீர்கேடாகி வருகிறது! சூழ்மண்டல வாயுக்களில், கார்பன் டையாக்ஸைடு வாயுவின் கலப்பு மிகையானால், பூதளத்தின் மேற்தளச் சூடு அதிகரிக்கிறது. சென்ற நூற்றாண்டில் ஈடிணை யில்லாத அளவில் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் சேர்க்கை, மற்ற மனிதத் தூண்டல் சீர்கேடுகளுடன் சேர்ந்து விளைவித்த பாதிப்புகள், எதிர்பார்க்கப் பட்ட கெடுதிகள் பலரது கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.”

அமெரிக்கன் பூகோளப் பௌதிகக் கூட்டகம் [American Geophysical Union (Dec. 2003)]

நடைமுறையில் மெய்யாகக் கிரீன்ஹவுஸ் வாயுக்களைக் குறைப்ப தென்பது அத்தனை எளிதான ரசாயன வினையில்லை! அத்துறையில் முனைந்தால் உற்பத்தி நிதிச்செலவு மிகையாகித் தொழிற்துறை நிதியாதாரம் தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்கு ஏறிப் பாராமாகிறது! அவ்விதமின்றி நிலக்கரி எரிந்தியங்கும் மின்சார நிலையங்களும், நிலக்கரி பயன்படுத்தும் தொழிற்சாலைகளும் நிறுத்தமானால், மக்களின் மின்சக்தித் தேவைகளும், சுகவசதிகளும் பெருமளவு பாதிப்படையும்! அதுபோல் பெட்ரோலிய எரிவாயுவில் ஓடும் அனைத்து மோட்டார் வாகனங்களையும் ஓட்டாமல் நிறுத்த முடியுமா? ஆதலால் ஓரிரவில் 100% தீர்வு செய்ய யியலாத அப்பிரச்சனையால், பொதுநபருக்குப் பேரழப்புக்கள் நேரிடும்.

உயிரினப் பயிரினப் பாதிப்பு அறிக்கை (ஜனவரி 29, 2004)

“காலநிலைச் சுற்றுப் போக்கு [Climate Cycles] பரிதியின் கதிர்வீச்சு [Solar Radiation] பூகோளத்தின் மட்டரேகையில் படுவதாலும், விழும் காலத்தைப் பொருத்தும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்று வித வேறுபாடுகளால் மாறுபடுகின்றன. முதலாவது பூமி பரிதியை வலம்வரும் சுற்றுவீதி [Orbit] எப்போதும் முழு வட்டமா யில்லாது சற்று நீள்வட்டமாகி மீண்டும் வட்டமாகிறது! இரண்டாவது பூமி ஆடுமோர் பம்பரம் போன்று தலை சுற்றுகிறது [Spin Axis Wobble or Precession]! மூன்றாவது பூகோளத்தின் மத்திம ரேகைத் தளத்திற்கும், சுற்றுவீதித் தளத்திற்கும் இடைப்பட்ட கோணம் சில டிகிரிகளில் மாறி வருகின்றன.”

மிலுடின் மிலான்கோவிச் [Milutin Milankovitch, Yogoslav Geophysicist (1879-1958)]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அண்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர். அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது. காரணம் மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது. அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

ஆர்க்டிக் வட்டாரத்தைத் துணைக்கோள் கண்காணித்த உளவுகள், பூகோளச் சூடேற்றம் மெய்யானது என்று நிரூபித்ததுடன், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் முந்தைய காலத்தை விட 8 மடங்கு வேகத்தில் வெப்பச் சீற்றம் ஏறி வருகிறது என்றும் எடுத்துக் காட்டியுள்ளன! கடற்பனி உருகுவதால் கடல் மட்டம் உயராது. காரணம், கடற்பனிக் குன்றுகள் கடலில் மிதக்கின்றன. ஆனால் கிரீன்லாந்தின் நிலப்பகுதிப் பனிக் குன்றுகள் முழுதும் உருகினால் கடல் மட்டம் 7 மீடர் வரை [சுமார் 25 அடி] ஏறிவிடலாம் என்று அஞ்சப் படுகிறது! ஆனால் அவ்விதம் பனிக்குன்றுகள் யாவும் கிரீன்லாந்தில் உருக 1000 ஆண்டுகள் கூட ஆகலாம்!

மார்க் ஸெர்ரீஸ் [Mark Serreze, University of Colorodo]

முன்னுரை: கடந்த 160,000 ஆண்டுகள் முதலாக சென்ற பனியுகம் உட்படத் தற்காலம் வரையில் சூழ்மண்டலத்தில் பரவி யிருந்த கார்பன் டையாக்ஸைடு வாயுவின் அளவையும், உஷ்ணத்தின் அளவையும் காலநிலை விஞ்ஞானிகள் கிரீன்லாந்து, அண்டார்க்டிகா ஆகியவற்றின் பனிக்குன்றுகளைத் துளையிட்டு மாதிரி எடுத்து அற்புதமாய்க் கணித்திருக்கிறார்கள். துளைத்தெடுத்த பனித்தண்டில் சிக்கிக் கொண்ட வாயுக் குமிழ்களை உளவி ஆராய்ந்தால், அவற்றில் உள்ள வாயுக்கள் என்ன வென்றும், எத்தனை அளவில் உள்ள தென்றும் [CO2, Methane & other Gases] அறிய முடிகிறது. அத்துடன் குமிழுக்குள் மாட்டிக் கொண்ட ஆக்ஸிஜன் வாயுவின் ஏகமூலங்களின் விகிதத்தைக் [Ratio of Oxygen Isotopes] கணக்கிட்டால் உஷ்ணத்தையும் கணிக்க முடிகிறது. அந்தக் கணிப்புகளின் மூலமாய்க் கார்பன் டையாக்ஸைடுக்கும், சூழ்வெளி உஷ்ணத்துக்கும் உள்ள ஓர் உறவுப்பாடு உறுதியாக்கப் பட்டது.

