சில எதிர்வினைகள்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

ரோஸா வசந்த்


சிவக்குமார் எழுதிய கட்டுரையும், என்னுடைய விமர்சனத்தை அவர் எதிர்கொண்ட விதமும் அறிவுஜீவி நேர்மை என்பதை விளக்கும் வண்ணம் ஒரு எடுத்துகாட்டுதன்மையுடன் இருந்தது. ஏற்கனவே அவர் போற்றும் அறிஞர்கள் காட்டிய அதே நேர்மையையும், அவர் தனக்குதானே சான்றிதழ் அளித்து தான் முன்வைப்பதாய் சொல்லும் ஆரோக்கியமான ஒரு விவாதத்திற்கு தேவையான நேர்மையையும் அவர் காட்டியவிதம் உள்ளபடியே மிகுந்த மகிழ்சியில் என்னை ஆழ்துகிறது. நேரு பண்டிட் என்ற அடைமொழிக்கு தகுதி பெறுவதை நிறுவமுடியும் என்று மீண்டும், மீண்டும் கூறினார். (விட்டால் இந்தமுறையும் அதை சங்கரபாண்டி நேர்மையாக எதிர்கொள்ளவில்லை என்றும் சொல்லிகொண்டிருந்திருப்பார். ) நான் அது வெறும் சாதிபெயர்தான் என்று சுட்டிகாட்டிய உடன், சிவக்குமார் சங்கரபாண்டியை ஜெயகாந்தன் விஷயத்தில் வலியுறுத்தியது போல, வெறும் சாதிபெயரை முன்வைத்து பண்டிட் ஆகமுடியும் என்று சொன்னதற்கு திண்ணை வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும். அவர் அவ்வாறு செய்யாதது நேர்மையின்மை என்று சிலர் நினைக்ககூடும். அது சரியல்ல. ஏனெனில் எல்லோருக்கும் பொதுவான நேர்மை என்று ஒன்று கிடையாது. சிவக்குமார் சன்கரபாண்டியை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொன்னாலும், சிவக்குமார் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை. சிவக்குமார் பின்பற்றும் தர்மம் அவரை அவ்வாறு கேட்கும்படி வற்புறுத்தாது. நானும் கிண்டலுடன் சிவக்குமாருக்கு இது குறித்து மின் அஞ்சல் எழுதி பார்தேன். ஆனாலும் மூர்கம் வெளிபடும் என்னை கண்டுகொள்ள அவருக்கு அவசியம் ஏதாவது உண்டா ? இவையெல்லாம் மெளனத்தால், புறக்கணிப்பால் அணுகவேண்டிய விஷயம் என்று அவருக்கு தெரியாதா ? இந்த விவாதம் தொடர்பான திண்ணையில் உள்ள அனைத்தையும் அவர் தனது கட்டுரைக்கு கீழே இணைப்பாக தந்தாலும் என் கடிதத்திற்க்கு இணைப்பு தர அவருக்கு கட்டாயம் எதாவது உண்டா ? அது தவிரவும் எவ்வளவு சாமர்தியமான நேர்மையுடன் கூடிய தர்கம் அவரது கட்டுரையில் வெளிபடுகிறது. சில காலம் முன்பு திண்ணையில் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரைகளை சிவக்குமார் மொழிபெயர்த்து தந்திருந்தார். ஜேகேயிடமிருந்து இந்த வகையான தர்கம் செய்யும் வழிமுறையைத்தான் அவர் கற்றுகொண்டார் போல தெரிகிறது. இதில் மார்க்சியத்திற்க்கு வேறு பங்கு இருக்கிறது போல தெரிகிறது. லால் சலாம்! (அல்லது கேஸர் சலாம், இரண்டுக்கும் இப்போ என்ன பெரிய வித்தியாசம்!)

‘ப்ளாக் மெயில் ‘ என்ற பிரயோகம் வெள்ளை இனவாத வார்த்தை என்று உணர்ந்ததும், ‘வொயிட் மெயில் ‘ என்று ஒரு பிரயோகத்தை முன் வைக்க சரியான ஒரு உதாரணத்தை எதிர்பார்த்திருந்தேன். சிவக்குமார் அதற்கு ஒரு சரியான உதாரணமாய் இருந்ததற்க்கு மிகுந்த நன்றி.

சிவக்குமாரைவிட அதிக நேர்மை, மற்ற வாசகர்களிடமும் திண்ணை அறிஞர்களிடமும் வெளிபட்டது குறித்து இன்னும் மிகுந்த மகிழ்ச்சி. சிவக்குமார் மீண்டும், மீண்டும் நேருவின் பண்டிட் தகுதி பற்றி பேசிய போது இங்கே பலருக்கும் அது ஒரு சாதி பெயர் என்பது தெரியும் என்றாலும், மற்றவர் விவாதத்தின் நடுவே குறுக்கிடாத அவர்களின் நேர்மையும் பாரட்டுகுரியது. ஆனால் அதை நான் சபை மரியாதை தெரியாமல் இடையில் புகுந்து சுட்டிகாட்டியபின், நேர்மையாய் மெளனத்தை கலைத்து ‘ நோ, நோ இட் ஈஸ் ஒன்லி எ ஸர்னேம், ஸோ லெட்ஸ் நாட் டிஸ்கஸ் அபவுட் இட் ‘ என்று சொலவது எததகைய நேர்மை. வாழ்க!

