This entry is part 1 of 31 in the series 20051021_Issue

புதியமாதவி


 

மெளனவெளியில்
என் இருத்தலை
நிச்சயப்படுத்தும்
சுவாசத்தைப்போல
சத்தமின்றி ஒலிக்கிறது
காற்றுடன் கைகோத்த
சங்கீதம்.

செவிப்பறைகள் தீண்டாத
ஒலியின் அலைகளில்
எழுதப்பட்டிருக்கிறது
இந்த சங்கீதத்தின் மொழி.

எப்போதும் என்னுள் இசைக்கும்
பின்னணி இசையாய்
என் சுவாசலயத்துடன்
உயிர்ப்பறவைக்கு மட்டும் கேட்கும்
உன்னத ராகத்தில்
பாடிக்கொண்டிருக்கிறது
அந்தப் பறவை.

பெயர் தெரியவில்லை.
பெயரிடவும் விருப்பமில்லை.
எனக்காகப் பாடுகிறதா ?
எல்லாமே கற்பனையா ?
விழிதிறக்க அச்சப்பட்டு
கண்மூடித்தடவிக்கொண்டிருக்கிறது
வெளிச்சத்தின் கைகள்.
கண்விழித்தால்
கண்ணில் பட்டுவிடும்
பட்டுப்போன மொட்டைமரங்களின்
நிழல்களில்லாத நிஜத்தைக் கண்டு.

—-
puthiyamaadhavi@hotmail.com

 

20051021_Issue

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-6)<< டான் பிரவுண் மேசையில் ஒரு கமண்டலம்<< கவிஞர் புகாரியின் கவிதை நூல்கள் வெளியீட்டுவிழா வாழ்த்துரை<< ‘காலம் ‘ இலக்கிய மாலை!<< கம்பராமாயணத்தில் புறத்திணைக் கூறுகள் (முதற்போர்புரி படலப்பகுதி மட்டும்)<< புத்தகவெளியீட்டில் கிடைக்கப்பெற்ற நிதியை ‘கனடா இலக்கியத் தோட்டத்திற்கு’ அன்பளிப்புச் செய்தார் கவிஞர் புகாரி<< கவிதை: மூலப்பிரதி வாசிப்பு: முன்னோர் மொழிபொருள்<< ஓரு இளைய தலைமுறை இலக்கியவாதியின்(!); சாட்சியம்<< கடிதம் – (ஆங்கிலம்)<< அழிவைப் போற்றும் கற்பு, காதல் தோல்வி<< சுராவுக்கு அஞ்சலி<< கடிதம்<< குறுந்திரைப்படப் பயிற்சிப் பட்டறை<< நாகூர் ரூமியின் கருத்துகள் பற்றி (ஆங்கிலம்)<< சுந்தர ராமசாமியின் மறைவு<< மிமோஸா அஹ்மதி – ஒரு தேடல்…ஓர் அறிமுகம்…சில கவிதைகள்<< தற்கால சீனத்தின் நவீன ஓவியபாணி<< மனிதாபிமானம்<< திசைமாறும் போராட்டக்களங்கள்<< பங்குச் சந்தை வீழ்ச்சி<< வயது வரும்போது. .<< அட்லஸ்<< கீதாஞ்சலி (45) மங்கித் தேயும் மணம்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )<< பெரியபுராணம் – 61 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)<< மிமோஸா அஹ்மதி – சில கவிதைகள்<< பொறுப்பு !<< பேரிடர்கள்<< பந்தம்<< இமாலய மலைச் சரிவுகளில் எழுந்த அசுரப் பூகம்பம்!<< டாவின்சி கோட்