சூழ்வெளி வாயு மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு மிகையாகச் சேரச் சேர பூதள உஷ்ணம் கூடினாலும், உஷ்ணம் ஏறிடும் வீதம் கார்பன் டையாக்ஸைடு மிகை அளவால் குறைந்து வருகிறது [Rate of temperature raise in the atmosphere diminishes with increasing CO2 content] என்பது ஷ்னைடெரின் தர்க்கம்! ஆனால் அதற்கு எதிராக வாயு மண்டலத்தில் சேரும் தூசிகளின் [Aerosols] சேர்க்கை, வாயுவின் திணிவை [Density] அதிகரித்தாலும், பூதளத்தின் உஷ்ண ஏற்றத்தைக் குறைக்கிறது என்பது ஷ்னைடெரின் அடுத்த தர்க்கம்! உதாரணமாகப் பூகோள வாயு மண்டலத்தில் 4 மடங்கு தூசி மிகையானால், பூதளத்தின் உஷ்ணத்தை 3.5 டிகிரி கெல்வின் அளவு குறைக்கிறது! தூசிகள் சேரும் அப்போக்குப் பல ஆண்டுகள் நீடித்தால், உலகம் முழுவதிலும் குன்றிய தள உஷ்ணத்தால், பனியுகம் தூண்டப்படும் தருணம் திரும்பலாம் என்பதே ஷ்னைடெரின் ஆராய்ச்சி. குளிர்ச்சியாகும் பூகோளம் [Global Cooling] என்னும் அந்தக் கொள்கையே ஷ்னைடெரின் வாயுரையாகவும் வெளியாகிக் கொண்டு வந்தது!

ஆசிய நாடுகள் பெற்றுக் கொள்ளும் பூகோளச் சூடேற்றப் பாதிப்புகள்

பரமா பாஸ¤ என்னும் பாரத மாது தனது கட்டுரையில் [Ref:18] கூறுவது இதுதான்: “உலக உடல்நலப் பேரவை [World Health Organization (WHO)] சமீபத்தில் வெளியிட்ட அதிர்ச்சி தரும் தகவலில் மனிதரும், தொழிற்துறைகளும் உற்பத்தி செய்து வெளியாக்கும் நச்சு வாயுக்கள், நாசக் கழிவுகளால் சூழ்வெளிக் காலநிலை, மண்டலம் மாறுபட்டு 5 மில்லியன் நபர் நோயுறுவார் என்றும், அவர்களில் ஆண்டு தோறும் 150,000 மேற்பட்ட மரணங்கள் நேரலாம் என்று அறியப்படுகிறது! உஷ்ண ஏற்ற இறக்கத்தால் வெப்பப் புயல்கள் [Heat Waves] அடித்தும், பேய் மழையால் வெள்ளக் காடுகள் நிரம்பித் தொத்து நோய்கள் பீடித்துப் பல்வேறு முறைகளில் மனிதர் உடல்நலத்தில் ஆட்டம் காணப்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கிறார்கள். அந்தச் சீர்கேடுகளில் பாதிக்கப்படுவை, பூகோளத்தைச் சூடாக்கிச் சூழ்வெளியைப் பாழாக்கிய நகரங்கள் மட்டுமல்ல! முரணாகச் சூழ்வெளியை மாசுபடுத்தாமல் ஒதுங்கி நிற்கும் ஊர்களும் பெருமளவில் பாதகம் அடைகின்றன! இயற்கை வெளியீட்டிதழின் அறிவிப்பின்படி, வெப்ப மிகுதியால் பாதிப்பாகும் பகுதிகள்: பசிபிக் மாக்கடல், இந்தியக் கடல் தீவுகள், அவற்றின் கரைப்பகுதிகள், மற்றும் ஆ·பிரிக்காவில் ஸஹாரா பாலைவனச் சுற்றுப் பகுதிகள். அந்தப் பிரதேசங்களில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியாகும் அளவுகள் மிக மிகக் குறைவாக உள்ளவை, ஆ·பிரிக்க நாடுகள். அந்த ஏழ்மை நாடுகளில் வெப்ப மிகுதியாலும், சத்துள்ள உணவின்னையாலும், மக்களுக்கு உண்டாகும் நோய்கள் பல!

பூகோளச் சூடேற்றத்தால் விளையும் சீர்கேடுகள்

1. நிலங்களின் அமைப்புக்கு ஏற்ப நாட்டின் வேளாண்மை விளைச்சல்களில் பேரிழப்பும், பெரும் பாதிப்பும் நேரிடும். சூழ்தளத்தின் சராசரி வெப்பம் 1.8 டிகிரி F வீதத்தில் ஏறும் ஒவ்வொரு முறையும், உணவு வேளாண்மைப் பயிர்களான நெல், கோதுமை, சோளம் ஆகியவற்றின் அறுவடை விளைச்சல்கள் 10% வீதம் குன்றுகின்றன!

2. துருவப் பனிக் குன்றுகள் உருகிடும் போது கடல்நீர் மட்டம் உயர்ந்து, தீவுகளும், கரைப்பகுதி நிலங்களும் உப்புநீரில் மூழ்கிப் பாழாகுகின்றன.

3. பூகோளச் சூடேற்றத்தால் கடல் சூறாவளிகளும், பேய்மழைகளும் உண்டாகி நீர்வளங்களும், நிவளங்களும் பாதகமடைந்து, தொழில்வள அடிப்படை வசதிகளும் [Infrastructures] சேதமடைகின்றன.

4. மலேரியா, டெங்கு காய்ச்சல், லைம் நோய், வெஸ்ட் நைல் வைரஸ் [Dengue Fever, Lyme Disease, West Nile Virus] போன்ற தொற்றுநோய் பீடிக்கும் பரப்புகள் உலகெங்கும் பெருகும்.

(தொடரும்)

************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Is Our World Warming? By: Samuel Matthews, Senior Assistant Editor National Geographic [Oct 1990]
10 http://www.thinnai.com/sc1014051.html [Author’s Article on Katrina Damage & Evaquation]
11 Stormy Weather: Can We Link to Global Warming By: Jim Motavalli [Nov 11, 2004]
12 A Cold Hard Look at a Telltale Region Arctic By: Peter Spotts, Christian Science Monitor [Nov 18, 2004]
13 Global Warming : Definitions & Debate [http://zfacts.com/p/49print.html
14 Meltdown: Arctic Wildlife is On the Brink of Catastrophe By Steve Connor [Nov 11, 2004]
15 Discovery of Greenpeace Expedition on Greenland By: Dr. Gordon Hamilton [July 22, 2005]
16 Carbon Dioxide [CO2] & Global Warming Potential [Several Internet Reports]
17 Ecological Reports: The Data on Global Warming is Conclusive [Jan 29, 2004]
18 Third World Nears Brunt of Global Warming Impacts By: Paroma Basu [July 11, 2006]
19 Ozone Crisis, The 15 Year Evolution of a Sudden Global Emergency By: Shron L. Roan [1989]
20 Evidence for Global Warming: Degradation of Earth’s Atmosphere; Sea Level Raise; Ozone Holes; Vegetation Response By: Dr. Mitchell K. Hobish [Earth System Science]
21 Warning from Al Gore on Future, “Global Warming Called an Emergency” (June 5, 2005)
22 National Geographic: “Unlocking the Climate Puzzle [May 1998]
23 National Geographic: “Global Warming” Your Vacation May Never Be the Same, The Climate Bomg By: Jonathan Tourtellot [July-Aug 2006]
24 Macleans Magazine: Now with the Weather -Al Gore [May 22, 2006]
25 Pledge to See “An Incovenient Truth” Movie [May 27, 2006]
26 Milankovitch Cycles: Changes in Earth-Sun Interaction By: Matt Rosenberg
27 Astronomical Theory of Climate Change -NOAA Paleoclimatology Program [Sep 9, 2003]
28 Anandu Vernekar Home Page Biographical Sketch [www.atmos.umd.edu/~adv/]
29 Sun, Not Carbon dioxide, is the Primary Driver of Ice Ages; Carbon dioxide is only a Secondary Driver [A New Theory (July 24, 2006)]
30 Milankovitch Theory, Ice Age & Glaciation from: Wikipedia
31 Earth Science & The Environment By: Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D. [1993]