அப்பறம் அறிஞர் நீலகண்டன்! தேவ பாஷை குறித்து சின்னதாய் எழுதியதற்கு ‘இந்துதவ சூத்திரனுக்கு ‘ (பிரயோகம் உங்களுடையது) ஏன் இவ்வளவு கோபம் வருகிறது ? நீசபாஷை குறித்து யாரேனும் எதுவும் சொன்னால் இந்துத்வ சூத்திரனுக்கு கோபம் வருமா ? இந்துத்வத்தில் ‘சூத்திரனுக்கு ‘ தனது தாய்மொழிக்காக இவ்வளவு கோபம் வர உரிமை இருக்குமா ? இங்கே யார் சமஸ்கிருதம் படிக்க தடைவிதித்தார்கள் ? அல்லது அது குறித்து பேசினார்கள் ? தமிழகத்தின் தலைநகரில் அதிகம் ‘குழைந்தைகள் ‘ தமிழை இரண்டாவது பாடமாக வைத்திருக்கின்றனவா. சமஸ்கிருதத்தை வைத்திருகின்றனவா, என்று பார்த்துவிட்டு பேசலாமே! தேவபாஷைக்கு ஒரு பிரச்சனையும் இல்லாதபோது, வெறுமன சமஸ்கிருதம் குறித்து மிகையாய் வைக்கப்படும் சில புருடாக்களுக்கு ஒருவர் பதில் அளித்தால் இந்துத்வ `சூத்திரனுக்கு ‘ ஏன் இத்தனை கோபம் வருகிறது ? (மஞ்சள் ரத்தம் கொதித்தால் அதை புரிந்து கொள்ளமுடியும், அது வேறு விஷயம்.)

சமஸ்கிருதத்தில் மட்டுமா அறிவு இருக்கிறது, வங்காளம், உருது, அரபு, ப்ரஞ்சு என்று அறிவு பல மொழிகளில் விரிந்து கிடப்பதால், நம் குழந்தைகளுக்கு அறிவு தடையில்லாமல் கிடைக்க எல்லா மொழிகளையும் கட்டாயமாக்கும் கோரிக்கைய RSS வழியாக முன்வைக்க முனைவீர்கள் என்று நம்புகிறேன். ( நீசபாஷைக்கு அத்தகைய தகுதி இருக்காது என்பதால் அது குறித்து பேசவில்லை). அப்பறம், அது என்ன, சமஸ்கிருதத்தில் முரண்மை (ambiguty) அதிகம் இல்லாமல் விஷயங்களை முனவைக்க முடியுமா ? (அப்பறம் அது என்ன மொழியோ, அங்கே என்ன வகை இலக்கியம் படைக்க முடியும் ?) எனக்கு தெரிந்த வரை அப்படி இல்லாதது மட்டுமல்ல, வேறு பலரும் இதை கிழித்திருக்கும் விஷயம் தெரியாதா ? எப்படி இவ்வளவு தைரியமாய் ரீல் விட முடிகிறது ? ஒரே வார்தைகளுக்கு பல அர்தங்கள், ஒரே பொருளை சுட்ட பல வார்தைகள் என்று எல்ல மொழிகளையும் போலத்தான் சம்ஸ்கிருதமும் இருக்கிறது (சொல்லபோனால் இன்னும் குழப்பமாக). சம்ஸ்கிருதம் படித்து, மொழியியலும் படித்துதான் சொல்கிறீர்களா ? சரி, அதெல்லாம் தேவையா என்ன, மற்றவர் மட்டையடித்ததை மேற்கோள் காட்ட ? நானும் இணையததில் முடிந்தவரை தேடிவிட்டேன், இந்த ரிசர்ட் ப்ரிக்ஸை வைத்து மற்றவர்கள் அடிதத மட்டையடிகள்தான் கிடைத்ததெ ஒழிய, ஒரிஜினல் கிடைக்கவில்லை. கொஞ்சம் எனக்கு அனுப்பிவைக்கமுடியுமா ? விஷயத்ததை பிட்டு பிட்டு வைக்க வசதியாய் இருக்கும். (நீங்கள் இளங்கோவனுக்கு எழுதியுள்ளதை படித்தால் இணையத்தில் கட்டுரை இருப்பது போல தோன்றுகிறது.)

