சிவப்பு மின்மினிகள்
Published December 5, 2010 • By
கலாசுரன்
கலாசுரன்
**************************
அந்த இரவின்
சூழ்ந்த இருளில்
சிவப்பு மின்மினி ஓன்று
மேலெழுவதும் கீழிரன்குவதுமாய் தொடர
அது
மேலெழுந்த உச்சங்களில்
சற்றுநேரம்
ஒளிமிகுந்த தோற்றமளித்து
கீழிறங்கி சற்று மங்கலாக
தொடரும்
உச்சங்களிலான ஒளியில்
இரு கண்களும் ஒரு மூக்கும்
தெரிந்து மறைவதுண்டு…
சில நிமிடங்களுக்குப் பிறகு
அந்த மின்மினி
தரையில் முகம் குப்புர விழுந்து
மெல்ல இறந்து விட்டது
சற்று தொலைவிலான இருளில்
இன்னொரு மின்மினி ….!
***********************************