******************

jayabarat@tnt21.com [August, 17 2006]

Series Navigation

சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பட்டப் பகலென்றும்,
நட்ட நிசி யென்றும்,
பொட்டுப் பரிதிக்கு
கட்டுவிதி யில்லை! ஆயினும்
கால விதிக்கடி பணியும்!
வெட்ட வெளியில்
வெப்பத்தைக் கக்கிச்
சுட்டு விடுவதும் அதுவே! கனல்
பட்டெனத் தணிந்து,
பார்மீது
பனிக் குன்றைப்
படைப்பதும் அதுவே!

“பேரளவுக் கொள்ளளவு கார்பன் டையாக்ஸைடு [CO2], தூசிகள் [Aerosols] நமது வாயு மண்டலத்தில் சேர்ந்தால், பூகோளச் சூடேற்றம் அவை ஒவ்வொன்றாலும் எப்படி மாறுபடுகிறது என்பது மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது! கார்பன் டையாக்ஸைடு அபூர்வமாக அடுத்த சில ஆயிரம் ஆண்டுகளில் 8 மடங்கு ஏறினால், பூதளத்தின் உஷ்ணம் 2 டிகிரி கெல்வினுக்கும் [2 deg K] மிகையாகலாம். ஆனால் வாயு மண்டலத்தில் தூசிகளின் படிமானம் சிறிது மிகையானாலும், பூதள உஷ்ணம் மாறுவது பெருமளவு என்பது தற்போது அறியப் பட்டுள்ளது! உதாரணமாக வாயு மண்டலத்தில் தூசிகளின் சேர்க்கை அடுத்த நூறாண்டுகளில் 4 மடங்காக மிகையானால், பூதளத்தின் உஷ்ணம் 3.5 டிகிரி கெல்வின் குறைந்து தணிந்து போகும் என்பது அறியப்பட்டுள்ளது! அந்த நிலை பல்லாண்டுகள் நீடித்தால், பூமியின் சராசரி உஷ்ண நிலை குறைந்து போய், மறுபடியும் அடுத்தப் பனியுகத்தைத் [Ice Age] தூண்டி விடும்!

ஸ்டீ·பென் ஷ்னைடெர் Ph.D. [Stephen Schneider on Climate Cooling (July 1971)]

மெக்ஸிகன் வளைகுடாவில் கரீபியன் தீவுகளின் கடலில் வெப்பம் பேரளவு ஏறியதால் கடந்த 3000 ஆண்டுகளாக பவளத்தின் வளமை முற்றிலும் அழிந்து போனது அவலம் தரும் தகவல்! 1998 இல் பெலிஸ் [Belize, Near Guatemala, Central America] நாட்டுக்கு அப்பால் கடலின் உஷ்ணம் 31.5 டிகிரி C [The El Nino Climate Effect] என்று பதிவு செய்யப் பட்டது! அந்த உஷ்ண ஏற்றம் பல மாதங்கள் நீடித்து பெலிஸ் கடலில் தோன்றிய பவளக் குடியேற்றங்கள் அனைத்தும் நிறம் வெளுத்து முற்றிலும் அழிந்து போயின!

BBC News [May 4, 2000]
“காலநிலைச் சுற்றுப் போக்கு [Climate Cycles] பரிதியின் கதிர்வீச்சு [Solar Radiation] பூகோளத்தின் மட்டரேகையில் படுவதாலும், விழும் காலத்தைப் பொருத்தும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்று வித வேறுபாடுகளால் மாறுபடுகின்றன. முதலாவது பூமி பரிதியை வலம்வரும் சுற்றுவீதி [Orbit] எப்போதும் முழு வட்டமா யில்லாது சற்று நீள்வட்டமாகி மீண்டும் வட்டமாகிறது! இரண்டாவது பூமி ஆடுமோர் பம்பரம் போன்று தலை சுற்றுகிறது [Spin Axis Wobble or Precession]! மூன்றாவது பூகோளத்தின் மத்திம ரேகைத் தளத்திற்கும், சுற்றுவீதித் தளத்திற்கும் இடைப்பட்ட கோணம் சில டிகிரிகளில் மாறி வருகின்றன.”

மிலுடின் மிலான்கோவிச் [Milutin Milankovitch, Yogoslav Geophysicist (1879-1958)]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அண்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர். அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது. காரணம் மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது. அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

ஆர்க்டிக் வட்டாரத்தைத் துணைக்கோள் கண்காணித்த உளவுகள், பூகோளச் சூடேற்றம் மெய்யானது என்று நிரூபித்ததுடன், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் முந்தைய காலத்தை விட 8 மடங்கு வேகத்தில் வெப்பச் சீற்றம் ஏறி வருகிறது என்றும் எடுத்துக் காட்டியுள்ளன! கடற்பனி உருகுவதால் கடல் மட்டம் உயராது. காரணம், கடற்பனிக் குன்றுகள் கடலில் மிதக்கின்றன. ஆனால் கிரீன்லாந்தின் நிலப்பகுதிப் பனிக் குன்றுகள் முழுதும் உருகினால் கடல் மட்டம் 7 மீடர் வரை [சுமார் 25 அடி] ஏறிவிடலாம் என்று அஞ்சப் படுகிறது! ஆனால் அவ்விதம் பனிக்குன்றுகள் யாவும் கிரீன்லாந்தில் உருக 1000 ஆண்டுகள் கூட ஆகலாம்!