அப்பறம் ரொம்பதான் ஸயண்டிஃபிக்காத்தான் பேசறீர், ஆனா அதை இங்கே மட்டும்தான் செய்யறீர், கொஞ்சம் சமஸ்கிருதம் தேவ பாஷைன்னு சொலறவங்ககிட்டயும் இன்னும் என்னேன்னவோ அதைபத்தி புருடா விடும் இந்துதவ இணையதளத்தில் போய் பேசப்டாதோ! எத்தனையோ இணையதளங்கள்ளே என்னேன்னவோ பிதற்றறாளே! இந்துத்வத்தில் ‘சூத்திரனுக்கு ‘ அவ்வளவுதான் உரிமையோ! மத்தவா கூட சண்டை போடமட்டுத்தானா ? இன்னும் பக்கத்தில் நடக்கும் RSS ஷாகாவில் கூட சமஸ்கிருதம் குறித்த அதீதமாய் உளருபவர்களை பார்கலாம், அவர்களிடம் எல்லாம் போய் ஸயின்டிஃபிகா பேசுகிறீர்கள் என்று நம்புகிறேன்.

சமஸ்கிருதம் பத்தி என்ன ரீல் விட்டாலும் அதைவைத்து ரீல் விடுபவர்கள் பற்றிய எந்த முடிவுக்கும் வரகூடாது, ஆனால் ஆயிரம் வருட கோபத்தில், தனது மொழி சொந்த நாட்டிலெயே கேவலப்படுத்தபடுவதை, அழிக்கபடுவதை வைத்து கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு தனித்தமிழ் என்று யாரேனும் யதார்தத்திற்க்கு ஒவ்வாமல் (அது நடைமுறையில் சரிபடவும் செய்யாது, அதனால் பெரிய ஆபத்து எதுவும் விளைய போவதில்லை என்றாலும்) பேசினால் அது குறித்து என்ன வேண்டுமானலும் சொல்லலாம். மஞ்சுளா மாமிபோல ஆத்திரத்தை கக்கலாம். நல்லதொரு நியாயம் (அதாவது லாஜிக்).

அப்பறம் யாரந்த P. ராமனுஜன், பாணினியின் சமஸ்கிருத இலக்கணம் மூலம் அல்காரிதம் உருவாக்கினாரா ? அப்படி ஒரு புருடாவை இணையம் முழுக்க, இந்துத்வ பக்கங்களில், மற்றும் டிஸ்கஸன் குரூப்களில் படிக்கிறேன். ஆனால் இந்த ஆசாமியின் ஒரிஜினல் கட்டுரை மட்டும் கையில் கிடைக்க மாட்டேனென்கிறது, வைத்து கிழிக்கலாம் என்றால். கொஞ்சம் எனக்கு உதவகூடாதா ? (நீலகண்டன், ராமனுஜனின் மின் அஞ்சல் முகவரி அளித்தால்கூட போதும், நானே நேரே அந்த ஸ்ரீவைஷ்ணவர் ( இது நான் குத்தும் முத்திரைன்னு நினைக்கப்டாது, இது ராமானுஜர்(இவர் ஒரிஜினல்) பற்றிய ஒரு இணைய தளத்தில் கிடைத்த தகவல்) கிட்ட பேசிக்கிறேன். ) சமஸ்கிருத வளர்ச்சிக்கு (மற்றும் பல புருடாக்களை உருவாக்குவதில்) இந்த Centre for Development of Advanced Computingற்க்கு நிறைய பங்கு இருப்பது போல் தெரிகிறது. ஏற்கனவே இது போல பல புருடாக்களை கேள்விபட்டு, படித்து அதை கிழித்தும் ஆச்சு, நீலகண்டன் ராமனுஜனின் ஒரிஜினல் ‘ஆய்வுதாளை ‘ எனக்கு அனுப்பினால் கிழிக்க முயற்சிக்கிறேன்(ஆய்வுதாளை அல்ல, அதில் உள்ள விஷயத்தை)– இந்த `வேதிக் மேதமேடிக்ஸ் ‘ பற்றி கிழிக்கும் முன்னால்.

மேலே போகும் முன்னால் சில விஷயங்கள், நான் தனி தமிழ்வாதி கிடையாது. சமஸ்கிருதத்தையோ இன்னும் எந்த மொழியையும் தவிர்த்து தமிழில் எழுத வேண்டும் என்ற கொள்கையும் கிடையாது. மற்ற எல்லா மொழிகளையும் போல சமஸ்கிருதத்தையும் பாவிப்பதில் எந்த மனத்தடையும் இல்லை. சமஸ்கிருதம் குறித்த மிகையான புருடாக்களை, அதையும் ஸயன்ஸ், கணிதம் என்று போட்டு ஏமற்றிவருவதால் மட்டும் எழுத வேண்டியுள்ளது. அதுவும் இங்கே அறிவியல்ரீதியாய் பேசுவதாய் பாவனை செய்தபடி (அதாவது சமஸ்கிருதம் குறித்த மிகையான கூற்றுகளை நிராகரிப்பதாய் தோற்றமளித்து) நீலகண்டன் சந்தடி சாக்கில் மற்ற புருடாக்களை முன்வைப்பதால் பேசவேண்டியுள்ளது.

