சிவ -சக்தி- அணு – காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள்

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

எச்.பீர்முஹம்மது


சைவம் அதன் கோட்பாட்டு வடிவத்தில் பல கிளைகளாக பிாிந்தது. தென்னிந்திய சைவம், வட இந்திய சைவம், காஷ்மீர் சைவம் போன்றவை அதன் கிளைகள். சிவனை மையமாக கொண்டு இதன் கருத்துக்கள் நிலைபெற்றன. காஷ்மீர் சைவம் காஷ்மீர் பகுதியில் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் ஏற்பட்டது. இதனை தாந்திாீகர்கள் பலர் பின் தொடர்ந்தனர். வசுகுப்தர், சோமநந்தர், அபிநவகுப்தர் போன்றோர் அதனின் தலைசிறந்த கோட்பாட்டாளர்கள்.

காஷ்மீர் சைவம் வேதங்களின் அதிகாரத்தையும், அதன் நிலைப்பு தன்மையையும் மறுத்தது. மேலும் சாதி முறையையும் நிராகாித்தது. இது தாிகா, ஸ்பந்தா, பிரத்யபிஜனா என்ற மூன்று முக்கிய கோட்பாட்டோடு தொடங்குகிறது.

தாிகா சிவ-சக்கதி – அணு அல்லது பதி-பாச-பசு என்ற மூன்றாக நீள்கிறழது. காஷ்மீர் சைவம் தனிமனித ஆன்மாவும், பொருளாய உலகமும் சிவனோடு ஒன்றுகிறது என்றது. அவைகள் சிவனின் வெளித்தோற்றங்கள். சிவனே அதன் வடிவமாக இருக்கிறான். இது ஸ்பந்தா எனப்படும். ஆன்மாவானது சிவனோடு அடைதல் அல்லது சிவ அனுபவத்தை பெறுதல் பிரத்யபிஜனாவாகும் இந்த கோட்பாடானது சூபிசத்தின் இயைப்புக்கு ஒத்ததாகும்.

சிவனே உயர்ந்த இருப்பு. அதன்சாரம் தான் மனிதன். இந்த இருப்பானது முழுமையானது, நலையானது, கடக்க முடியாதது. சிவனே முழு முதல் உணர்வு. அந்த உணர்வின் வெளிப்பாடே மற்றவை. இந்நிலையில் காரண – காாியத்திற்கிடையே எந்த வித்தியாசமும் இல்லை. தூய வஸ்துவாக சிவனை இருத்தும்போது உலகின் தோற்றம் என்பது சிக்கலான கேள்வியாக இருக்கிறது. இதற்கு இவ்வுலகமானது சிவனின் பிரதிபிம்பம் என்கிறது காஷ்மீர் சைவம். கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பம் கண்ணாடியின் எந்த கறையையும் ஏற்படுத்தாதை போன்று சிவனித்திலும் எந்த கறையையும் உண்டு பண்ணுவதில்லை.

உலகின் வெளிப்பாட்டுக்கு சிவனோடு சக்தியும் இன்னொரு காரணமாகும். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிாிக்க முடியாதவை. சக்தியானது அலைவுறும் நிலையில் அது விமர்சமாயாவாகும். இந்த சக்தியானது சித்தம், ஆனந்தம், இச்சை, ஞூானம், கிாியை, யோகம் என்ற ஆறுவித தன்மைகளை கொண்டது. சித்தம் என்பது அறியும் நிலை, ஆனந்தம் அதனை ஏற்படுத்தும் வழி, இச்சை படைப்பின் தூண்டல், கிாியையானது செயல்பாடாகும். யோகம ; சிவ-சக்தி இரண்டும் நிலை, ஞூானம் என்பது படைப்பின் தோற்றம். படைப்பு நிலையில் சிவசக்தியை பிாிக்க முடியாது. இதன் உறவு வெப்பத்துக்கும் நெருப்புக்கும் இடையேயான உறவாகும். சக்தி வெளிப்படும் போது உலகம் தோற்றம் கொள்கிறது. அது மறையும் பொழுது பிரளயம் ஏற்படுகிறது. காஷ்மீர் சைவத்தை பொறுத்தவரை சிவனுடன் ஒன்றுவது உலக இறுக்கங்களிலிருந்து விடுதலை பெறுவது ஆகும்.