மார்க் ஸெர்ரீஸ் [Mark Serreze, University of Colorodo]

முன்னுரை: முதல் உலக யுத்தத்தின் போது, 1914-1918 ஆண்டுகளில் போர்க் கைதியாக புடாபெஸ்ட்டில் [ஹங்கேரி] சிறைப்பட்ட யுகோஸ்லாவின் பூதளவியல் விஞ்ஞானி மிலுடின் மிலோன்கோவிச் [Geophysicist, Milutin Milankovitch] உறுதியாகக் கண்டறிந்தது இதுதான்: பண்டையக் காலநிலை மாறுபாடுகளுக்கு ஒரு முக்கியக் காரணம், பூகோளத்தின் மீது படும் பரிதியின் கதிர்வீச்சுகள் [Solar Radiations] கோடைக் குளிர் காலத்துக்கும், மட்டத் தளத்துக்கும் [Earth’s Season & Lattitude] ஏற்றபடி மாறுகின்றன! பூகோளம் தன்னச்சில் சுழன்று கொண்டு, பரிதியை ஏறக்குறைய வட்டமான வீதியில் வலம் வருகிறது! வட்ட வீதி சற்று நீண்டு நீள்வட்ட வீதியாகி [Circular Orbit –> Eliptical Orbit –> Circular Orbit] மறுபடியும் வட்டவீதிக்கு மீள்கிறது! இது முதல் மாறுதல். ஆனால் பூமி தானே சுற்றும் அச்சு செங்குத்தாக இல்லது தற்போது 23.5 டிகிரி சாய்ந்து உள்ளது. அதன் அச்சின் கோணமும் 21.5 முதல் 24.5 டிகிரி [Angle of Tilt 21.5 –> 24.5 –> 21.5] மாறுபடுகிறது. இது இரண்டாவது மாறுதல். அடுத்து பூமியின் சுழல் அச்சுத் தலையாட்டும் சுழல் பம்பரம்போல் “தலையாட்டம்” [Precession or Spin Axis Wobble] செய்கிறது! இது மூன்றாவது மாறுதல். அம்மூன்று வேறுபாடான பூகோள நகர்ச்சியும், சுழற்சியும், ஆட்டமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மீளும் சுற்றுகளாக [Repeat Rhythmic Cycles] வந்து, வந்து பரிதியின் வெப்பசக்தியை உறிஞ்சியும், புறக்கணித்தும் பூமியைப் பனிக்கோளாகவும், சூட்டுக் கோளாகவும் மாற்றி வருகின்றன என்று மிலன்கோவிச் எடுத்துக் கூறினார்! பரிதியின் கதிர் வெப்பம் பூகோளத்தின் துருவப் பிரதேசங்களில் குன்றும் போது, வாயுக்களில் சேர்ந்துள்ள நீர்மை ஆவி நீராய்ப் படிந்து பனிப்பாறைகள் ஒன்றின் மீது ஒன்றாய் அடுக்கப்படுகின்றன.

கிரீன்ஹவுஸ் உன்னத நிபுணர் ஸ்டீ·பென் ஷ்னைடெர்

கிரீன்ஹவுஸ் உன்னத நிபுணர் [Stephen Schneider, Greenhouse Superstar] என அழைக்கப்படும் ஸ்டீ·பன் ஷ்னைடெர் என்ன மாதிரி மனிதர்? என்ன மாதிரி விஞ்ஞானி? என்ன மாதிரி காலநிலைக் கண்காணிப்பாளி? ஷ்னைடெர் எப்போதும் சூடேறும் பூகோளத்தைப் [Global Warming] பற்றிப் பறைசாற்றுபவர் அல்லர்! அதற்கு மாறாக அவர் குளிராகும் பூகோளத்தை [Global Cooling] விளக்கி 1978 ஆண்டு வரை எச்சரித்து, மீளப் போகும் பனியுகத்தைப் [Ice Age] பற்றி வியப்பாக அறிவுரை ஆற்றி வந்தார்! “அடுத்து வரப் போகும் 100 ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதையும் தழுவப் போகும் தீவிரமான குளிர்மண்டலம் தோன்ற நிச்சயமான தொரு வாய்ப்புக்கு ஏது உள்ளது,” என்று 1970 ஆண்டுகளில் ஷ்னைடெர் பல இடங்களில் உரையாற்றி வந்தார். அவரது வியப்பான கொள்கையை அமெரிக்க விஞ்ஞானக் கழகமும் [US National Academy of Sciences] அப்போது ஏற்றுக் கொண்டிருந்தது!

சூழ்வெளி வாயு மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு மிகையாகச் சேரச் சேர பூதள உஷ்ணம் கூடினாலும், உஷ்ணம் ஏறிடும் வீதம் கார்பன் டையாக்ஸைடு மிகை அளவால் குறைந்து வருகிறது [Rate of temperature raise in the atmosphere diminishes with increasing CO2 content] என்பது ஷ்னைடெரின் தர்க்கம்! ஆனால் அதற்கு எதிராக வாயு மண்டலத்தில் சேரும் தூசிகளின் [Aerosols] சேர்க்கை, வாயுவின் திணிவை [Density] அதிகரித்தாலும், பூதளத்தின் உஷ்ண ஏற்றத்தைக் குறைக்கிறது என்பது ஷ்னைடெரின் அடுத்த தர்க்கம்! உதாரணமாகப் பூகோள வாயு மண்டலத்தில் 4 மடங்கு தூசி மிகையானால், பூதளத்தின் உஷ்ணத்தை 3.5 டிகிரி கெல்வின் அளவு குறைக்கிறது! தூசிகள் சேரும் அப்போக்குப் பல ஆண்டுகள் நீடித்தால், உலகம் முழுவதிலும் குன்றிய தள உஷ்ணத்தால், பனியுகம் தூண்டப்படும் தருணம் திரும்பலாம் என்பதே ஷ்னைடெரின் ஆராய்ச்சி. குளிர்ச்சியாகும் பூகோளம் [Global Cooling] என்னும் அந்தக் கொள்கையே ஷ்னைடெரின் வாயுரையாகவும் வெளியாகிக் கொண்டு வந்தது!

