சுப்ரபாரதிமணியனின் சமயலறைக் கலயங்கள்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

தமிழ் மணவாளன்


வாழ்க்கை மிகப் பிரம்மாண்டமான. கோடி கோடியாய் நிகழ்ந்து முடிந்த,நிகழும் மற்றும் நிகழவிருக்கிற வாழ்க்கையின் கூட்டாகவே உலக இயக்கம் சாத்தியப்பட்டிருக்கிறது. இதில் தான் எத்தன விதமான பரிமாணங்கள். ஒருவரின் வாழ்க்கை ஒருவிதமாய், பிறிதொருவருடய வாழ்க்கை மற்றொரு விதமாய் தத்தம் சூழலின் வியூகமாய் மாறிப் போய் விடுகிறது. அவ்விதமாய் மாறி அல்ல மாற்றப் படுகிற கவனத்தில் கொள்ளத் தக்க ஒன்றிரண்டின் குறிப்புகளை பதிவு செய்வதும் அதன் மூலம் விசாரனைக்குட்படுத்திட முயல்வதும் அவசியமாய் படுகிறது.

மானுட வாழ்வின் தீராத வேட்கை என்பது துன்பகளேதுமற்ற நிரந்தர இன்பமென்பதாயினும். அத்தகைய வாய்ப்பு யாருக்கும் வாய்ப்பதில்ல. குறிப்பாய் பெண்களின் வாழ்வினை காட்டாற்றின் வேகமாய் புரட்டிப் போட்டுவிட்டுச் செல்லும் நீர்ச் சுழற்சிகள் ஏராளம் . அத்தகைய நீர்வீழ்ச்சி ஒன்றின் மேலடையாளக் குமிழியாகத் தென்படும் சுப்ரபாரதிமணியனின் சமயலறைக் கலயங்கள் என்னும் நாவல்.

கதைத் தளம் விரிவானதல்ல திரும்பவும் சொல்வதற்கு கதையுமல்ல. கதை தேவையுமல்ல மீண்டும் நினைக்கவும் பேசவும் ஏதுமற்ற சக்கையாய் உலர்ந்து போகத்தான் செய்கிறது பல பெண்களின் இறுதி.

திருப்பூர் நகரையும் அந்நகரின் பிரதான தொழிலான பனியன் கம்பனிகளயும், சாயப் பட்டறைகளையும் கதக் களமாகக் கொண்டு சுப்ரபாரதிமணியன் ஏற்கனவே பல சிறுகதைகளயும் நாவல்களையும் எழுதியது போல் , இந்நாவலின் களமும் அதுவாகவே உள்ளது. அது அவரால் முற்றிலும் அறியப்பட்ட இடம் அங்குலங்களாய் இடைவெளியின்றி அறியப்பட்ட இடம் . அதபோலவேதான் வேறெந்தப் பகுதியிலும் மற்ற பல தொழிற்சாலகளிலும் அலுவலகங்களிலும் இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது என பொருத்திப் பார்த்துக் கொள்ளவியலும்.

பெண்கள் சில தருணங்களில் ஏற்படுத்திக் கொள்கிற அல்லது உருவாகிற உறவுகள் அற்ற உறவுகள் மிகவும் அனுதாபத்துக்குரியது. உறவில் தூய்மையும் அன்பும் இருக்கிறது போதும் . அவ்விதமான உறவற்றதாயும் பொருளாதாரத்தின் கட்டமைப்பாலும் அவளை விலக்குதலாலும் இருக்கிற உறவுகளே தொடர்ந்து உறவுகளாய் வெளி அங்கீகாரம் பெறுவம் சமுதாயச் சோகம். கிருஷ்ணனின் மீது பெரிய எதிர்பார்ப்பு எதுவுமற்று அவனிடத்தில் சக மனித அன்பு கொள்ளும் சாந்தாவால் அவனது சுகவீனம் பற்றி அவனின் குடும்பத்திற்குச் சொல்வதும் அவர்கள் வந்த பிறகு அவ்விடத்தில் நிற்கவும் தயக்கமுற்றவர்களாய் அல்லது இலாயக்கற்றவர்களாக்கப் பட்டவர்களாய் போவதுதான்‘உறவுகளற்ற உறவுகளின் அவலம்.

பெண்களுக்கான குறியீடாக அழகு என்பது அவ்வப்போது நினைவுப்படுத்தம் அம்சம். அதுவேகூட ஒர் ஆணாதிக்க அடையாளம்தான்.பெண் அழகாக இருக்க வேண்டியதன் அவசியம் சக ஆணை சந்தோஷப்படுத்திட வேண்டும் என்பதற்காகவே . அத்தகைய அழகு ஆணுக்கு கட்டாயமில்லை. ஏனெனில் அவனின் அழகு பெண்ணின் விருப்பத்தை, உடன்பாட்ட எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது. அழைக்கும்போ வருகிறவள் என்கிற அகங்காரம். ஆனால் அத்தகைய அழகு பெண்களுக்கு எவ்விதமான ஆபத்தான விளவுகளை வெளியிடங்களிலும், பணியிடங்களிலும் ஏற்படுத்திகிறது என்பதை அறிந்தே வத்திருக்கிறோம்.