காஷ்மீர் சைவத்தின் சிவ-சக்தி என்பது ஆண்-பெண் உறவோடு இணைத்து பார்க்கப்படுகிறது. ஆண்-பெண் நிலையில் காஷ்மீர் சைவம் தாந்திாிகத்தோடு இணைகிறது. தாந்திாீகத்தின் தொடர்ச்சியில் இதன் உறவு பிாிக்க முடியாததாகும். பிரகிருதி -புருஷ கோட்பாட்டின் படி பிரகிருதி சக்தியாகவும், புருஷ என்பது சிவனாகவும் இருக்கிறது. சக்திக்கு செயல்படும் மற்றும் செயல்படா ஆகிய இரு நிலைகள் உள்ளன. செயல்படா நிலையில் இது சிவனோடு அல்லது பிரகாசத்தோடு இணைந்து வடுகிறது. செயல்படும் நிலையில் உயர் இருப்பானது உணரும் நிலையை அடைகிறது. உயர் இருப்பானது கடக்க முடியாததாகவும், நிலையானதாகவும் இருக்கிறது. உயர் இருப்பில் சிவ சக்தி இரண்டற கலந்து விடுகிறது. சக்தியின் முதல் மாறுதல் நிலை இச்சையாகும். இரண்டாவது நிலையில் சித்தம் அல்லது உணர்வு வடிவமாகும். பின்பு அறிவாகவும், செயலாகவும் மாறுகிறது. இவை முழுமை அடையும் பொழுது படைப்பாக மாறுகிறது. மனித விந்தணுவானது சக்தியை சார்ந்து அமைகிறது. இங்கு பெண்ணே முன்னிலைப்படுத்தப்படுகிறாள். சக்தியானது கருவி காரணமாகும் போது விந்தணுவானது பொருளாயத காரணமாயிருக்கிறது.

சக்தியானது அதன் இன்னொரு நிலையில் பெண் தெய்வங்களோடு தொடர்பு கொண்டது. பிரபஞ்ச படைப்பு நிலையில் மூலப்பிரகிருதியானது அம்ச ரூபினி, காலரூபினி, காலாம்ச ரூபின் மற்றுமட் அதன் துணை வடிவங்களாகிறது. முதல் நிலையில் சக்தியானது துர்கா, லட்சுமி, சரஸ்வதி சாவுத்ாி மற்றும் ராதை ஆகிறது. இரண்டாம் கட்டத்தில் கங்கா, துளசி, மனசா, சாஸ்தி, மங்களகாந்திகா, மற்றும் காளியாகிறது. மூன்றாம் கட்டத்தில் கிராம தேவதைகளாகவும் வடிவம் கொள்கிறது.

இம்மாதிாியான பெண் தெய்வநிலை தாந்திாீக தாக்கத்தின் விளைவாகும். இவர்களே தேவிகள் என அழைக்கப்பட்டனர். காஷ்மீர் சைவம் மதாீதியான சடங்குகளுக்கோ, வழிபாடுகளுக்கோ மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அது ஜீவனானது சிவ-சக்தியோடு ஒன்றும் நிலையை எடுத்துரைத்தது. இதன் மூலம் எல்லாவித துயரங்களிலிருந்தும் விடுதலை அடையலாம் என்றது. இம்மாதிாியான கோட்பாட்டு சூழலின் ஒருவகையில் காஷ்மீர் சைவம், பெளத்தம், தாந்திாீகம், சூபிசம் இவற்றுடன் ஒன்றி வருகிறது

peer13@asean-mail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது