சிறுவரை பள்ளிக்கு அனுப்புவோம்

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

தியாகு


எட்டு வயதிலே -நீ
இலையெடுக்க வந்தியா
பள்ளிக்கு போலைய
படிப்புத்தான் வரலையா?

இலையெடுக்க நீ வந்தால்
சோறுதான்எடுக்குமோ -தம்பி நீ
மேசையை துடைக்கையில்
தேச மானந்தான் போகுதடா!

பிழைக்கத்தான் வேலையா
பிழைப்பே வேலையா
படித்து விட்டு போகாமல் நேரா
வேலைக்கே போனயா?

கல்லிலுள்ள கடவுள்
கடைப்பக்கம் வருவாரா -கண்ணா உன்
கஸ்டத்தை பார்த்து
கண்ணீர் விடுவாரா
கர்ம விதியா
இதுகாசின் சதியா?

அன்புடன்
தியாகு
———————–
seewtypie2000@gmail.com

Series Navigation

தியாகு

தியாகு