மீண்டும் நீலகண்டனுக்கு, அப்பறம் வழக்கம் போல ஷ்ராடிஞ்ஞர் மெந்தலீஃப் (பிரியாடிக் டேபிளே சமஸ்கிருத இலக்கண அடிப்படையில்தான் உள்ளதா ? அப்பறம் இப்போதைய ஃபேஷன்படி இஸ்ரேலில் இருந்து யாரையும் காணோமே!) etc, அதுக்கென்ன உங்க காட்டிலே மழைதான்! என்னதான் தேசியம் பேசினாலும் (காலத்துகேற்ப மாறி பழைய ஹிட்லர் ஆதரவை எல்லாம் வெளீப்படையாய் பேசாவிட்டாலும்), வெள்ளைக்கரனை காட்டித்தான் இந்துத்வவாதிகள் தங்களுக்கு சர்டிஃபிகேட் கொடுத்து கொள்ளவேண்டியிருக்கிறது. இப்படி நிறைய உதாரணம் உங்களுக்கு கிடைக்கும், உங்களுக்கு தெரியாத இன்னும் புதுசா பல வெள்ளைகார உதாரணங்களை நானே தரமுடியும். அதிலிருந்து என்ன அறிவை, முடிவுகளை நாம் வந்தடைய முடியும் என்பதுதான் முக்கியம். ஜீனியஸ் என்று அழைக்க தகுதியுள்ள அறிவியல் மேதைகளில் சிலர் மகா முட்டாள்தனமாக பல சமயங்களில் உளரிகொட்டியிருப்பதை காட்டமுடியும். பலர் கிருஸ்தவ அடிப்படைவாதிகளாக, யூத அடிப்படைவாதிகளாக இருப்பதை காட்டமுடியும். ஷ்ரோடிஞ்சர் உபனிஷத் குறித்து கொஞ்சம் உசத்தியா பேசியிருப்பதாகத்தான் கேள்வி படுகிறேன் (மீண்டும் இது குறித்த மட்டையடிகள்தான் கிடைக்கிறதே ஒழிய, ஒரிஜினல் கிடைக்கவில்லை, கிடைத்தால் அது என்ன சந்தர்பத்தில் சொல்லபட்டிருக்கிறது, அத்ற்க்கு எவ்வளவு மதிப்பு தரலாம், அதிலிருந்து வந்தடையும் மற்ற அபத்தங்கள் குறித்து பேசமுடியும்.) நான் சொல்லபோகும் விஷயம் குறித்து நீலகண்டன் கேள்விபட்டிருக்க வாய்பில்லை என்று நினைக்கிறென். சில தனிப்பட்ட காரணங்களினால் கொஞ்சம் குண்ட்ஸாக மட்டும் எழுதுகிறென். Quantum Stochastic calculus என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. இதில் creation, preservation. annihilation (operators) என்று சில உபசமாச்சாரங்கள் இருக்கிறது. நம்ம ஊர் பிரம்மா, விஷ்ணு, சிவன் செயவதாய் சொல்லப்படும் படைத்தல், காத்தல், அழித்தல் விவகாரங்களை இதனுடன் முடிச்சு போடுவது பெரிய விஷயமல்ல. அவ்வாறு முடிச்சு போட்டவர் சாதரணமானவர் இல்லை, இந்த துறையில் சில அடிப்படை கோட்பாடுகளை உருவாக்கியவர்.(இவரும் ஸ்ரீவைஷ்ணவர்தான், சொல்வது நானல்ல, அவரே அவரை பற்றி பெருமையாய் சொல்லிகொண்டது) ஆனால் படிக்கும் எவருக்கும் இவர் (தனது புத்தகத்தின் முதல் பக்கத்தில்) போட்டுள்ள இந்த முடிச்சை ஸீரியஸாய் எடுத்துகொள்ள முடியாது. விஷயம் தெரிந்தவர்கள் கொஞ்சம் நகைச்சுவையாய் எடுத்துகொள்வார்கள். மேற்கில் அவரவர் பண்பாட்டை மதிக்கும் விதமாய் (துனிஸியாவிலிருந்து வரும் ஒரும் முஸ்லீம் இதே போன்ற ஒரு முடிச்சுபோடும் விதமாய் ஒரு இயற்பியல் விஷயத்தையும், குரானிலிருந்து ஒரு வரியையும் தொடர்பு படுத்தி பேசினால் அதை பார்பது போல்) ஒரு பார்வையாக எடுத்துகொள்வார்கள். இந்தியாவை பற்றி ஒரு மாயபிம்பத்தை வைத்திருக்கும் (இங்கே எல்லார் கண்ணிலும் ஒரு ஒளி இருப்பதாய் நம்பும்) வெள்ளை இனவாதிகள் இன்னும் கொஞ்சம் ஸீரியஸாய் எடுத்துகொள்ளலாம். இப்படி ஒரு வெள்ளைகாரர் இந்த அறிவியல் விவகாரங்களை பிரம்மா, விஷ்ணு, சிவா என்றே பெயர்போட்டு அழைக்கலாம் (அழைத்திருக்கிறார்!). அப்பறம் இதை வைத்து (இன்னும் விஷயம் பரவலாய் வெளி தெரியவில்லை) ஆயிரம் இந்த்துதவ இணைய பக்கங்களும். நீலகண்டனும் quantum stochastic calculus இந்திய தத்துவத்தால் அடைந்த பயனை சொல்லி ஜல்லியடிக்கலாம்.

இதுபோல ஷ்ரோடிஞ்ஞர் ஏதாவது சொல்லியிருக்கலாம். இன்னும் எத்தனையோ வேறு துறையில் ஜீனியஸாக இருப்பவர்கள் மற்ற விஷயங்களில் ஒளரியிருக்கலாம். (இப்படி நான் மட்டும் சொல்லமாட்டேன், நீலகண்டனுக்கே அப்படி சொல்லும் தேவை இருக்கிறது.) இப்படி இருக்கும் பல விஷயங்களில் நீலகண்டன் போல தேர்ந்தெடுத்து (ஸெலக்டிவாக) இங்கே முன்வைப்பதில் யாருக்கு என்ன லாபம் ? நமது முரளி மனோகர் ஜோஷியை பாருங்கள். `வேதத்திலும், உபனிஷத்துகளிலும் ஏற்கனவே சொல்லியுள்ள விஷயங்களைத்தான் இன்று விஞ்ஞானிகள் மறுகண்டுபிடிப்பு செய்கிறார்கள் ‘ என்று பல விஞ்ஞானிகளை மேடையில் வைத்துகொண்டே சொல்கிறார். எந்த விஞ்ஞானியும் அதற்க்கு மறுப்பு சொல்லவில்லை (அஷோக் ஸென் என்ற string theory மேதைக்கு, fellow of Royal society கிடைத்ததற்க்கு நடந்த பாராட்டு கூட்டத்தில் இது நடந்தது). இதனால் ஜோஷி சொன்னதை அவர்கள் ஒப்புகொண்டதாகவும் ஆகாது. ஒருவேளை ஒப்புகொண்டால் கூட அது உண்மையாக முடியாது. நீலகண்டன் குறிப்பிடும் விஷயங்களும் இப்படித்தான்.

அப்பறம் அந்த ஹாரிஸன் அங்கிளை போட்டு பதிவுகள் விவாதகளத்தில் கிழித்திருந்தேனே பார்தீரா ? இதெல்லாம் மட்டையடி இல்லை, கண்டாரோ ? பதிவுகளில் எழுதியதை கீழே கொஞ்சம் எடிட் செய்து, சில விஷயங்களை சேர்த்து கீழே தருகிறேன்.

quantum mechanics குறித்து அறிஞர் நீலகண்டன் கொஞ்சம் உருப்படியான கட்டுரைகளை திண்ணையில் எழுதிவருகிறார். ஒன்றும் மோசமான விஷயம்மல்லதான். RSSகாரர் இந்தியாவின் அறிவியல் அறிவு விருத்தியாக நினைத்தால் அதில் என்ன தவறு. இணையத்தில் கிடைக்கும் பல கட்டுரைகளின் அடிப்படையில் நீலக்ண்டன் எழுதியிருக்கிறார். பல இடங்களில் நேரடி மொழிபெயர்ப்பும் ஆகியிருக்கிறது. இதிலும் குற்றம் சொல்ல எதுவும் இல்லைதான். ஆனால் சந்தடி சாக்கில் quantum mechanicsற்க்கும் ‘இந்திய ததுவத்திற்க்கும் ‘ முடிச்சு போடுகிறார். முடிச்சுபோட மொட்டையாய் டேவிட் ஹாரிஸன் என்று ஒரு ‘இயற்பியலாளரை ‘ இதற்க்கு சான்றாய் தருகிறார். நீலகண்டன் எழுதியது கீழே,

‘பலவிதங்களில் பிரபஞ்ச தரிசனத்தில் சாங்கியமும் பெளத்தமும் கொண்டிருந்த வேறுபாட்டினையும் இது குறித்து ஐந்தாம் நூற்றாண்டில் பாரதத்தில் நடந்த வாதங்களையும், ஸ்க்ராட்டிஞ்சரின் க்வாண்டம் இயற்பியல் மறுப்பும், ஹெய்ஸன்பர்க்கின் க்வாண்டம் வாதங்களும் மிகவும் ஒத்திருந்ததாக கூறுகிறார் இயற்பியலாளர் டேவிட் ஹாரிஸன். ‘

படிப்பவருக்கு இந்த ஹாரிசன் அங்கிள் quantum physics இல் பல சாசசங்கள் புரிந்ததுடன், quantum physics இந்திய தத்துவம் இதை எல்லாம் ஒப்பிட்டு, ஒரு தீஸீஸ் முடிவாக புத்தகம் எழுதி இப்படி வந்தடைந்ததாக தோன்றும். (நீலகண்டனின் கட்டுரையில் இவருடய சில வாக்கியங்களும் நேரடி மொழிபரப்பு ஆகியிருக்கிறது. ) இந்த டேவிட் ஹாரிசனை ஒரு இயற்பியல்வாதி என்று சொன்னதால் இவருடைய ஆய்வுதாள்களை தேடி quantum mechanicsற்கான உலகின் மிக பெரிய ஆர்கைவிற்க்கு சென்று ( நீலகண்டன் கவனிக்கனும், இங்கே இல்லையெனின் அன்னார் கடந்த 10வருடங்களில் எதையும் உருவாக்கியிருக்கும் சாத்தியம் குறைவு, http://xxx.lanl.gov/archive/quant-ph ) அன்னாரின் பெயரை போட்டு தேடினேன். மொத்தம் கிடைத்த அன்னாரின் ஆய்வுதாள்களின் எண்ணிக்கை பூஜ்யம். சரி, வேறு துறையில் இருப்பாரோவென்று மொத்த பிஸிக்ஸில் தேடினேன், அங்கேயும் அன்னாரின் ஆய்வுதாள்கள் பூஜ்யம். ஒரு வழியாய் இந்த ஹாரிஸனை இணையத்தில் கண்டுபிடித்தேன். (ஆசாமி குறித்து நீலகண்டன் அதிகவிவரம் தத்திருக்கலாமே!) டோரண்டோ பலகலைகழகத்தில் வேலைபார்கிறார். குவாண்டம் பிஸிக்க்ஸிற்க்கு இவர் சொந்தமாய் பங்களிப்பு எதுவும் செய்யாவிட்டாலும், அது குறித்தும், இன்னும் பொதுவாக இயற்பியல் குரித்தும், அதற்கு அடிப்படியான கணிதம் குறித்தும் நல்லதொரு புரிதல் இருக்கும் என்றுதானே நினைக்கதோன்றும். குவண்டம் இயற்பியல், மற்றும் இந்திய தத்துவம் குறித்த அவரது ‘ஆரய்ச்சிமுடிவுகள் ‘ இங்கே இருக்கிறது. http://www.upscale.utoronto.ca/GeneralInterest/Harrison/DevelQM/DevelQM.html படித்ததும் சிலிர்த்து போய்விட்டேன். (ஜெயமோகனின் ஃபேவரைட் ஷெர்பாட்ஸ்கியும் வருகிறார்.)

நீலகண்டன் ஹாரிசனை மேற்கோள்கட்டும் விஷயத்தை ‘Comparing the Two Forms of Quantum Mechanics ‘ என்ற தலைப்பின் கீழ் எழுதியிருக்கிறார். (இப்படி மொட்டையாய் சொல்ல எதற்க்கு ஒரு வெள்ளைக்கார ஹாரிசன், ரஜினிகாந்த் ஒரு பட வசனத்தில் சொன்னால்கூட போதுமே!) நீலகண்டன் ‘பகடியாடும் சடையோன்… ‘ என்று எழுதிய (அது யார்பாட்டு என்று கூட சொல்லகூடாதா ஸார்!) பாட்டுக்கும், குவாண்டம் இயற்பிஅயலுக்கும் என்ன தொடர்பு உண்டோ, அந்த அளவிற்க்குதான் ஹார்ஸன் முனவைக்கும் ‘பெளத்த, ஸங்கிய ‘ விவாதத்திற்க்கும், எய்ன்ஸ்டான்-ஷ்ரோடிஞ்ஞர் விஷயத்திற்க்கும் இருக்கிறது. இப்படி பொத்தாம் பொதுவாக எதை வேண்டுமானலும் தொடர்பு படுத்தி பேசலாம். (அது தவிர ஹாரிசன் அல்லது ஷெர்பாட்ஸ்கி அளிக்கும் சில வாக்கியங்கள் குறித்து எனக்கு மிகுந்த சந்தேகங்கள் உள்ளன, இதற்கான காரணம் சில கலை சொற்கள் அந்த காலத்தில் இருந்திருக்க வாய்பில்லை என்பதுதான். இந்துத்வவாதிகளுக்கு சான்றிதழ் அளிக்கவெனவே சில வெள்ளைகாரர்கள் உண்டு, ஹாரிசன் அதில் ஒருவராவென தெரியவில்லை, இயற்கை மொழி என்று அவர் தரும் ஒளாரல் இததகைய சந்தேகத்தை கிளப்புகிறது.)

