சிவாஜி படத்திற்கு மற்றுமொரு “பில்டப்பு”

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

குசும்பு குமார்


கடந்த வாரம் “ஆனந்த விகடனில்” சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் தொகுப்பையும்,அதற்கு நம் “குசும்பு குமாரின்” பதிலையும் காண்போம்.

1. “சிவாஜி” ரஜினி படமா? ஷங்கர் படமா?

சுஜாதா அவர்களின் பதில் : ரஜினி நடிக்கும் ஷங்கர் படம்.

குசும்பு குமாரின் பதில் : ரஜினி எனும் பில்டப்பிற்கு மேல்

பில்டப்பு கொடுக்கும் ஷங்கர் படம்.

2. ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறை வேறுமா?

சுஜாதா அவர்களின் பதில் : நிறைவேறும்,அவரது சூப்பர் ஸ்டார்

அந்தஸ்துக்குப் பங்கம் வராமல்!

அதே சமயம்…!

குசும்பு குமாரின் பதில் : நிறைவேறும்,அவரது சூப்பர் ஸ்டார்

பில்டப்புக்குப் பங்கம் வராமல்!

அதே சமயம்…!

3. அதே சமயம்?

சுஜாதா அவர்களின் பதில் : ஒரு ஷங்கர் படத்தின் கதைத்

திருப்பங்களுக்கும்,சுவாரஸ்யமான

முரண்பாடுகளுக்கும்

பிரமாண்டத்துக்கும் குறைவிறுக்காது.

குசும்பு குமாரின் பதில் : ஷங்கரின் சொந்தபடம் போல

சிக்கனமாக இல்லாமல்,அவர் இயக்கும்

படம்போல producerக்கு மிகுந்த செலவு

வைக்கும் மற்றுமொரு பில்டப்புப் படம்.

4. ரஜினி என்றால் பன்ச் டயலாக் இருக்குமா?

சுஜாதா அவர்களின் பதில் : இருக்கிறது.விவேக் மூலம் சொல்ல

வைத்துவிட்டோம். பன்ச்சுக்கு பன்ச்,

டிக்னிட்டிக்கு டிக்னிட்டி!

குசும்பு குமாரின் பதில் : இருக்கிறது.விவேக்கையும்

பில்டப்பிற்குப் பயன்படுத்தியுள்ளோம்,

‘பில்டப்புக்கு பில்டப்பு’, ‘காசுக்கு காசு’

5. ஏன் இத்தனை தாமதம்?

சுஜாதா அவர்களின் பதில் : நல்ல கேள்வி ! படத்தில்

பணிபுரிந்த அத்துனை

கலைஞர்களும் இந்தியாவின் சிறந்த

கலைஞர்கள்.ரஜினி,ஷங்கர்,ஏவி.எம்.

படம் என்பதால்,தனிப்பட்ட

சிரத்தையுடன் பார்த்துப் பார்த்துச்

செய்ததால் தாமதம், லேட்டாக

வந்தாலும் நீட்டாக வந்திருக்கிறது.

குசும்பு குமாரின் பதில் : ஒரு மொக்க கேள்வி, படத்தின்

பில்டப்பிற்கு இந்த தாமதம்

வைப்படுகிறது,அதனால் தான் சக

ஊழியர், ஒலி பொறியாளர்

சச்சுதானந்தன், படப்பிடிப்பு குழுவிற்கு

அளிக்கப் பட்ட விருந்தில் இறந்த

போதுகூட, ரஜினி,ஷங்கர் உள்பட

யாரும் அவர் இறுதிசடங்கில் யாரும்

பங்கேற்கவில்லை,

“அல்டாப்பு குறைந்தாலும் பில்டப்பு குறையவில்லை”

6. படத்தின் tagline என்ன?

சுஜாதா அவர்களின் பதில் : சிவாஜி அமெரிக்காவிலிருந்து

வந்து, முதல் பாதியில் விழுகிறார்;

இரண்டாம் பாதியில் எழுகிறார்!

குசும்பு குமாரின் பதில் : சிவாஜிக் குழுவின் பில்டப்பினால், படம்

பார்க்க வரும் ரசிகன், முதல் பாதியில்

இருந்து கடைசிவரை எழ முடியாமல்,

வீழ்ந்தேக் கிடப்பான்.தன்

வாழ்க்கையிலும்..

7.கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்…?

சுஜாதா அவர்களின் பதில் : சொல்கிறேனே ! அடுத்த வாரம்…

குசும்பு குமாரின் பதில் : சொல்கிறேனே ! அடுத்த வாரம்…

( மறுபடியும் பில்டப்பு தொடர்கிறது…!)

குசும்புடன்,

குசும்பு குமார்


kusumbukumar@gmail.com

Series Navigation

author

குசும்பு குமார்

குசும்பு குமார்

Similar Posts