1990 ஆம் ஆண்டில் ஷ்னைடெர் பிரிட்டிஷ் டெலிவிஷன் நேர்காணலில் கூறியது முற்றிலும் மெய்யானது! “நாம் அறிவோம், 20,000 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த பனியுகத்தின் போது பூமி குளிர்ந்து போயிருந்தது! அப்போது வாயு மண்டலத்தில் தற்போதைய CO2 அளவை விட, (அதாவது தொழிற் புரட்சிக்கு முன்பாக) 25% குன்றி யிருந்தது. மேலும் அப்போது மீதேன் வாயும் [Methane Gas] 50% குறையாக இருந்தது. ஆகவே பனியுகத்திலும், குறைவான கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பரவி யிருந்தன என்பது உறுதியாக்கப் படுகிறது.

கடந்த 160,000 ஆண்டுகள் முதலாக சென்ற பனியுகம் உட்படத் தற்காலம் வரையில் சூழ்மண்டலத்தில் பரவி யிருந்த கார்பன் டையாக்ஸைடு வாயுவின் அளவையும், உஷ்ணத்தின் அளவையும் காலநிலை விஞ்ஞானிகள் கிரீன்லாந்து, அண்டார்க்டிகா ஆகியவற்றின் பனிக்குன்றுகளைத் துளையிட்டு மாதிரி எடுத்து அற்புதமாய்க் கணித்திருக்கிறார்கள். துளைத்தெடுத்த பனித்தண்டில் சிக்கிக் கொண்ட வாயுக் குமிழ்களை உளவி ஆராய்ந்தால், அவற்றில் உள்ள வாயுக்கள் என்ன வென்றும், எத்தனை அளவில் உள்ள தென்றும் [CO2, Methane & other Gases] அறிய முடிகிறது. அத்துடன் குமிழுக்குள் மாட்டிக் கொண்ட ஆக்ஸிஜன் வாயுவின் ஏகமூலங்களின் விகிதத்தைக் [Ratio of Oxygen Isotopes] கணக்கிட்டால் உஷ்ணத்தையும் கணிக்க முடிகிறது. அந்தக் கணிப்புகளின் மூலமாய்க் கார்பன் டையாக்ஸைடுக்கும், சூழ்வெளி உஷ்ணத்துக்கும் உள்ள ஓர் உறவுப்பாடு உறுதியாக்கப் பட்டது.

ஷ்னைடெர் கார்பன் டையாக்ஸைடுதான் குற்றவாளி எனப் பழி சுமத்தினார்! 160,000 ஆண்டுகளாக ஏறி யிறங்கி வந்த உஷ்ண, கரிவாயு அளவுகளின் வரைபதிவுக் கவனித்தால், உஷ்ண ஏற்றங்கள் CO2 மாறுபாடுகளுக்கு முன்னதாகவே ஏற்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிய வருகிறது! அதாவது உஷ்ண மாறுபடுகளை CO2 வாயு உண்டாக்க வில்லை! CO2 மாறுபாடுகள்தான் உஷ்ண ஏற்ற யிறக்கத்தால் நேர்ந்தன என்பதே ஷ்னைடெரின் உறுதியான கண்டுபிடிப்பு! 1990 ஆம் ஆண்டில் வெளியான மற்ற அறிக்கைகளும் [Reports By: Kuo, Lindberg & Thompson] ஷ்னைடெர் கருத்தையே வலியுறுத்தின! ஆனால் ஷ்னைடெர் சொல்லாமல் விட்டது: சூழ்மண்டல உஷ்ணம், கரிவாயு ஆகிய இரண்டு மாறுபாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன! ஒன்றை ஒன்று மாற்றும் தன்மை படைத்து உள்ளன! அதுபோல் மற்ற வெளிப்புற வேறுபாடுகளாலும் அவை மாறுபவை என்னும் மெய்யான நியதிதான்!

ஸ்டீ·பென் ஷ்னைடெர் வாழ்க்கை வரலாறு:

ஸ்டீ·பன் ஷ்னைடெர் நியூ யார்க் நகரத்தில் 1945 ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் பெற்ற பட்டங்கள்: B.S., M.S. (Mech Engg), Ph.D. (Mech Engg & Plasma Physics 1971)]. பல்கலைக் கழகப் படிப்பிற்குப் பிறகு, அமெரிக்காவின் நாசா அண்டவெளிப் பயணத் துறையகத்தில் சில காலம் பணிபுரிந்து, 1972 இல் தேசீயச் சூழ்வெளி ஆய்வுக் கூடத்தில் [National Center for Atmospheric Research, Boulder, Colorado] சேர்ந்தார். 1987-1992 ஆண்டுகளில் அங்கே அகப்பிணைப்புக் காலநிலை ஏற்பாடுத் துறையின் [Interdisciplinary Climate System] அதிபராகப் பணியாற்றினார். 1992 இல் ஸ்டான்·போர்டு பல்கலைக் கழகத்தில் உயிரியல் விஞ்ஞானப் பேராசிரியராகப் [Professor of Environmental Biology & Global Change] பதவி ஏற்றார். மேலும் அவர் சூழ்மண்டல மையத்தின் முதிய நிபுணராகவும் [Senior Fellow of Center of Environmental Science] மதிப்பளிக்கப் பட்டார். அவரின் ஆய்வுப் பணிகள்: சூழ்வெளிக் காலநிலை மாறுதல் பற்றிய கம்பியூடர் கணித மாடல் அமைப்புகளும், மெய்யான நிகழ்ச்சிப் பதிவுகளை ஒப்புநோக்குதலும் ஆகும். காலநிலை மாறுபாடு [Climate Change] வெளியீட்டு இதழின் படைப்பு ஆசிரியரும் அவரே! அவரது ஆராய்ச்சி வெளியீடுகள் 450 மேற்பட்டவை. ஷ்னைடெர் ஆலோசகராக ரிச்சர்டு நிக்ஸன், ஜிம்மி கார்டர், ரொனால்¡டு ரேகன், மூத்த ஜியார்ஜ் புஷ், கிளிண்டன், இளைய ஜியார்ஜ் புஷ் அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளின் அரசாங்கத்தில் பணியாற்றி யுள்ளார்.

(தொடரும்)

************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Is Our World Warming? By: Samuel Matthews, Senior Assistant Editor National Geographic [Oct 1990]
10 http://www.thinnai.com/sc1014051.html [Author’s Article on Katrina Damage & Evaquation]
11 Stormy Weather: Can We Link to Global Warming By: Jim Motavalli [Nov 11, 2004]
12 A Cold Hard Look at a Telltale Region Arctic By: Peter Spotts, Christian Science Monitor [Nov 18, 2004]
13 Global Warming : Definitions & Debate [http://zfacts.com/p/49print.html
14 Meltdown: Arctic Wildlife is On the Brink of Catastrophe By Steve Connor [Nov 11, 2004]
15 Discovery of Greenpeace Expedition on Greenland By: Dr. Gordon Hamilton [July 22, 2005]
16 Carbon Dioxide [CO2] & Global Warming Potential [Several Internet Reports]
17 Ecological Reports: The Data on Global Warming is Conclusive [Jan 29, 2004]
18 Third World Nears Brunt of Global Warming Impacts By: Paroma Basu [July 11, 2006]
19 Ozone Crisis, The 15 Year Evolution of a Sudden Global Emergency By: Shron L. Roan [1989]
20 Evidence for Global Warming: Degradation of Earth’s Atmosphere; Sea Level Raise; Ozone Holes; Vegetation Response By: Dr. Mitchell K. Hobish [Earth System Science]
21 Warning from Al Gore on Future, “Global Warming Called an Emergency” (June 5, 2005)
22 National Geographic: “Unlocking the Climate Puzzle [May 1998]
23 National Geographic: “Global Warming” Your Vacation May Never Be the Same, The Climate Bomg By: Jonathan Tourtellot [July-Aug 2006]
24 Macleans Magazine: Now with the Weather -Al Gore [May 22, 2006]
25 Pledge to See “An Incovenient Truth” Movie [May 27, 2006]
26 Milankovitch Cycles: Changes in Earth-Sun Interaction By: Matt Rosenberg
27 Astronomical Theory of Climate Change -NOAA Paleoclimatology Program [Sep 9, 2003]
28 Anandu Vernekar Home Page Biographical Sketch [www.atmos.umd.edu/~adv/]
29 Sun, Not Carbon dioxide, is the Primary Driver of Ice Ages; Carbon dioxide is only a Secondary Driver [A New Theory (July 24, 2006)]
30 Milankovitch Theory, Ice Age & Glaciation from: Wikipedia
31 Earth Science & The Environment By: Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D. [1993]

******************

jayabarat@tnt21.com [August, 10 2006]

Series Navigation

சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -7

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

குடுகுடுப்புக் காலக் குயவன்,
முடுக்கி வைத்த பம்பரக் கோளம்!
உடுக்க டிக்கும் அசைவு போல
நடன மிடும் நமது கோளம்!
பல்லாயிரம் ஆண்டுக் கொருமுறை
பரிதியைச் சுற்றி வரும்
வட்ட வீதி நீளும்!
முட்டை வீதி யாகும்!
கோளத்தின் சுழலச்சு சரிந்து
கோணம் மாறி
மீளும் மறுபடியும்!
பனிக் களஞ்சியம்
துருவத்தின் ஓரத்தில் சேர்ந்து,
பருவக் காலத்தில்
உருகி ஓடும்!
காலக் குயவன்
ஆடும்
அரங்கத்தை மாற்றி,
கரகம் ஆட வைப்பான்!
சூட்டுக் கோளம் மீண்டும்
மாறும்,
பனிக்கோளாய்!

“காலநிலைச் சுற்றுப் போக்கு [Climate Cycles] பரிதியின் கதிர்வீச்சு [Solar Radiation] பூகோளத்தின் மட்டரேகையில் படுவதாலும், விழும் காலத்தைப் பொருத்தும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்று வித வேறுபாடுகளால் மாறுபடுகின்றன. முதலாவது பூமி பரிதியை வலம்வரும் சுற்றுவீதி [Orbit] எப்போதும் முழு வட்டமா யில்லாது சற்று நீள்வட்டமாகி மீண்டும் வட்டமாகிறது! இரண்டாவது பூமி ஆடுமோர் பம்பரம் போன்று தலை சுற்றுகிறது [Spin Axis Wobble or Precession]! மூன்றாவது பூகோளத்தின் மத்திம ரேகைத் தளத்திற்கும், சுற்றுவீதித் தளத்திற்கும் இடைப்பட்ட கோணம் சில டிகிரிகளில் மாறி வருகின்றன.”

மிலுடின் மிலான்கோவிச் [Milutin Milankovitch, Yogoslav Geophysicist (1879-1958)]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அண்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர். அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது. காரணம் மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது. அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

ஆர்க்டிக் வட்டாரத்தைத் துணைக்கோள் கண்காணித்த உளவுகள், பூகோளச் சூடேற்றம் மெய்யானது என்று நிரூபித்ததுடன், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் முந்தைய காலத்தை விட 8 மடங்கு வேகத்தில் வெப்பச் சீற்றம் ஏறி வருகிறது என்றும் எடுத்துக் காட்டியுள்ளன! கடற்பனி உருகுவதால் கடல் மட்டம் உயராது. காரணம், கடற்பனிக் குன்றுகள் கடலில் மிதக்கின்றன. ஆனால் கிரீன்லாந்தின் நிலப்பகுதிப் பனிக் குன்றுகள் முழுதும் உருகினால் கடல் மட்டம் 7 மீடர் வரை [சுமார் 25 அடி] ஏறிவிடலாம் என்று அஞ்சப் படுகிறது! ஆனால் அவ்விதம் பனிக்குன்றுகள் யாவும் கிரீன்லாந்தில் உருக 1000 ஆண்டுகள் கூட ஆகலாம்!

மார்க் ஸெர்ரீஸ் [Mark Serreze, University of Colorodo]

பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகின்றன! கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது! கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

முன்னுரை: பூகோளச் சூடேற்றத்திற்கு முக்கிய காரணம் பரிதி, கார்பன் டையாக்ஸைடு அல்ல என்னும் புது நியதி பரவி வருகிறது! அவ்விதிப்படி மனிதர் உண்டாக்கும் கார்பன் டையாக்ஸைடு இரண்டாம் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது! 4.6 பில்லியன் ஆண்டுகளாக நாமறிந்த பூகோளத்தின் வரலாற்றில் பரிதியை வலம்வரும் பூமியின் பாதை மாற்றம், சுழலச்சுத் திரிபு போன்ற மாறுதல்களே பூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய காரணம் என்பது உறுதியாக்கப் பட்டிருக்கிறது. சுழலச்சின் கோணம் 23.5 டிகிரி என்பதும், பூமிக்கும் பரிதிக்கும் உள்ள தூரம் 90 மில்லியன் மைல் என்பதும், பூமி வலம்வரும் பாதை வட்டவீதி என்பதும் நிலையான பரிமாணக் கணிப்புகள் அல்ல! அவை மூன்றும் மெதுவாக ஆமை வேகத்தில் விண்வெளியில் மாறி வருகின்றன. அம்மாறுதல்களே பூகோளத்தின் வெப்ப மீறல், பனிப்படிவுக்கு முக்கிய காரணம் என்பது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் உறுதி செய்யப் பட்டன!