இந்திய தத்துவத்தையும், குவாண்டத்தையும் சேர்த்து உளரிகோட்டியது ஒரு பக்கம் இருக்கட்டும்.அன்னாரின் கோட்பாட்டு அறிவை விளக்க ஒரு எடுத்துகாட்டு. இலக்கியம், பலவகை வாசிப்புகள் குறித்து அவர் வைத்திருக்கும் ஒளரலை விட்டு விட்டு, அவருக்கு தெரிந்தே இருக்க வேண்டிய கணிதம் பற்றிய அவரின் உளரலை தருகிறேன். ‘Discussion ‘ என்ற தலைப்பில் இது வருகிறது. (விவரமறிந்தவர்கள் நேரடியாக முழுமையாக படித்து அனுவவிக்கலாம், அவரின் எல்லா உளரலையும் தருவது அதிக நேரமெடுப்பதால், உச்சகட்ட உளரலான இதை மட்டும் எடுத்துகோள்கிறேன்). இந்த ஒரு தலைப்பின் கீழ் அவர் தரும் வரிக்கு வரி உளரலை முழுவதும் ஆராய்வது எனது சக்தியை மீறிய விஷயம். இங்கே குவாண்டம் மெகானிக்ஸ் குறித்த ஒரே போன்ற இரு கோட்பாட்டு உருவாக்கங்கள் எப்படி தீவிரமாய் வேறுபடுவது மட்டும்மில்லாமல், அதனுள் மிகுந்த உணர்ச்சியும், அழகியலும் நிறைந்திருப்பதாக ‘விளக்குகிறார் ‘. இதற்க்கான காரணம் என்னவென்றால் இதன் பிரச்சனை இயற்கைய்யான மொழிக்கு இருக்கும் பல வகை வாசிப்புதானாம் (அப்படி போடு அறுவாளை, நீலகண்டன் சமஸ்கிருதம் செயற்க்கை மொழி என்று ரீல் விடுகிறார், இங்கே ஹாரிசன் ஒரே போடாய் கணிதத்தையே இயற்க்கையான மொழி என்கிறார்.) ஹாரிசனின் உளரலை அப்படியே ஆங்கிலத்தில் கீழே வைக்கிறேன். For example, consider the simple statement: The plant is complete. What is it that is complete ? It could be a vegetable. It could be the act of fixing something in place. Or it could be a factory. In the usual case the meaning of a simple phrase like this is given by its context.

இது ஒரு இலக்கியபிரதிக்கு இருக்கும் பலவகை வாசிப்புகள் குறித்த இவரது உளரல். இது பரவயில்லை, ஆனால் கணிதம் குறித்தும், இயற்பியல் குறித்தும் வைக்கும் உளரல் கீழே.

Similarly, in mathematics one often puts a dot over a character: வ. The meaning of the dot is ambiguous. It could mean we are referring to a unit of length called the Angstrom. It could mean that we are referring to the derivative of the variable A with respect to time. It could mean other things as well.

Thus, it is fair to argue that mathematics, the language of Physics, is a natural language with all of the levels of multiple meaning and ambiguity of other such languages. In this view, then, the strong positions of Heisenberg and Schrய்dinger on the worldview of Quantum Mechanics is similar to an argument between two scholars of literary criticism on the meaning of a T.S. Eliot poem.

அய்யகோ, ஆறு வரிகளில் எத்தனை உளரல்கள்! சோகலின் ஏமாற்றுகட்டுரையையும் (பார்கவும் ரவியின் காலச்சுவடு குறித்த கட்டுரை, அல்லது பதிவுகள் விவாதகளத்தில் ‘பலதும் பத்தும் ‘ )மிஞ்சிவிட்டது. (சோகலைன் கட்டுரையை படித்தால், அதில் அவர் கடைசியில் வேண்டுமென்றெ முன்வைக்கும் கணிதம் குறித்த உளரல் இதனுடன் ஒப்பு நோக்கதக்கது. ஆனால் ஹாரிசன் மாமா ஸோக்கலையும் மிஞ்சிவிட்டார் அத்தோடு இவ்வளவு ஸீரியஸாக ஒரே நேரத்தில் குவாண்டம் மெகானிக்ஸ், இலக்கியம், வாசிப்பு, இயற்க்கை மொழி என்று எல்லாவற்றையும் குறித்து உளரமுடியும்!)

நீலகண்டன் விரும்பினாலும், இல்லை ஷ்ரோடிஞ்ஞர் விரும்பினாலும் சமஸ்கிருதம் மற்ற மொழிகளை போல இடுகுறித்தன்மையுடைய ஒரு மொழிதான். கொஞ்சமாவது மொழியியல் குறித்து அறிந்த யாரும், ஸஸூர் சொன்னதை காத்துவாக்கில் கேட்ட யாரும் இப்படி உளரமாட்டார்கள். இங்கே இடுகுறித்தன்மை என்பது வாசிப்பவர் தனது அறியாமை காரணமாக தவறாக வாசிப்பது குறித்தது அல்ல. எனக்கு அரபு மொழி அரைகுறையாய் தெரியும், அதனால் ஏதேனும் ஒரு அரபுமொழிவாக்கியத்திற்க்கு என்னால் அறநூறு வாசிப்புகளை தப்புதப்பாய் வைக்கமுடியும் என்று சொலவது போன்றது அல்ல இது. உலகில் உள்ள எந்த மொழியாயினும்(சமஸ்கிருதம் உட்பட), அதன் ஒரு வார்தையால் ambiguity இல்லாமல் எந்த பொருளையும் உணர்த்தமுடியாது. அவ்வாறு செய்ய இயலும் ஒரே மொழியின் பெயர் கணிதம். லாஜிக் என்பதற்கான, லாஜிக் என்பது முழுமையாய் செயல்படகூடிய ஒரே மொழி கணிதம். இந்த ஹாரிஸன் என்ற அரைலூஸு விவரம் அறியாமல் A மேல் புள்ளி வைத்ததை கண்டமாதிரி அர்தம் செய்துகொண்டால், அதனால் மேதமேடிக்ஸ் `இயற்கை மொழி ‘யாகிவிடாது. அதற்கு அர்தம் பல வகை வாசிப்பு அல்ல, முட்டாளாக, மண்டுவாக இருப்பது. ஹாரிசன் அங்கிள் அத்தோடு நிற்கவில்லை, இப்படி ஒரு ஒளரல் வாதத்தை முன்வைத்து, அதன் மூலம் எய்ன்ஸ்டான், ஷ்ரோடிஞ்சர் நிலைபாடுகள், T. S. எலியட்டின் கவிதைக்கு இருக்கும் இரண்டுவகை இலக்கிய விமர்சனம் போன்றதாம். இதே மாதிரி உளரல்வகையில்தான் இந்திய தத்துவத்திற்க்கும், குவாண்டத்திற்க்கும் ஒரு முடிச்சு.