சாந்தாவுக்கு அதுவே நேர்கிறது. அழகான பெண்கள் வேலைக்குப் போகிறபோது அவர்களை அனுபவித்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிற முதலாளி, அதிகாரி என்பதும் அதைவிட கூப்பிடும் போதெல்லாம் வந்து படுத்துக் கொள்வார்களென்னும் வக்கிர எதிர்ப்பார்ப்பும் சூழல் யதார்த்தமாய் அமைந்திருப்பது எவ்வளவு துரதிஷ்ட வசமானது.

விதவைகள் தரிசு நிலங்கள் , வேலைக்குப் போகும் பெண்களெல்லாம் நெறிகெட்டவர்கள் என்று சொல்கிற பாடாவதிகள் போல உங்களைப் போன்ற நிறுவனங்கள் தொழிலாளப் பெண்களைக் கொச்சைப் படுத்துகின்றன.

மேற்கண்ட வரிகளப் படிக்கிறபோ இதைச் சொன்ன மகா பெரியவரின் ஞாபகம் வருவதை தடுக்கவியலவில்லை. ஆன்மீகத்தின் பேரால் பீடமேறி வீற்றிருப்பவர்கள் பெண்களுக்கு எதிரான இத்தகைய கருத்து முன் வைப்புகளைக் கொண்டிருப்பது எத்தனை வேதனைக்குரியது.

சாந்தாவுக்கு நேர்கிற இத்துயரிலிருந்து தப்பிக்க தான் அழகற்றவளாக இருந்திருக்கக் கூடாதாவென பல இடங்களில் மருகுகிறாள். அதன் மேலழுத்தங்களால் வேலையில் தொடரவியலாமல் போகிற கட்டாயம். போகிற போக்கில் சந்திக்கிற கிருஷ்ணன். அவனிடம் ஒரு சின்ன ஈடுபாடு.பதட்டம், தடுமாற்றம். நம்பிக்கையற்ற தன் மனோபாவத்தோடு உருவாகும் நம்பிக்கை. அன்பு ரீதியான மெல்லலையிலான பரிமாற்றம்.

மற்றொரு சரடாய் பொது நிகழ்வில் பெண்ணியம் குறித்துப் பேசும் பூசணி, பெண்ணியம் குறித்தான கருத்து வெளிபாடுகள். அவளின் மனநிலை மற்றும் செய்திகள்.

காட்சிகளில் அதிகபட்ச விவரணைகள் ஏதுமற்ற செய்திகளும் ,உரையாடல்களுமாய் நகர்கிற நாவல். சிற்சில இடங்களில் நிகழ்வு பற்றின வெளிப்பாடு சற்று விஸ்தாரமாய் அமந்திருக்கலாமோவென்றும் கூடத் தோன்றுகிறது.

பூரணியின் மகள் மற்றும் தாய் என்று மூன்று தலமுறைப்பெண்களின் மனநிலயில் உள்ளாடைகளைப் பற்றிய அகச்சித்திரங்கள் கலாச்சார மாற்றத்தின் படிநிலைகளை சொல்லாமல் கூறும் உத்தி.

பெண்ணுறுப்பைத் தைத்து விடுவதும், அவர்களது உணர்வு மொட்டை அறுத்தழித்து விடுவதுமான கொடூரத்தைப் படிக்கிறபோது ஏற்படுத்துகிற அதிர்ச்சி, சாந்தா போன்ற எத்தனையோ பெண்கள் வெறும் யோனிகளாகவே முதலாளி வர்க்கத்தால் சில இடங்களில் நிகழ்வதை நினக்கிறபோதும் எழத்தான் செய்கிறது.

உரையாடல்களில் இருக்கிற தீர்க்கத்தைக் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். உரையாடல்களின்போது நம்மை உடனிருக்கச் செய்வதை உறுதிப் படுத்கிறது. அதற்கு முக்கியக் காரணம், எழுத்தாளன் தன் முனைப்போடு பிரஸ்தாபிக்க நினைக்கிற எந்தக் கருத்தையும் பாத்திரங்கள் வாயிலாக வலிந்து பேசச் செய்யவில்ல என்பதான் . பாத்திரங்கள் அந்தந்தச் சூழ்நிலையில் இயல்பாய் பேசுவதாக அமந்திருப்ப எளிமயான சிறப்பு. அதே சமயம் அவ்வுரையாடலை அழுத்தமானதாயும், ஆழமானதாயும் கட்டமைந்திருப்பதையும் கவனம் கொள்ள வேண்டும்.

சமயலறைக் கலயங்கள் பேசும் விஷயம் ஆயிரமாய் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.

பெண்கள் எழுதினாலன்றி ஒப்புக்கொள்ளவியலாது என்றொரு வாதம் தனித்திருப்பினும் , சமயலறைக் கலயங்கள் ஒரு பெண்ணிய நாவல் என்பதில் சந்தேகமில்ல. அது ஒரு பெண்ணின் மனநிலையில் உணர்வோடு எழுதப்பட்டிருக்கிறது.

இயல்பு வாழ்வின் சிக்கல்களின் பரிமாணத்தை ஒரு புள்ளியில் நின்று பேசுகிற இந்த நாவல் அந்தப் புள்ளிய கடக்கிற எவரயும் சலனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

….

ரூபாய் 45 –

காவ்யா பதிப்பகம்

சென்ன

srimukhi@sancharnet.in

***

Series Navigation

author

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்

Similar Posts