கடந்த இரண்டு மில்லியன் ஆண்டுகளாக தற்காலப் பனியுகத்தில் ஏற்பட்ட தோற்றம், அழிவுக் கோளாறுகள், பரிதியை வலம்வரும் பூகோளத்தில் மாறி, மாறி மீளும் வட்டவீதி நீட்சி, சுழலச்சின் சாய்வு, துருவத் தலையாட்டம் [Eccentricity, Axial Tilt, Precession] எனப்படும் மூவகைத் திரிபுகளால் நேருகின்றன என்பது 20 ஆம் நூற்றாண்டின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பூகோள நகர்ச்சியின் அந்த மூன்று சுழற்திரிபுகளே “மிலான்கோவிச் சுழற்சிகள்” [Milankovitch Cycles] என்று அழைக்கப் படுகின்றன. சுழற்திரிபுகளின் பரிமாணத்தையும், மீளும் காலத்தை ஆண்டுகளில் கணக்கிட்டுக் காட்டியவர் செர்வியாவின் வானியல் விஞ்ஞானி [Serbian Astronomer] மிலான்கோவிச். பரிதியை வலம்வரும் வட்டவீதி சிறிது நீண்டு நீள்வட்டமாகி மீண்டும் வட்டவீதியாகும் காலப் பரிமாணம் சுமார் 100,000 ஆண்டுகள் என்றும், பூகோளத் துருவத் தலையாட்ட மீட்சி 25,800 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றும், சுற்றும் அச்சு 21.5 டிகிரி முதல் 24.5 டிகிரி வரை திரிபு எய்தி மீண்டும் வர சுமார் 41,000 ஆண்டுகள் ஆகும் என்றும் மிலான்கோவிச் கணித்து அறித்தார்.

வானியல் விஞ்ஞானி மிலான்கோவிச்சின் பூகோளச் சுற்று நியதி:

முதல் உலக யுத்தத்தின் போது, 1914-1918 ஆண்டுகளில் போர்க் கைதியாக புடாபெஸ்ட்டில் [ஹங்கேரி] சிறைப்பட்ட யுகோஸ்லாவின் பூதளவியல் விஞ்ஞானி மிலுடின் மிலோன்கோவிச் [Geophysicist, Milutin Milankovitch] உறுதியாகக் கண்டறிந்தது இதுதான்: பண்டையக் காலநிலை மாறுபாடுகளுக்கு ஒரு முக்கியக் காரணம், பூகோளத்தின் மீது படும் பரிதியின் கதிர்வீச்சுகள் [Solar Radiations] கோடைக் குளிர் காலத்துக்கும், மட்டத் தளத்துக்கும் [Earth’s Season & Lattitude] ஏற்றபடி மாறுகின்றன! பூகோளம் தன்னச்சில் சுழன்று கொண்டு, பரிதியை ஏறக்குறைய வட்டமான வீதியில் வலம் வருகிறது! வட்ட வீதி சற்று நீண்டு நீள்வட்ட வீதியாகி [Circular Orbit –> Eliptical Orbit –> Circular Orbit] மறுபடியும் வட்டவீதிக்கு மீள்கிறது! இது முதல் மாறுதல். ஆனால் பூமி தானே சுற்றும் அச்சு செங்குத்தாக இல்லது தற்போது 23.5 டிகிரி சாய்ந்து உள்ளது. அதன் அச்சின் கோணமும் 21.5 முதல் 24.5 டிகிரி [Angle of Tilt 21.5 –> 24.5 –> 21.5] மாறுபடுகிறது. இது இரண்டாவது மாறுதல். அடுத்து பூமியின் சுழல் அச்சுத் தலையாட்டும் சுழல் பம்பரம்போல் “தலையாட்டம்” [Precession or Spin Axis Wobble] செய்கிறது! இது மூன்றாவது மாறுதல்.

அம்மூன்று வேறுபாடான பூகோள நகர்ச்சியும், சுழற்சியும், ஆட்டமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மீளும் சுற்றுகளாக [Repeat Rhythmic Cycles] வந்து, வந்து பரிதியின் வெப்பசக்தியை உறிஞ்சியும், புறக்கணித்தும் பூமியைப் பனிக்கோளாகவும், சூட்டுக் கோளாகவும் மாற்றி வருகின்றன என்று மிலன்கோவிச் எடுத்துக் கூறினார்! பரிதியின் கதிர் வெப்பம் பூகோளத்தின் துருவப் பிரதேசங்களில் குன்றும் போது, வாயுக்களில் சேர்ந்துள்ள நீர்மை ஆவி நீராய்ப் படிந்து பனிப்பாறைகள் அடுக்கப்படுகின்றன.

1970 ஆண்டுகளில் அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக் கழகத்தின் காலநிலை விஞ்ஞானியாகப் பணிபுரிந்து வரும் ஆனந்து வெர்னேகர் [Anandu Vernekar, Dept of Meteorology, University of Maryland, MD] மிலான்கோவிச்சின் பூகோளச் சுற்று நியதி ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். நவீனப் பூகாந்தத் திருப்பங்கள் [Geomagnetic Reversals] பண்டைய பனிமூட்ட யுகத்திற்கு [Glacian Periods] முந்தைய காலங்களை மிகவும் நுண்மையாக உளவறிய உதவுகின்றன! அக்கூற்றுக்கு மிலான்கோவிச் நியதி முற்றிலும் சரியாகப் பொருந்தி வருகிறது. நமது பூகோளம் தற்போது அடுத்த பனிமூட்ட யுகத்தை நெருங்கி வருவதால் நாமிப்போது பூகோளத்தின் சூட்டுப் பெருக்கத்தில் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

பூகோளச் சுற்றுப் பாதையின் மையத் திரிபு [Earth’s Eccentricity]