கணிதத்தின் மொழி என்று நான் இங்கு சொல்வது, அதில் பயன்படுத்தப்டும் ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழியை அல்ல. லாஜிக், சில அடிப்படை axiomsஆல் கட்டப்படும் அதன் மொழியை குறிப்பிடுகிறேன். அதை அரபு மொழியில் எழுதினாலும், ஜப்பானிய மொழியில் எழுதினாலும் கணித மொழி ஒன்றுதான். சமஸ்கிருதமோ அல்லது எந்த மொழியும் இதற்க்கு புதிய பயன்பாட்டை உருவாக்க சாத்தியம் எதுவுமில்லை. artificial intelligenceற்க்கு தேவை இந்த கணிதமொழியை அடிப்படியில் உருவாக்கபட்டதே அல்லாமல்(அது எந்த மொழியில் இருந்தாலும் பிரச்சனையில்லை) புதிதாய் சமஸ்கிருதம் வந்து இங்கே சாதிக்க எதுவும் இல்லை.

ஹாரிசன் அங்கிள் இப்படி கணிதத்தை பற்றியும், அதன் தொடர்சியாய் குவாண்டம் இயற்பியல் குறித்தும் ஒளரி கொட்டி மாட்டி கொண்டதற்க்கு நன்றி சொல்ல வேந்தும். இவர் இயற்ப்பியல் இன்னும் குறிப்பாக கணிதத்துடன் தொடர்புள்ள QUANTUM TELEPORTATION போன்றவற்றை சொல்லிதருவதாக தெரிகிறது. பாவம், மாணவர்கள் இப்படி இருக்க பொத்தம் பொதுவாய் நீலகண்டன் இவரை மேற்கோள்கட்டி இந்திய தத்துவத்திற்க்கும், குவாண்டம் இயற்பிலுக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு தோற்றத்தை தருகிறார். பல விஷயங்கள் தள்ளிபோட்டு விட்டுபோவதால் இங்கே கிடைத்த வாய்ப்பில் இதை எழுதுகிறேன். சரி, நீலகண்டன் ஸார் அடுததமுறை மொட்டையாய் ஜல்லியடிக்கும் முன் கொஞ்சம் ஜாக்கரதியாய் இருங்கோ, (ஜல்லியடிப்பதை நிருத்தமாட்டார்கள் என்று தெரியும், வேதிக்மேதமேடிக்ஸ் பற்றி எவ்வளவு கிழித்தாலும் தொஇடர்ந்து ஜல்லியடிப்பதில்லையா! ) முடிஞ்சா அந்த P. ராமனுஜத்தின் கட்டுரை, அல்லது முகவரி. நன்றி.

பி.கு. 1. ஜப்பானிய மொழி ஒரளவு படிததில், ambiguty அதிகத்துடன் விஷய்ங்களை சொல்லகூடியதாய், குறைந்த பட்சம் இரண்டு வாசிப்புடன் காஞ்சியில் எழுதமுடிவதாய், இலக்கியம் செய்ய உகந்த ஒரு மொழியாய் தெரிகிறது. அத்தோடு இதற்க்கும் தமிழுக்கும் உள்ள பல ஒற்றுமைகள் (அதற்க்கான காரணங்கள் புரியாவிட்டாலும்) வியக்க வைக்கிறது.

2. சங்கரபாண்டி திருமாவளவனின் கட்டுரையை தட்டச்சு செய்தது ஒரு நல்லக்காரியம். அடுத்த இதழிலேயே அறிஞர் பெருமக்கள் வெகுண்டெழுந்து எதிர்வினை செய்வர், மஞ்சுளா மாமி ஆத்திரபட்டு ஒரு கட்டுரை கூட வரையலாம். சங்கரபாண்டி இது போன்ற வொயிட் மெயில்களுக்கு பயப்படாமல் தொடர்ந்து பணியாற்றவேண்டும்.

———————- rksvasanth@yahoo.com

(சில வார்த்தைகள் நீக்கப் பட்டுள்ளன – திண்ணை குழு)

டேவிட் ஹாரிசன் வலைப் பக்கம் :

http://www.upscale.utoronto.ca/GeneralInterest/Harrison/DevelQM/DevelQM.html

Series Navigation

ரோஸா வசந்த்

ரோஸா வசந்த்