மிலான்கோவிச்சின் முப்பெரும் சுழற்திரிபுகளால் பரிதியின் கதிர்வீச்சு பூகோளத்தின் எந்தப் பரப்பில் விழுகிறது, பூகோளத்தின் எந்தக் காலப் போக்கில் [வேனிற் காலம், இலையுதிர்க் காலம், கூதற்காலம், வசந்த காலம்] படிகிறது என்பதே வெப்ப ஏற்றத்தையும், தணிவையும் நிர்ணயம் செய்கின்றன. முதல் திரிபு பூமியின் சுற்று மைய நகர்ச்சி [Earth’s Eccentricity]. அதாவது பூமி பரிதியைச் சுற்றி வரும் பாதை எப்போதும் வட்டவீதி யில்லை! அப்பாதை 100,000 ஆண்டுகளில் [(0% –> 5% –> 0%) Ellipticity] மாறிக் கொண்டு மீள்கிறது. 0% என்பது வட்டவீதியைக் குறிப்பிடுகிறது. வட்டப் பாதையில் பூமி நான்கு காலத்திலும் ஒரே தூரத்தில் [சராசரி 90 மில்லியன் மைல்] பரிதியை வலம்வருகிறது. 5% அகற்சியில் பூமி ஒருசமயம் பரிதிக்கு மிக்க அருகிலும் [84 மில்லியன் மைல்], நேர் எதிர்புறத்தில் மிக்க தூரத்திலும் [96 மில்லியன் மைல்] பயணம் செய்கிறது!

தற்போது பூமி சிறிது நீண்ட நீள்வட்டத்தில் 3% மிகையான தூரத்தில் சுற்றுவதாக அறியப்படுகிறது. 3% மிகையான தூரம் என்றால், 6% அதிகமான பரிதி வெப்பம் பூதளத்தில் ஜூலை மாதத்தை விட ஜனவரியில் விழுகிறது. மிக்க நீண்ட நீள்வட்டத்தில் [5%] சுற்றும் போது, பரிதியின் பக்கத்தில் வரும் பூதளப் பகுதி, தூரத்தில் வரும் பூதளப் பகுதியை விட 20%-30% மிகையான பரிதியின் வெப்ப சக்தியைப் பெறுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பூமியின் சுற்றுப் பாதை ஏறக்குறை வட்டவீதி யென்று தெரிய வருகிறது.

பூகோளச் சுழலச்சின் சாய்வு [Earth’s Axila Tilt]

பூகோளச் சுழலச்சு, சுற்றுப் பாதை மட்டத்துக்குச் சரிந்துள்ள கோணமே சாய்வுக் கோணம் [Tilt Angle] எனப்படுகிறது. அந்தச் சரிவுக் கோணம் 21.5 டிகிரி முதல் 24.5 டிகிரி வரை 41,000 ஆண்டுகளில் மாறி, மாறி மீண்டும் பழைய கோணத்துக்கே வருகிறது. பூமியின் நான்கு காலநிலை மாறுதல்களுக்குப் பூமியின் சுற்றச்சின் சரிவே கரணம். குன்றிய சரிவுக் கோணம் பூமத்தியப் பகுதிக்கும், துருவப் பகுதிக்கும் உள்ள வெப்ப உறிஞ்சல் வேறுபாட்டை மிகையாக்குகிறது. குன்றிய சரிவுக் கோணத்தில் அதிகமான பனித்தட்டுகள் துருவங்களில் உருவாகின்றன. அதாவது சூடான குளிர்காலத்தில், சூடான வாயு மிகையான நீர்மை ஆவியை [Moisture] உட்கொண்டு, பிறகு பனிப் பொழிவாகப் பெய்கிறது. மேலும் வேனிற் காலம் மித வெப்பத்தில் நிலவி, பனிப்பாறை உருகுதல் வேகம் குறைகிறது. தற்போது சரிவுக் கோணம் [23.5] சுமாராக நடுவில் உள்ளது.

பூகோளத் துருவத்தின் தலையாட்டம் [Earth’s Precession]

பூகோளத் தலையாட்டம் துருவ நட்சத்திரம், வேகா நட்சத்திரம் என்னும் இரண்டு விண்மீன்களின் [Pole Star & Vega Star] இடையே நிகழ்கிறது. அந்தத் தலையாட்டம் 23,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீள்கிறது. சுற்றும் பம்பரத்தின் தலையைப் போல் பூமியின் சுற்றச்சும் சுழல்கிறது! அந்தத் தலை யாட்டத்தால், பூகோளத்தின் வடகோளம், தென்கோளம் ஆகிய பகுதிகளில் குறிப்பிடத் தக்க வெப்பக் குளிர்ச்சி மாறுபடுகள் உண்டாகுகின்றன.

(தொடரும்)

************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Is Our World Warming? By: Samuel Matthews, Senior Assistant Editor National Geographic [Oct 1990]
10 http://www.thinnai.com/sc1014051.html [Author’s Article on Katrina Damage & Evaquation]
11 Stormy Weather: Can We Link to Global Warming By: Jim Motavalli [Nov 11, 2004]
12 A Cold Hard Look at a Telltale Region Arctic By: Peter Spotts, Christian Science Monitor [Nov 18, 2004]
13 Global Warming : Definitions & Debate [http://zfacts.com/p/49print.html
14 Meltdown: Arctic Wildlife is On the Brink of Catastrophe By Steve Connor [Nov 11, 2004]
15 Discovery of Greenpeace Expedition on Greenland By: Dr. Gordon Hamilton [July 22, 2005]
16 Carbon Dioxide [CO2] & Global Warming Potential [Several Internet Reports]
17 Ecological Reports: The Data on Global Warming is Conclusive [Jan 29, 2004]
18 Third World Nears Brunt of Global Warming Impacts By: Paroma Basu [July 11, 2006]
19 Ozone Crisis, The 15 Year Evolution of a Sudden Global Emergency By: Shron L. Roan [1989]
20 Evidence for Global Warming: Degradation of Earth’s Atmosphere; Sea Level Raise; Ozone Holes; Vegetation Response By: Dr. Mitchell K. Hobish [Earth System Science]
21 Warning from Al Gore on Future, “Global Warming Called an Emergency” (June 5, 2005)
22 National Geographic: “Unlocking the Climate Puzzle [May 1998]
23 National Geographic: “Global Warming” Your Vacation May Never Be the Same, The Climate Bomg By: Jonathan Tourtellot [July-Aug 2006]
24 Macleans Magazine: Now with the Weather -Al Gore [May 22, 2006]
25 Pledge to See “An Incovenient Truth” Movie [May 27, 2006]
26 Milankovitch Cycles: Changes in Earth-Sun Interaction By: Matt Rosenberg
27 Astronomical Theory of Climate Change -NOAA Paleoclimatology Program [Sep 9, 2003]
28 Anandu Vernekar Home Page Biographical Sketch [www.atmos.umd.edu/~adv/]

******************

jayabarat@tnt21.com [August, 3 2006]

Series Navigation